பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடந்த மாதம், யூடியூப் பயனர்களுடனான உரையாடலில் பல சிக்கல்களைப் பற்றி விவாதித்தார். அதில் ஒன்று 2014-ம் ஆண்டு பிரபலமான துருக்கிய தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பான ‘டிரிலிக்: எர்டுருல்’ டிராமா ஆகும். இது தற்போது நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த ஹிட் தொலைக்காட்சி நாடகம் பி.டி.வி சேனலில் இம்ரான் கானின் வேண்டுகோளின்படி உருது மொழியில் ரம்ஜான் முதல் நாளிலிருந்து ஒளிபரப்பப்படுகிறது.
துருக்கிய வரலாற்று நாடகங்களில் இம்ரான் கானுக்கு குறிப்பிடும்படியான ஒரு விருப்பம் இருப்பதாகத் தெரிகிறது. யூடியூப் பயனர்களுடனான இம்ரான் கானின் உரையாடல் ஒளிபரப்பப்பட்ட சில நாட்களில், பாகிஸ்தான் அரசியல்வாதி பைசல் ஜாவேத் கான், மற்றொரு வரலாற்று நாடகமான ‘யூனுஸ் எம்ரே: அக்கான் யோல்குலு’ பாகிஸ்தானில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று பிரதமர் விரும்பினார் என்று மே 4 -ம் தேதி டுவிட் செய்துள்ளார்.
இது எதைப் பற்றியது?
துருக்கியைப் பற்றிய இம்ரான் கானின் அபிமானம் இரகசியமானதில்லை. கடந்த காலங்களில், அவர் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தனது அரசியல் நாயகர்களில் ஒருவர் என்று அழைத்தார். துருக்கியும் தனது பங்கிற்கு பாகிஸ்தானுக்கு ஒரு முக்கியமான நட்பு நாடாக இருந்து வருகிறது. காஷ்மீர் போன்ற முக்கிய பிரச்சினைகளில் அதை ஆதரிக்கிறது. துருக்கியின் பொருளாதார வளர்ச்சி மாதிரியைப் பாராட்டும் இம்ரான் கான் அது தனது தலைமையின் கீழ் பாகிஸ்தானில் பிரதிபலிப்பதைக் காணலாம் என்று நம்புகிறார். இம்ரான் கான் தனது பேச்சில், துருக்கிய வரலாற்று தொலைக்காட்சி நாடகங்களையும் போற்றுகிறார். அதோடு, இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தானின் குடிமக்களை பகிரங்கமாக வலியுறுத்தி வருகிறார்.
பாப்-கலாச்சார விஷயங்கள் ஹாலிவுட்டில் தொடங்கி பாலிவுட்டுக்குச் சென்று பின்னர் பாகிஸ்தானை அடைகிறது என்று இம்ரான் கான் கூறினார். ஒரு மூன்றாம் தர கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். சுவாரஸ்யமாக, துருக்கிய தொலைக்காட்சி நாடகங்கள், குறிப்பாக வரலாற்று நாடகங்கள் பாகிஸ்தான் கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் என்று கான் குறிப்பிட்டார். “எங்களுக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. அதில் காதல் இருக்கிறது. ஆனால், அதற்கு இஸ்லாத்தின் மதிப்புகள் உள்ளன” என்று இம்ரான் கான் கூறினார்.
“துரதிர்ஷ்டவசமாக, பாலிவுட் மூலமாக நான் அதைப் பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டும்… 30-40 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் கூட, இந்த வகையான விஷயங்களை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். இப்போது அதில் அவ்வளவு அழுக்கு இருக்கிறது. ஹாலிவுட்டின் பண்புகளில் மிக மோசமானதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அவர்கள் தங்கள் சொந்த பாரம்பரியத்தின் வலிமையைக் காட்ட மாட்டார்கள். எங்கள் குழந்தைகள் இதனால் மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்படுகிறார்கள்” என்று இம்ரான் கான் கூறினார். பாலிவுட் திரைப்படங்கள் பள்ளிகளை எவ்வாறு எதிர்மறையாக பாதிக்கின்றன என்று கான் கூறினார். பாலிவுட் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றன மற்றும் பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கின்றன என்று இம்ரான் கான் கூறினார்.
துருக்கி வரலாற்று நாடகங்கள் பாகிஸ்தானின் மக்களுக்கு பாலிவுட்டைத் தாண்டிய ஒரு உலகம், அதற்கு கலாச்சார மதிப்புகள் இருக்கிறது என்று இம்ரான் கான் கூறுகிறார். மேலும், பாலிவுட் நாட்டின் குடும்ப அமைப்பில் ஏற்படுத்தும் செல்வாக்கு மற்றும் எதிர்மறையான தாக்கங்களையும் பற்றி இம்ரான் கான் கூறுகிறார்.
