/tamil-ie/media/media_files/uploads/2021/03/dhinakaran-1.jpg)
Why is T T V Dhinakaran contesting from Kovilpatti
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார். 2017ம் ஆண்டு இடைத்தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தந்த ஆர்.கே. நகரை விடுத்துவிட்டு இவர் இங்கு போட்டியிட காரணம் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. கோவில்பட்டியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த வரவேற்ப்பு தான் கோவில்பட்டியை தேர்வு செய்ததாக கூறுகின்றனர்.
கயத்தாறு பஞ்சாயத்து ஒன்றியத்தின் தலைவராக இருக்கும் எஸ்.வி. பி.எஸ். மாணிக்கராஜா தினகரனின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக கருதப்படுகிறார். அமமுக 13 கவுன்சிலர்களை இங்கே கொண்டுள்ளது. அதிமுகவிற்கு 1ம் திமுகவிற்கு 2 கவுன்சிலர்களும் தான் உள்ளனர். முக்குலத்தோர் சமூகத்தினரிடையே கணிசமான செல்வாக்கை அவர் பெற்றுள்ளார். மேலும் தேவரான தினகரன் அவர்களின் வாக்குகளை பெறுவார் என்று நம்புகின்றனர். பாஜகவால் அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்று கருதப்படும் சசிகலா மீது சமூகத்தில் நிலவும் வலுவான அனுதாபத்தைப் பெறுவார் என்றும் அவர் நம்புகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக வேட்பாளர், இந்ந்த தொகுதியின் சட்டமன்றப் பிரிவில் சுமார் 20,000 வாக்குகளைப் பெற்றிருப்பதால், கோவில்பட்டி தினகரனுக்கு பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது.
தினகரனுக்கு எதிராக அதிமுக சார்பில் கோவில்பட்டி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சருமான கடம்பூர் ராஜ்ஜூ போட்டியிடுகிறார். அவர் 2016 மற்றும் 2011 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மாணிக்கராஜாவின் செல்வாக்கு மற்றும் தினகரனின் புகழ் ராஜூவை வீழ்த்த உதவும் என்று நம்புகின்றனர். இது மும்முனை போட்டியாக நிச்சயமாக இருக்கும். தினகரன் இந்த தொகுதியில் வெற்றி பெறுவார் அல்லது இரண்டாம் இடம் வருவார். ஆனால் நிச்சயமாக கடம்பூர் ராஜூ வெல்ல முடியாது என்று அமமுக பிரமுகர் ஒருவர் கூறினார். திமுக கூட்டணி சார்பில் கே. ஸ்ரீனிவாசன் இங்கே போட்டியிடுகிறார். கனிமொழி உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவாக இங்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.