Aashish Aryan
தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் வெள்ளிக்கிழமை மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டை தடைசெய்யும் அவசரச் சட்டம் ஒன்றை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதமும் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டம் என்றால் என்ன?
சமூக அடிப்படையிலான விளையாட்டுகளின் ஆரம்ப கால விளையாட்டு அரங்குகள் ஆகும். அவை 1990களின் முற்பகுதியில் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் மிகவும் பிரபலமாக இருந்தன. இந்த அரங்குகளுக்கு விளையாடுபவர் சில சிப்களுடன் விளையாட்டு நேரத்தை வாங்க வேண்டும். அரங்குகளில் இருந்து விளையாட்டுகள் திரைகளில் காட்டப்படும் விளையாட்டுகளாகவும் பின்னர் தனிப்பட்ட கணினிகளுக்கும் மாறிச் சென்றன.
இணையத்தின் கண்டுபிடிப்பு மற்றும் தனிப்பட்ட கணினிகள் இணைப்பு ஆகியவற்றின் வருகையால் இந்த பலபேர் விளையாடும் விளையாட்டுகள் உள்ளூர் பகுதி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி விளையாட்டு நிகழ்வுகளைத் தொடங்குவது நடந்தது.
மலிவான கட்டணத்தில் இணைய வசதியின் வருகையுடன், ஆர்கேட் அடிப்படையிலான மல்டிபிளேயர் விளையாட்டுகள் அனைத்தும் ஆன்லைனுக்கு நகர்ந்தன. இந்த நாட்களில், கேமிங் நிறுவனம் வழங்கும் மைய சேவையகத்துடன் பயனர் தங்கள் சாதனத்தை இணைக்கும்போது கிட்டத்தட்ட எல்லா கேம்களும் ஆன்லைனில் விளையாடப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை இலவசம் மற்றும் பொழுதுபோக்குக்காக மட்டுமே என்று இருந்தன.
டிஃபென்ஸ் ஆஃப் தி ஏன்சியண்ட்ஸ் அல்லது டோட்டா, வீரர்கள் அறியாத போர்க்களம் அல்லது பப்ஜி, கவுண்ட்டர் ஸ்டிரைக் (சிஎஸ்) போன்ற பலபேர் விளையாடும் விளையாட்டுகள் பெரும்பாலான பயனர்களுக்கு இலவசம் என்றாலும், வீரரின் அவரதாரத்தில் ஆயுதங்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை வாங்குவதற்கான விருப்பத்தை அளிக்கிறது. ரம்மி, பிளாக் ஜாக் மற்றும் போக்கர் போன்ற பிற சீட்டாட்டங்களில் நுழைவதற்கும் உலகெங்கிலும் உள்ள மற்ற வீரர்களுடன் விளையாடுவதற்கும் பயனர் சிறிது பணம் முதலீடு செய்ய வேண்டும்.
தமிழகம் ஏன் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது?
ஆன்லைன் விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டத்தில் ஆளுநர் கூறுகையில், ஆன்லைன் விளையாட்டு காரணமாக, அப்பாவி மக்கள், முக்கியமாக இளைஞர்கள் ஏமாற்றப்படுவதாகவும், சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார். “இதுபோன்ற தற்கொலை சம்பவங்களைத் தவிர்ப்பதற்கும், ஆன்லைன் கேமிங்கின் தீமைகளிலிருந்து அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கும்” ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
கணினிகள் அல்லது வேறு எந்த தகவல்தொடர்பு சாதனங்கள், பொதுவான விளையாட்டு அரங்குகளைப் பயன்படுத்தி விளையாட்டில் வெற்றி பெறுதல் அல்லது பரிசுத் தொகையை விநியோகிக்க எந்தவொரு மின்னணு நிதி பரிமாற்றம் செய்ய சைபர்ஸ்பேஸில் பந்தயம் நடத்த அல்லது பந்தயம் கட்ட தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாநிலத்தில் விளையாடுபவர்கள் அவர்கள் விளையாடும் விளையாட்டுகளுக்கு எந்த கூடுதல் சேர்க்கையையும் வாங்கவோ, விளையாட்டு அரங்குகளுக்கு செல்லவோ அல்லது ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவோ முடியாது. கவுண்டர்-ஸ்ட்ரைக் போன்ற பலபேர் விளையாடும் விளையாட்டுகள் வாராந்திர போட்டிகளில் ரூ .10,000 வரை வாங்குகின்றன.
ஆன்லைன் விளையாட்டுகள் எனபது முழுவதும் அதிர்ஷ்டத்தை பொறுத்தது அல்லது திறமையைப் பொறுத்தது என்பது குறித்து சில விவாதங்கள் நடந்தாலும், இதில் பணத்தின் வருகை மேலும் சிக்கலான விஷயங்களைக் கொண்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டத்தின் பெரும்பாலான விரோதிகள் எந்த விதிமுறைகளும் இல்லாததால், பெரும்பாலான விளையாடுபவர்கள், இந்த விளையாட்டுகளில் வாங்குவதற்கு நிறைய பணம் செலவழிக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.
இந்த விளையாட்டுகளை குழந்தைகளில் எல்லா வயதினரும் விளையாடுவதால், இந்த ஆட்-ஆன் சிறப்பம்சங்களை வாங்க பணம் இல்லாதது அவர்களை பல்வேறு வகையான அழுத்தத்துக்கும் விரும்பத்தகாத சூழ்நிலைகளுக்கும் இட்டுச் செல்கிறது என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை தடைசெய்த பிற மாநிலங்கள் யாவை?
ஒரு விளையாட்டாக சூதாட்டம் மற்றும் பந்தயம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அசாம், அருணாச்சல பிரதேசம், கோவா, கேரளா, மகாராஷ்டிரா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற கிட்டத்தட்ட 10 மாநிலங்கள் தங்கள் லாட்டரி முறைகளைக் கொண்டுள்ளன. இந்த லாட்டரிகள் அச்சிடப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் விநியோகிக்கப்படும் பரிசுத் தொகை ஆகியவற்றில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன.
இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டம் அல்லது ஆன்லைன் பந்தயத்தை எதிர்க்கின்றன. ஏனெனில், வீரர்களின் எண்ணிக்கையையும் விளையாட்டில் செய்யக்கூடிய முதலீட்டையும் கட்டுப்படுத்த மிகக் குறைந்த விதிமுறைகள் உள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளையும் சூதாட்டத்தையும் தடை செய்வதன் மூலம், தமிழகம் அதன் அண்டை நாடுகளான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சில வகையான ஆன்லைன் விளையாட்டுகளையும் சூதாட்டத்தையும் தடை செய்வதில் இணைந்தது. மறுபுறம் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவும் ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் கேமிங்கை தடைசெய்ய ஒரு சட்டத்தை முன்வைத்து வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”