/tamil-ie/media/media_files/uploads/2020/07/a39-1.jpg)
கடந்த வாரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸில் இரண்டு செய்திக் கட்டுரைகள் வெளிவந்தன.
மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் செய்தி முதலில் வந்தது. இந்தியாவில் ஒரு நாளைக்கு பதிவுசெய்யப்படும் கோவிட்-19 தொற்று வழக்குகளின் எண்ணிக்கை 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு தடுப்பூசி அல்லது சிகிச்சையை கண்டுபிடிக்காவிட்டால் விரைவில் 2.87 லட்சம் தொற்று வழக்குகளாக உயரக்கூடும் என்று இந்த ஆய்வு கூறியது. உண்மையில், இந்த ஆய்வின்படி 2021ம் ஆண்டில் குளிர்காலத்தின் முடிவில் இந்தியாவில் அதிக புதிய தொற்று வழக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அடுத்து வந்த செய்திக்கட்டுரை பொருளாதார நடவடிக்கைகளில் ஆரம்ப முன்னேற்றம் எப்படி என்பது பற்றியது. உடனடியாக நாடு தழுவிய கொரோனா பொதுமுடக்க தளர்த்துதலைத் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டது. இதனால், தரவுகளின்படி, வேலைகளின் தரவுகள் அல்லது மின்சார நுகர்வு - அதிகரிப்பு விகிதம் குறைந்துவிட்டது.
இரண்டு செய்திக் கட்டுரைகளும் நெருங்கிய தொடர்பு கொண்டவை.
தொற்றுநோயின் எதிர்கால போக்கைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையை முதலாவது செய்திக் கட்டுரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொற்று எண்ணிக்கை எப்போது உச்சம் அடையும் அல்லது தொற்று வளைவு உச்சம் அடைந்தவுடன் எவ்வளவு விரைவாக விழும் என்பதை யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.
இந்த நிச்சயமற்ற தன்மை மிகவும் உண்மையான தாக்கங்களைக் கொண்டுள்ளது.
சாதாரண வணிக நடவடிக்கைகளை சீராகவும் ஆற்றலுடனும் மீண்டும் தொடங்குவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இது பாதித்துள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு நகரம், மாவட்டம் அல்லது மாநிலம் புதியதாக மட்டுப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தை காண்கிறது.
கடந்த வாரம், ஒரு முக்கிய சர்வதேச தரகு நிறுவனம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்திற்கான கணிப்புகளை வழங்கியது. அதன் தலைமை பொருளாதார நிபுணர், இந்த ஆண்டு பொருளாதாரம் சுருங்கும்போது, அடுத்த ஆண்டு வளர்ச்சி சமமாக கூர்மையாக உயரும் என்று கூறினார்.
ஆனால், ஆய்வாளர்கள் அவர்களின் நம்பிக்கைக்கு எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. உண்மையில், ஒரு சாதகமான அடிப்படை விளைவைத் தவிர, (அடிப்படையில் 2021 மிகவும் மோசமாக இருக்கும் என்பதோடு ஒப்பிடுகையில் 2022 மிகவும் சிறப்பாக இருக்கும்) அடுத்த ஆண்டு மீட்கப்படும் என அவர்கள் உறுதியாக இருப்பதற்கு உண்மையான காரணம் எதுவும் இல்லை.
கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட் மீண்டும் தொடங்கியதால், இப்போதே பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்பதற்கான ஒரு படத்தை வரைவதற்கு கிரிக்கெட் சொற்களைப் பயன்படுத்தலாம்.
கோவிட் சீர்குலைவு இந்திய பொருளாதார முகவர்களுக்கும் வணிகங்களுக்கும் நுகர்வோர்களுக்கும் என்ன செய்திருக்கிறது. அதையே கிரிக்கெட்டி, சரியாக ஸ்டம்பிற்கு வெளியே வரும் லென்த் பால் நிச்சயமற்ற அரங்கில் ஃபார்மில் இல்லாத பேட்ஸ்மேனை என்ன செய்கிறது. நாம் அனைவரும் விளயாடுகிறோம்; தவரவிடுகிறோம்.
கோவிட் தொற்று வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு (அதற்கு முன்னதாக அல்ல) பொருளாதாரத்தின் மிகக் குறைந்த புள்ளி வரும் என்று வாதிடலாம்.
இருப்பினும், இடைக்காலத்தில், ஒவ்வொரு வாரமும் மாதமும் கடந்து செல்லும்போது, பொருளாதார அழுத்தங்கள் தொடர்ந்து உருவாகின்றன. ஏனெனில், பொருளாதாரம் அதன் திறனுக்கும் குறைவாகவே செயல்படுகிறது. இது அடிப்படையில் குறைவாக சம்பாதிக்கும் நபர்களுக்கு என்று மொழிபெயர்க்கிறது. இதன் விளைவாக, நுகர்வுகளைத் தடுக்கிறது.
இதையொட்டி, வணிகங்கள் புதிய கடன்களை எடுத்துக்கொண்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா என்று திகைக்க வைக்கிறது. அவ்வாறு செய்வதில் உள்ள சிக்கல்களைப் பொருட்படுத்தாதீர்கள் அல்லது வெறுமனே இருங்கள். அது புதிய கடன்களை விரிவாக்குவது குறித்து வங்கிகளுக்குத் தெரியவில்லை. குறிப்பாக பல முந்தைய கடன்கள் வேகமாக செயல்படாத சொத்துகளாக (என்.பி.ஏ) மாறுகின்றன.
நிச்சயமாக, வார இறுதியில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், அதிக என்.பி.ஏ.க்கள் மற்றும் பொது, தனியார் வங்கிகளின் மூலதன குறைவுக்கான சாத்தியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அதற்கு வழி என்ன?
அங்கே விரைவான தீர்வு இல்லை. கோவிட்டுக்கு முன் இந்திய பொருளாதாரம் ஏற்கனவே வளர்வதற்கு போராடி வந்ததால், இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கும்.
ஆனால் புத்திசாலித்தனமான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொள்கை நடவடிக்கை இல்லாமல் எதுவும் நடக்காது.
உதாரணமாக, இந்திய வங்கிகளில் (குறிப்பாக பொதுத்துறையில்) ஆளுகை அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டும். பி ஜே நாயக் கமிட்டியின் 2014 ஆம் ஆண்டின் அறிக்கை விவேகமான சீர்திருத்தங்களின் தொகுப்பைக் கோடிட்டுக் காட்டியது. ஆனால், சில ஒப்பனை மாற்றங்களைத் தவிர, மிகக் குறைவான சீர்திருத்தங்களே செய்யப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஒவ்வொரு வருடமும், பொதுத்துறை வங்கிகள் ஆபத்தான முன் கணிப்புடன் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இதுபோன்ற பல துறை சார்ந்த சீர்திருத்தங்கள் இந்திய பொருளாதாரம் அதன் பாதையை திரும்ப அடைவதற்கு ஆத்மநிர்பராக (சுயசார்பு இந்தியாவாக) மாற வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.