மும்பை மாநகரத்திற்கு நடுவே காட்டினை உருவாக்க ஏன் விரும்புகிறார் உத்தவ் தாக்கரே?

எஃப்எஸ்ஓ இந்த செயல்முறையைத் தொடங்கிய 45 நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் மற்றும் பிறரிடமிருந்து பரிந்துரைகளையும் ஆட்சேபனைகளையும் பெறுவார்.

Why has Uddhav Thackeray decided to create a reserved forest in the middle of Mumbai?

ZEESHAN SHAIKH

Why has Uddhav Thackeray decided to create a reserved forest in the middle of Mumbai? : மகாராஷ்ட்ர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே செப்டம்பர் 1ம் தேதி, 600 ஏக்கர் பரப்பளவுள்ள, மும்பையின் மையப்பகுதியில் அமைந்துக்கும் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவித்தார்.

இந்த நிலம் எங்கே உள்ளது?

அரேய் மில்க் காலனி மொத்தமாக 3,162 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. 1949ம் ஆண்டு மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் இருப்பவர்களுக்கான பால் விநியோகத்திற்காக இப்பகுதி உருவாக்கப்பட்டது. கடந்த 70 வருடங்களில் இதன் சுற்றுப்புற பகுதியில் அமைந்திருக்கும் காடுகள் எல்லாம் வெட்டப்பட்டது. 1282 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஃபில்ம் சிட்டியாக அறிவித்தது. மும்பையின் எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால் அதன் மேற்கு எல்லையோர பகுதி புறநகர் பகுதியாக உருப்பெற்று வருகிறது. 1800 ஏக்கர் மட்டுமே தற்போது பசுமையாக இருக்கிறது. அவற்றில் 290க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழந்து வருகின்றன.

நில ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி வருகிறது?

இந்த நிலம் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது. அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடிகள் 27 பழங்குடி கிராமங்களில் வசித்து வருகின்றனர். மாநகர உருவாக்கமாக மும்பை தொடர்ந்து மாறி வருகின்ற நிலையில் மெட்ரோ போன்ற திட்டங்களும் உருவாகி வருகிறது. நகரம் மற்றும் போக்குவரத்து திட்டம் தயாரிப்பவர்கள் இந்த நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாமே என்று கோரிக்கை வைத்தனர்.

கொலபா – பந்த்ரா- சீப்ஸ் மெட்ரோ காரிடர்களுக்கு கீழே ரூ. 32 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ கார் ஷெட் அமைக்க விருப்பம் தெரிவித்த அக்டோபர் மாதத்தில் இருந்து அரே பெரும் போராட்ட களமாக மாரியுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.

சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு சிவசேனாவின் யுவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே இந்த விவகாரத்தை கையில் எடுத்து கொண்டு போராட்டங்கள் நடத்தினார். உத்தவ் தாக்கரே முதல்வரான பிறகு கார் ஷெட் அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்தார். 1800 ஏக்கர் திறந்த நிலப்பரப்பு இருந்த போதும் 600 ஏக்கர் நிலம் மட்டும் பாதுகாக்கப்பட்ட காடாக குறிப்பிடப்பட்டு 1ம் தேதி முதல்வர் அறிவித்தார். ஆனால் இந்த 600 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் கார் ஷெட் திட்டத்திற்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இடம் வரவில்லை.

நிலத்தை காடாக ஒதுக்குவதற்கான செயல்முறை என்ன?

இந்திய வனச் சட்டம், 1927 இன் பிரிவு 4 இன் கீழ், மாநில அரசு அதிகாரப்பூர்வ ஒரு அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் “எந்தவொரு நிலத்தையும் பாதுகாக்கப்பட்ட காடாக மாற்ற முடியும்”, “ அத்தகைய நிலத்தின் நிலைமை மற்றும் வரம்புகளை கிட்டத்தட்ட முடிந்தவரை குறிப்பிடுகிறது ”.

இந்த சட்டத்தின் கீழ், அரசாங்கம் ஒரு வன தீர்வு அதிகாரியை (எஃப்.எஸ்.ஓ) நியமிக்க வேண்டும் “நில வரம்புகளுக்குள் விசாரனை செய்ய அங்கு இருப்பு, இயற்கை, அந்த நிலத்தின் மீது எந்த ஒரு நபருக்கும் ஆதரவாக இருக்கும் உரிமைகள் குறித்து விசாரிக்கவும், அந்த எல்லைக்குள் மற்ற நிலத்தின் அளவை கண்டறியவும், காட்டின் விளைப்பொருட்கள் குறித்தும்” அவ்வர் ஆராய்வார்.

எஃப்எஸ்ஓ இந்த செயல்முறையைத் தொடங்கிய 45 நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் மற்றும் பிறரிடமிருந்து பரிந்துரைகளையும் ஆட்சேபனைகளையும் பெறுவார். பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, நிலத்தை ஒதுக்கப்பட்ட வனமாக மாற்றும் செயல்முறை முடிவடையும். அதன்பிறகு, இங்கு எந்த ஒரு கட்டுமானமும் வராது.

இந்த நிலையில் ஆரேயின் ஒரு பகுதியை பாதுகாக்கப்பட்ட காடாக அறிவிக்க ஏன் அரசு முடிவு செய்தது? 

இந்த ஆரே நிலத்தில் மெட்ரோ கார் ஷெட் கட்டுமானத்திற்கு  எதிராக போராட்டங்கள் நடத்தி தன்னை ஒரு சூழலியல் ஆர்வலராக சித்தரித்தது சிவசேனா.

மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்ற பிறகு அந்த கட்டுமானத்திற்கு தடை விதித்தார்.  மேலும் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். அந்த நான்கு பேர் கொண்ட குழு இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று ஜனவரியில் பரிந்துரை செய்தது.  மேலும் அந்த கமிட்டி இந்தக் திட்டத்திற்கு மாற்று ஏதுமில்லை என்றும் சுட்டிக்காட்டியது.

ஆனால் மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டுமென்று தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தினார்.  அதனை தொடர்ந்து கடந்த வாரம் மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.  புதிய மாற்றுவழி என்பது நிறைய செலவுகளுக்கும் தாமதங்களும் வழிவகுக்கும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறப்பட்டது.

இதற்கு மாற்றாக திட்டங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கின்ற நிலையில் ஆரேயின் ஒரு பகுதியை காடாக அறிவிக்கும் முடிவினை வெளியிட்டார்.  இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பும் தாக்குதல்களில் இருந்து ஒரு பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்பினார்.

அது தொடர்ந்து, எந்த பிரச்சனையும் இன்றி மும்பையில் மெட்ரோ கொட்டகை அமைக்கவும் வழிவகுக்கும்.  மும்பை மாநகராட்சியின் தேர்தல்கள் நடைபெற இன்னும் 18 மாதங்களுக்குள் குறைவாகவே உள்ளன என்பதையும் நாம் இதோடு கவனத்தில் கொள்ள வேண்டும்.  மும்பை வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிவசேனா கூற விரும்புகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why has uddhav thackeray decided to create a reserved forest in the middle of mumbai

Next Story
ஃபனி புயல் : ஒரு சுவாரசிய பார்வை… ஏப்ரல் – மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?Chennai Today Weather NEM latest updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com