சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் ஏன் வெளி, உள் முற்றத்தில் உரிமை கோரினர்?

1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு எந்த தடையும் இருக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது இடம்தான் என்பதை இஸ்லாமிய அமைப்புகளால் நிரூபிக்க இயலவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்து சாட்சிகளின் கூற்றுப்படி, மசூதிக்குள் வைக்கப்பட்டுள்ள கசவ்தி கண் தூண்களை இந்துக்கள் பிரார்த்தனை செய்வதாக கூறப்பட்டுள்ளது. “முஸ்லீம் சாட்சிகள் மசூதிக்கு உள்ளேயும் வெளியேயும் இந்து மத முக்கியத்துவத்தின் அடையாளங்கள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


முக்கியமாக, மூன்று குவிமாட வழி கட்டமைப்பிற்குள் நுழைவது என்பது “இந்து பக்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வெளி முற்றத்தின் கிழக்கு மற்றும் வடக்குப் பக்கங்களில் உள்ள இரண்டு கதவுகள் வழி மட்டுமே சாத்தியமானது” என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது.

மேலும் படிக்க – அயோத்தி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் : ராமர் கோவில் கட்டலாம்… இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம்!

சம வாய்ப்புகளின் அடிப்படையில், “1857ல் வெளிப்புற முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த கிரில்-செங்கல் சுவரில் இந்துக்கள் வழிபாடு தடையின்றி தொடர்ந்தது என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அயோத்தி தீர்ப்பு: முழு விவரத்தையும் எழுத்து வடிவில் ஆங்கிலத்தில் படிக்க

“வெளிப்புற முற்றத்தை அவர்கள் வைத்திருப்பது, அதன் மீதான கட்டுப்பாட்டை இணைக்கும் சம்பவங்களுடன் சேர்ந்து நிறுவப்பட்டுள்ளது,” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் படிக்க – அயோத்தி வழக்கில் இஸ்லாமியர்களின் வாதம் நிராகரிக்கப்பட்டது ஏன்?

உள் முற்றத்தில், “1857 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் Oudh பகுதி இணைக்கப்படுவதற்கு முன்னர் இந்துக்களால் வழிபாடு செய்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன

பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேதியிலிருந்து 1857 ககு முன்னர் முஸ்லிம்கள் உள் கட்டமைப்பை பிரத்தியேகமாக வைத்திருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் வழங்கவில்லை.” என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close