Advertisment

ஸ்டார்லிங்க் “ப்ரீமியம்” சேவைகளை வழங்க காரணம் என்ன?

ஸ்டார்லிங்கின் முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது. முதலில் 10 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் இந்த இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் முடிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இந்தியாவில் பயனர்களுக்காக ப்ரீ ஆர்டர்களை துவங்கியது.

author-image
WebDesk
New Update
Elon Musk, Starlink

Elon Musk’s Starlink now offering a ‘premium’ service : எலோன் மஸ்க்கின் செயற்கைகோள் இணைய சேவை ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக இந்தியாவில் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. தற்போது சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட இணைய வேகத்தை வழங்கும் உத்தரவாதத்துடன் ப்ரீமியம் சேவையை வழங்கி வருகிறது. புதிய பிரீமியம் சலுகை - மாதத்திற்கு $500 - இந்தியா போன்ற சந்தைக்கான தொழில்நுட்பத்தின் செலவு-தடையை இந்த மதிப்பு கோடிட்டு காட்டுகிறது.

Advertisment

செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை என்றால் என்ன?

குறைந்த புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களின் தொகுப்பைப் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள தொலைதூர பகுதிகளுக்கு லோ-லேட்டன்ஸி பிராட்பேண்ட் இணைய சேவையை இந்த ஸ்டார்லிங்க் வழங்க உள்ளது.

அமேசான் மற்றும் ஒன்வெப் ஆகியவை இந்த செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்பம் தொடர்பான தங்களின் சொந்த திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றன.

ஸ்டார்லிங்கின் ப்ரீமியம் சேவை என்றால் என்ன?

பிரீமியம் சேவையானது 150 முதல் 500 எம்பிபிஎஸ் வரையிலான வேகத்தில் இணைய சேவை வழங்குவதாகும். பிரீமியம் சேவையின் தாமதம் 20-40ms இடையே உள்ளது. ஆனால் வழக்கமான ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்தும் நபர்களுக்கு 100 முதல் 200 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை உறுதி செய்யப்படும். ஸ்டார்லிங்க் இணையத்தின் தரவுகள் படி வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் மொபைல் ஆப் மூலமாக உதவியை பெற்றுக் கொள்ள இயலும்.

இந்தியாவில் ஸ்டார்லிங்கின் பயணம் எந்த அளவில் உள்ளது?

ஸ்டார்லிங்கின் முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது. முதலில் 10 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் இந்த இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் முடிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இந்தியாவில் பயனர்களுக்காக ப்ரீ ஆர்டர்களை துவங்கியது. இருப்பினும், அரசாங்க அறிவிப்பைத் தொடர்ந்து நவம்பரில் இவை அனைத்தும் செயல் இழந்தது. இது முன்பதிவு தொடங்கும் முன் அதன் சேவைகளுக்கான உரிமத்தைப் பெற வேண்டும் என்று இந்திய அரசு அந்நிறுவனத்தை எச்சரிக்கை செய்தது.

அரசின் உத்தரவுக்கு பிறகு, ஸ்டார்லிங்க் சேவைக்காக ப்ரீ-புக்கிங் செய்திருந்த நபர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க முடிவு செய்தது அந்த நிறுவனம். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ப்ரீ ஆர்டர்களை புக் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஸ்டார்லிங்க் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் பார்கவா 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய பதவியில் இருந்து விலகினார்.

இந்தியாவில் சாட்டிலைட் ப்ராட்பேண்டுக்கான சந்தை உள்ளதா?

ஸ்டார்லிங் மற்றும் ஒன்வெப் நிறுவனங்கள் தங்களின் சாட்டிலைட் ப்ரோட்பேண்ட் சேவைகளை இந்தியாவில் 2022ம் ஆண்டு வழங்க முடிவு செய்துள்ளன. அதே நேரத்தில் ரந்த ஆப்டிக் ஃபைபர் கவரேஜ் இல்லாத நிலையில், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் அரசு மற்றும் மக்களுக்கு இடையே ஒரு தற்காலிக தீர்வை வழங்குகிறது. பாரத்நெட் அனைத்து பகுதிகளிலும் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இத்தகைய அதிக செலவு கொண்ட தொழில்நுட்பம் பெரிய அளவில் வெற்றி அடையாது.

டிசம்பர் 2021 இல், பார்கவா இந்தச் சேவைக்கு இந்தியாவில் முதல் ஆண்டில் ஒரு பயனர் டெர்மினலுக்கு ரூ. 1.58 லட்சம் செலவாகும் என்றும், இரண்டாம் ஆண்டில் இருந்து சுமார் ரூ.1.15 லட்சம் செலவாகும் என்றும் கூறியிருந்தார். ஸ்டார்லிங்கின் வேகத்தோடு ஒப்பிடும் போது பாரத்நெட் சேவைகள் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளன. மேலும் ஓராண்டுக்கு இதனால் ஏற்படும் செலவானது ரூ. 32 ஆயிரம் முதல் 57 ஆயிரம் வரை மட்டுமே.

இந்த சேவைகள் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் சேவைகளுக்கு சவாலாய் அமையுமா?

ஸ்டார்லிங்க் மற்றும் ஒன்வெப் போன்ற நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட சேவைகள் முக்கியமாக குறைந்த புவி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்களை சார்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் இணைப்பை மேம்படுத்த ஏற்கனவே திட்டங்களை தயார் செய்து வருகின்றன. சாதாரண நெட்வொர்க் சேவைகள் சென்று சேராத இடங்களுக்கு சேவையை வழங்கவே இந்த ஸ்டார்லிங் போன்ற சேவைகள் உருவாக்கப்பட்டாலும், இணைய சேவைகள் நன்று மேம்படுத்தப்பட்ட பகுதிகளிலும் கூட ஃபைபர் ஆப்டிக்ஸ் வழங்கும் சேவையைக் காட்டிலும் அதிவேக இணைய சேவையை வழங்கும் என்பதால் இது ஒரு போட்டியில் முடிவடையும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment