அன்று கட்சி, இன்று ஆட்சி! – சிவாஜி பூங்கா சிவசேனாவுக்கு ஏன் அவ்வளவு முக்கியமானதாகிறது?

Om Marathe மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து ‘மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி’ என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த கூட்டணி சார்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட, பதவி ஏற்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.  இதன் மூலம் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து உயர்ந்த பதவிக்கு வரும் முதல் நபர் என்ற பெருமையை […]

Why is Shivaji Park, important for Shiv Sena Uddhav Thackeray - அன்று கட்சி, இன்று ஆட்சி! - சிவாஜி பூங்கா சிவசேனாவுக்கு ஏன் அவ்வளவு முக்கியமானதாகிறது?
Why is Shivaji Park, important for Shiv Sena Uddhav Thackeray – அன்று கட்சி, இன்று ஆட்சி! – சிவாஜி பூங்கா சிவசேனாவுக்கு ஏன் அவ்வளவு முக்கியமானதாகிறது?

Om Marathe

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து ‘மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி’ என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த கூட்டணி சார்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட, பதவி ஏற்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.


இதன் மூலம் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து உயர்ந்த பதவிக்கு வரும் முதல் நபர் என்ற பெருமையை உத்தவ் தாக்கரே பெற்றுள்ளார்.

மத்திய மும்பையின் மராத்தி ஆதிக்கம் நிறைந்த தாதர் பகுதியில் திறந்தவெளி வரலாற்று சிறப்புமிக்க 28 ஏக்கர் சிவாஜி பார்க் மைதானத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. சிவாஜி பூங்கா என்பது சிவசேனாவின் மதிப்புமிக்க கோட்டையாகும். இது அக்கட்சிக்கு உணர்ச்சிமயமான தருணத்தை கொடுக்கின்றது. அது ஏன் என்று இங்கு பார்ப்போம்,

1995 ஆம் ஆண்டில், முன்னாள் சிவசேனா-பாஜக கூட்டணி முதல் முறையாக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சேனா தலைவர் மனோகர் ஜோஷி அதே இடத்தில் முதல்வராக பதவியேற்றார்.

1925 ஆம் ஆண்டில் மஹிம் பார்க் என நிறுவப்பட்ட இந்த திறந்தவெளி மைதானத்தில், சுதந்திர போராட்ட வீரரும், பிஎம்சி கவுன்சிலருமான அவந்திகாபாய் கோகலே முயற்சியால் 1927 ஆம் ஆண்டில் சிவாஜி பூங்கா என மறுபெயரிடப்பட்டது.

1930 கள் மற்றும் 1940 களில், இந்த பூங்காவில் தேசிய சுதந்திர பேரணிகள் நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்தின் பேரணி நடக்கும் முக்கிய இடமாக மாறியது. சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்தின் பேரணியின் முழக்கம், மும்பையில் பிரித்து தனி மகாராஷ்டிரா வேண்டும் என்பதே.

அந்த இயக்கத்தின் தலைவர்களில் சமூக சீர்திருத்தவாதியான கேசவ் சீதாராம் “பிரபோத்தங்கர்” தாக்கரே, (சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் தந்தை) ஆகியோர் முக்கியமானவர்கள். சீனியர் தாக்கரே சமூக தீமைகளை விமர்சிப்பதற்கான ஒரு தளமாக ‘பிரபோதன்’ என்ற இதழை (Fortnight magazine) நடத்தினார். இது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளிவரும்.

சிவசேனாவும் அதன் தசரா பேரணியும்

1966 ஆம் ஆண்டில், பால் தாக்கரே சிவசேனாவை உருவாக்கினார். பின்னர் அக்கட்சி தென்னிந்திய எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு தரப்புகளால் இயக்கப்பட்டது.

சிவாஜி பூங்காவில் தான் தனது முதல் பேரணியில் தாக்கரே உரையாற்றினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தசரா நாளில் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்.

மகாராஷ்டிர மக்கள் அதிகம் வசிக்கும் தாதரில் அமைந்திருக்கும் இந்த மைதானம் உள்ளூர் மக்களின் ஆதரவை ஈர்ப்பதில் கருவியாக அமைந்தது. சேனா தலைவரைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டு வருவார்கள்.

பல ஆண்டுகளாக, மற்ற அரசியல் பிரமுகர்களையும் தசரா பேரணிக்கு தாக்கரே அழைத்து வருவார். இதில் பாஜக தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், பிரமோத் மகாஜன், சோசலிஸ்ட் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஷரத் பவார் ஆகியோர் அடங்குவர்.

2010 ஆம் ஆண்டில், சிவாஜி பூங்காவை ஒரு அமைதியான மண்டலமாக அறிவிக்க மும்பை குடிமை அமைப்பிற்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, ​​சேனாவின் ‘சாமானா’ பத்திரிகையின் தலையங்கத்தில், நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்து தாக்கரே எழுதியிருந்தார்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகியும், தசரா பேரணி பாரம்பரியம் தொடர்கிறது. தாக்கரேயின் மகனும் வாரிசுமான உத்தவ் தாக்கரே தற்போது உரையாற்றுகிறார்.

சேனா தலைமையகம் – சேனா பவன் – பூங்கா அருகிலேயே அமைந்துள்ளது. பால் தாக்கரே பூங்காவின் அருகே தான் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே அங்கு தான் வசிக்கிறார்.

பால் தாக்கரே மரணம்

தாக்கரே 2012 இல் தனது 86 வது வயதில் கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டு இறந்தார். பூங்காவில் அவருக்கு ‘ஸ்மிருதி ஸ்தல்’ (Smriti Sthal) உள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டில் BMC (Brihanmumbai Municipal Corporation) மும்பை மேயரின் பங்களாவை (வீர் சாவர்க்கர் மார்க்கில் மைதானத்திற்கு எதிரே அமைந்துள்ளது) பால் தாக்கரேவின் நினைவுச் சின்னமாக அமைக்க அறக்கட்டளைக்கு ஒப்படைத்தது.

சிவாஜி மைதானத்தை “சிவ தீர்த்தம்” என்று மறுபெயரிடுவதற்கான கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why is shivaji park important for shiv sena uddhav thackeray

Next Story
Explained : புதிய ஆசிய உயர்க்கல்வி தரவரிசை பட்டியல், இந்திய கல்வி நிறுவனங்களின் நிலை என்ன ?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express