உலகில் 4 முரண்பாடான நாடுகள் எவை? இந்தியா ஏன் அதில் ஒன்று?

UK based Policy Institute report dubs India a ‘difficult’ country : உலகில் 4 முரண்பாடான நாடுகள் எவை? இந்தியா ஏன் அதில் ஒன்று?

By: January 15, 2021, 8:03:03 PM

UK based Policy Institute report dubs India a ‘difficult’ country :  கடந்த, ஜனவரி 11 அன்று, ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் அஃபர்ஸ் என்று அழைக்கப்படும் நூற்றாண்டு பழமையான இங்கிலாந்து சார்ந்த ஆய்வு நிறுவனமான சாதம் ஹவுஸ், பிரெக்சிட்டுக்கு பிறகான இங்கிலாந்தின் எதிர்கால வெளியுறவுக் கொள்கைக்கான ஒரு வரைபடத்தை முன்மொழிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. “குளோபல் பிரிட்டன், குளோபல் புரோக்கர்” என்ற தலைப்பில், இந்த அறிக்கை இங்கிலாந்துக்கு ஒரு தைரியமான பாதையை வரைகிறது.

மிகவும் குறிப்பிடத்தக்க வகையில்,”சர்வதேச விவகாரங்களில் ஒரு புதிய பிளவு”  என்று இந்தியாவை இந்த அறிக்கை  வகைப்படுத்துகிறது. மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் திறனைக் கொண்ட திறந்த சமூகம் மற்றும்  மக்களுக்கு உரிமைகளை மறுக்கும் சமூகங்களுக்கு அப்பால் உள்ள புதிய  அணியில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, துருக்கி, சவுதி அரேபியா, இந்தியா  ஆகிய நான்கு நாடுகள் “நான்கு  முரண்பாடான நாடுகள்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இங்கிலாந்து தனது உலகளாவிய இலக்குகளை நோக்கி பயணிக்கும் போது இந்த நான்கு நாடுகளை “போட்டியாளர்களாக” அல்லது “மோசமான சகாக்கள் ” என்ற அளவில் மதிப்பிட வேண்டும் என்று ஆய்வறிக்கை தெரிவித்தது.

” உள்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசியாவின் சர்வதேச உறவுகளின் இணை பேராசிரியர் கேட் சல்லிவன் டி எஸ்ட்ராடா” தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சுட்டிக்காட்டினார்

“ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வெளிப்படையான இந்து தேசியவாதம், முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரின் உரிமைகளை பலவீனப்படுத்துகிறது. நேருவால் வடிவமைக்கப்பட்ட  மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியா சகிப்புத்தன்மையற்ற பெரும்பான்மைவாதத்தை  நோக்கி செல்வது கவலை அளிக்கிறது” என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

இரக்கம் மற்றும் சகிப்பு தன்மையற்ற வன்முறை சம்பவங்கள்,  மதம் சார்ந்த அடக்குமுறைகள், கருத்து சுதந்திரம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை நசுக்கும் போக்கு கடந்த 2014ல் இருந்து அதிகரித்து வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டபபட்டது.

தாராளமய ஜனநாயகத்தை இந்தியா தயக்கத்தோடு  ஆதரித்து வருவதாகவும், மனித உரிமை மீறல்கள் குறித்து  தெளிவற்று இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையாக முன்மொழிந்த வாதங்களை பொய்பிக்க இந்தியா செய்ய வேண்டியவை என்ன?

அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினர் என்ற பொறுப்பை இந்தியா நிறைவேற்ற உள்ளது. மேலும், 2023 ஜி 20 உச்சிமாநாட்டின் தலைமை பொறுப்பையும் இந்தியா ஏற்கவுள்ளது. எனவே, இந்தியாவின் செயல்பாடுகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

“ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சகாப்தத்திலிருந்து நீடிக்கும் நாகரிக மற்றும் இனரீதியான படிநிலைகளை மாற்றியமைத்து புதுவகையான சர்வதேச பார்வையை மையப்படுத்த  இந்தியா முன்வர வேண்டும்,” என்று ஆசிரியர் தனது கட்டுரையில் முடிக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Why india is classed as one of the difficult four countries in uk based report

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X