கடந்த ஆண்டு துருக்கிக்கு அரசுமுறைப் பயணம் செய்ததைத் தொடர்ந்து இம்ரான் கான் ‘டிரிலிக்: எர்டுருல்’ தொடர் பிரபலமடைந்ததை அறிந்ததாக துருக்கிய செய்தி நிறுவனம் டி.ஆர்.டி தெரிவித்துள்ளது.
துருக்கி தொலைக்காட்சி நாடகங்கள் பாகிஸ்தானில் ஏன் பிரபலமாக உள்ளன?
துருக்கி தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. துருக்கி நடிகர்கள் மற்றும் நாடக தயாரிப்புகள் உலகெங்கிலும் நம்பிக்கையான ரசிகர்களைக் கொண்டுள்ளன. அவர்கள் வசன வரிகளை அல்லது டப்பிங்ஸைப் பயன்படுத்தி தங்கள் மொழிகளில் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் தொடர்பான உள்ளடக்கத்தை ஆர்வத்துடன் பயன்படுத்துகிறார்கள். இந்திய துணைக் கண்டத்தில், துருக்கி தொலைக்காட்சி நாடகங்கள் நீண்ட காலமாக இல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு தசாப்த காலம் பிரபலமாக உள்ளன.
துருக்கி தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை அவர்கள் ஏன் விரும்புகிறார்கள் என்பதற்கு மக்கள் மாறுபட்ட காரணங்களைக் கொண்டுள்ளனர். ரசிகர்கள் வரலாற்று நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வகைகளில் பரவலான தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். பொதுவாக, துருக்கி தொலைக்காட்சி நாடகங்கள் அதிக பட்ஜெட்டில் நன்கு தயாரிக்கப்பட்டவை. கதை வரிகள் மற்றும் திறமையான நடிகர்களைக் கொண்டுள்ளன. 2016 ஆம் ஆண்டில், துருக்கி தொலைக்காட்சி நாடகங்கள் ஜிண்டகி சேனலில் ஒளிபரப்பப்பட்டன. இது மிகவும் பிரபலமான ‘ஃபத்மகுல்’ உடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஜிந்தகியின் இந்திய பார்வையாளர்களுக்காக ‘அதானே ஃபெரிஹா கொய்டும்’ தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது.
‘டிரிலிகஸ்: எர்டுக்ருல்’ என்பது 2014 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது மொத்தம் 179 அத்தியாயங்களுடன் ஐந்து பருவங்களுக்கு ஓடியது. ரசிகர்கள் எப்போதுமே பல்வேறு ஆன்லைன் தளங்களில் தங்களுக்கு பிடித்தவற்றை மீண்டும் பார்க்க திரும்பிச் செல்கின்றனர். ‘டிரிலிக்: எர்டுருல்’ பற்றிய மிக சமீபத்திய விவாதம் இம்ரான் கான் அதன் தயாரிப்பை விளம்பரப்படுத்தியதால் வந்தது.
முதல் எபிசோட் ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தானின் பி.டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, #ErtugrulUrduPTV பாகிஸ்தானில் சமூக ஊடகங்களில் பிரபலமடையத் தொடங்கியது. பி.டி.வி-யில் ஒளிபரப்பத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள், உருது மொழி டப்பிங் உடன் கூடிய இந்த தொலைக்காட்சி நாடகத்தின் யூடியூப் சேனல், ‘டி.ஆர்.டி எர்டுக்ருல் பை பி.டி.வி 4.02 மில்லியன் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை அடைந்தது.
‘டிரிலிக்: எர்டுருல்’ ஏன் பிரபலமானது?
மீண்டும், மக்கள் துருக்கி நாடக தயாரிப்புகளை விரும்புவதற்கான சொந்த காரணங்கள் உள்ளன. இது கதைக்களம், நடிகர்கள், தொகுப்புகள் மற்றும் தயாரிப்பு, மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் போன்றவையாக இருக்கலாம். ‘டிரிலிக்: எர்டுருல்’ ஒட்டோமான் பேரரசின் வரலாற்றுக்கு முந்தைய ஒரு நாடகப்படுத்தப்பட்ட கதையைச் சொல்கிறது, முதலாம் ஒஸ்மானின் தந்தை எர்டுக்ருலின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. ஒட்டோமான் பேரரசின் நிறுவனர் என்று கருதப்படுபவர். சிலர் இதை துருக்கிய ‘கேம் ஆஃப் தார்ன்’ என்று பெயரிட்டிருந்தாலும், இந்த சங்கமும் லேபிளிங்கும் கதையை மிகைப்படுத்தி, இந்த ஒப்பீடுகளைச் செய்வதன் மூலம் தொடரை அவமதிப்புக்குள்ளாக்குகின்றன.
துருக்கிய நடிகர் எங்கின் அல்தான் தேசியாதன், எர்டுருல் காசி மற்றும் எஸ்ரா பில்கிக் ஆகியோரின் பாத்திரத்தில் ஹலிம் சுல்தான், எர்டுருலின் மனைவி மற்றும் ஒட்டோமான் பேரரசின் நிறுவனர் என்று கருதப்படும் ஒஸ்மான் காசியின் தாயார். துருக்கியில் டிஸி என்று அழைக்கப்படும் நாடகத்தின் ஐந்து பருவங்களின் மூலம், 2014-2019 க்கு இடையில் ஓடிய ‘டிரிலிக்: எர்டுருல்’, தொடர்ச்சியான நாடகப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் மூலம் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது, இது இறுதியில் ஒட்டோமான் பேரரசின் ஸ்தாபனத்திற்கு வழிவகுக்கிறது. 2014 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களில் ஒன்றான ‘டிரிலிக்: எர்டுருல்’ அதன் முதல் ஒளிபரப்பிலிருந்து எவ்வளவு நேரம் கடந்துவிட்டாலும் பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்க்கும் டிஸிகளில் ஒன்றாகும்.
பாகிஸ்தானில் இந்தத் தொடர் புகழ் பெற்றது. இந்தத் தொடரின் ரசிகர்களுக்காக ஈஜினுக்கான ஒரு சிறப்பு செய்தியை எங்கின் அல்தான் தீசியதன் பதிவு செய்தார்.
இந்தத் தொடரின் ரசிகர்கள், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், அவரது குடும்பத்தினருடன் தயாரிப்புத் தொகுதிகளைப் பார்வையிட்டனர். அவர்களுடன் வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ஆகியோர் 2018-ம் ஆண்டில் செட்களைப் பார்வையிட்டதோடு, பாத்திரங்களின் உடைகளை அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
பாகிஸ்தான் அரசியல்வாதி பைசல் ஜாவேத் கானும் இந்தத் தொடரின் பெரிய ரசிகர். இந்தத் தொடரைப் பற்றி அவர் தொடர்ந்து டுவீட் செய்து வருகிறார். மேலும், தொலைக்காட்சி நாடகத்தில் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியும் இந்தத் தொடரின் ரசிகராகக் காணப்படுகிறார். மார்ச் 2019 இல், அவர் செய்துள்ள டுவிட்டில், “துருக்கியத் தொடரான டிரிலிக்: எர்டுருல் நான் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையின் விளைவாகவும், அதன் விளைவாக அவர்கள் நிறுவ முடிந்த நீதி சாம்ராஜ்யத்தின் விளைவாகவும் அவர்கள் பெற்ற சாதனைகள் மற்றும் வெற்றிகளால் நான் மூழ்கிவிட்டேன். நாம் மீண்டும் அப்படி இருக்க வேண்டும்.” என்று டுவிட் செய்துள்ளார்.
இருப்பினும், எல்லோரும் ‘டிரிலிக்: எர்டுருல்’ மீதான புகழ் மற்றும் ஆர்வத்தால் எடுக்கப்படவில்லை. துருக்கி உள்ளூர் செய்தி அறிக்கையின்படி, பிப்ரவரி 2020 வரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இந்தத் தொடர் தடை செய்யப்பட்டிருந்தது. எகிப்தின் உத்தியோகபூர்வ ஃபத்வா அமைப்பான தாருல்-அஃப்டா, மத்திய கிழக்கில் செல்வாக்கு செலுத்துவதற்காக துருக்கி தனது கலாச்சார ஏற்றுமதியைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டதாக துருக்கிய செய்தி வெளியீடு யெனி சஃபாக் தெரிவித்துள்ளது.
ஃபத்வா முக்கியமாக ‘டிரிலிக்: எர்டுருல்’ குறிக்கப்பட்டுள்ளது: டிரிலிக்; எர்டுருல் தொடரை துருக்கிய தொலைக்காட்சி நாடகங்களில் ஒன்றாகப் பார்க்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த அரபு நாடுகளின் மீது கட்டுப்பாட்டைப் பெற்று மத்திய கிழக்கில் ஒட்டோமான் பேரரசை புதுப்பிக்க எர்டோகன் முயற்சித்ததாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துருக்கிய தொலைக்காட்சித் தொடரின் ஒளிபரப்பிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள், துருக்கியின் மென்மையான சக்தியையும் அதன் கலாச்சார ஏற்றுமதியின் கவர்ச்சியையும் கட்டுப்படுத்தும் முயற்சிகள் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.