scorecardresearch

ஆழ்கடல் மீன்பிடி திட்டம் ; கேரள அரசின் நடவடிக்கையால் அதிருப்தி ஏன்?

இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி.

Why is the Kerala govt caught in a net over a deep sea fishing deal

Why is the Kerala govt caught in a net over a deep-sea fishing deal  : ஆழ்கடலில் மீன் பிடித்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய தொழில்நுட்பத்திற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது சிபிஐ(எம்) தலைமையிலான கேரள அரசாங்கம்.  இதனை விமர்சனம் செய்து வருகின்றனர் எதிர்க்கட்சித் தலைவர்கள்.  மாநிலத்தில் உள்ள கடல் செல்வத்தை விற்கவும் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இந்த திட்டம் அமைந்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது .

சர்ச்சையை ஏற்படுத்தும் இந்த ஒப்பந்தம் என்ன?

2020 , பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று கேரளா தொழில் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேரள தொழில்த்துறை மேம்பாட்டுக் கழகம் நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இ.எம்.சி.சி குளோபல் கன்சோர்ட்டியம் எல்சிசியின் ( EMCC Global Consortium LCC) இந்திய  கிளையான இ.எம்.சி.சி. இண்டெர்நேசனல் இந்தியா ப்ரைவேட் லிமிட்டட் (EMCC International India Private Limited) என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.  கேரளாவில் ஆழ்கடல் மீன்பிடித்தலை மேம்படுத்துவதற்கும் மீன்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ .5,000 கோடி என்று நிறுவனம் கூறியிருந்தது. கொச்சி நகரில் ASSEND-2020 என்ற உலகளாவிய முதலீட்டாளர்களின் சந்திப்பை KSIDC ஏற்பாடு செய்த 48 நாட்களுக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் நோக்களில் ஒன்று உயர்தர தொழில்நுட்பமாகும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் இ.எம்.சி.சி. முன்மொழிவு செய்யும் வடிவிலான 400 ஆழ்கடல் மீன்பிடி இழுவைக் கப்பல்கள், சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய 5 பெரிய கப்பல்கள், 50 கடல் உணவு பதப்படுத்தும் ஆலைகள், 14 மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துதல், மீனவர்களுக்கு தேவையான மருத்துவமனைகள் மற்றும் விமான ஆம்புலன்ஸ்கள் ஆகியவையும் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் 1.60 லட்சம் மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளூர் மீனவக்ரளுக்கு தேவையான வேலைவாய்ப்பு வசதிகள் இதன் மூலம் உருவாகும் என்றும் இ.எம்.சி.சி கூறியுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, கேரள ஷிப்பிங் அண்ட் இன்லாண்ட் நேவிகேஷன், முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் துறை பிப்ரவரி 2ம் தேதி, 2021 அன்று அதே நிறுவனத்திடம் 400 ஆழ் கடல் இழுவை படகுகளை உற்பத்தி செய்வதற்கான ரூ. 2950 மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இ.எம்.சி.சிக்கு ஆழ்கடல் இழுவை கப்பல்களை செய்வதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தரும் என்று கேரள அரசு வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் ஆழ்கடல் இழுவைக் கப்பல்கள் பிறகு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்றும், மீன்பிடி துறைமுகங்களை நவீனமயமாக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மீன்வளக் கொள்கைக்கு எதிராக இந்த திட்டம்  எப்படி அமைந்திருக்கிறது?

மத்திய அரசு, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வெளிநாட்டு இழுவைப் படகுகளை வைத்து மீன்பிடிக்க வழங்கப்பட்ட மூன்று ஆண்டு அனுமதியை 2017ம் ஆண்டு திரும்பப் பெற்றது. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மட்டும் 370 கி.மீ தொலைவிற்கு கடற்கரை பரந்து விரிந்துள்ளது. இந்திய கடல்சார் மண்டலத்தின் சட்டம் 1981ன் படி, வெளிநாட்டு கப்பல்கள் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீன் பிடித்தல் சட்டப்படி குற்றமாகும். ஆரம்பத்தில் வெளிநாட்டு டிராலர்கள் 1997 முதல் செயல்பட்டு வந்தன, அப்போதைய மத்திய அரசு வெளிநாட்டு டிராலர்களுக்கு அனுமதி கடிதங்களை வழங்கியது .

கேரளத்தில் மீன்வளக்கொள்கை சி.பி.ஐ.(எம்) அரசால் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கப்பல்கள் அம்மாநில கடற்கரையில் மீன்பிடிக்க தடை விதித்திருந்தது. கேரள கடற்கரையில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கார்ப்பரேட் குழுக்கள், வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்றது. அவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் ஆழமான கடலில் மீன்பிடிக்க மீனவர்களை ஊக்குவிக்கிறது அந்த கொள்கை. தவிர, கப்பல்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இருக்கும். பாரம்பரிய மீனவர்களுக்கு மட்டுமே அவர்களின் பழைய படகுகளை மாற்ற அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இந்த திட்டம் குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் தெரியுமா?

எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா இந்த புகார்களை எழுப்பிய பிறகு அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கேரள அரசு மறுத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன், தொழிற்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெ.மெர்சிக்குட்டி அம்மா ஆகியோர் இ.எம்.சி.சி. தலைவர்களை சந்தித்தாக கூறப்படும் புகார்களையும் அவர்கள் மறுத்துள்ளனர். மேலும் அப்படியான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார். ஆனாலும் சென்னிதலா அவர்களின் சந்திப்பு குறித்த விவரங்களை வெளியிட்டார். இ.எம்.சி.சி. முதல்வரை அவருடைய அதிகாரப்பூர்வ குடியிருப்பு பகுதியில்2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தித்தாக கூறியுள்ளது.

2020 ஆம் ஆண்டின் அசல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும், அதன்பிறகு கே.எஸ்.ஐ.என்.சி சம்பந்தப்பட்ட ஒன்றையும் அரசாங்கம் மறுத்தது. கே.எஸ்.ஐ.என்.சி நிறுவனம் 2,950 கோடி ரூபாய் ஒப்பந்தம் பற்றி தனக்குத் தெரியாது என்று விஜயன் கூறினார், இது அவருக்கு கீழ் உள்ளது மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸை அதன் தலைவராக உள்ளார்.

எவ்வாறாயினும், 2018 ஆம் ஆண்டிலிருந்து முழு பிரச்சினையும் பல்வேறு மட்டங்களில் அரசாங்கத்தின் பார்வையில் உள்ளது என்பதைக் காட்டும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. ஈ.எம்.சி.சி நிர்வாகிகள் 2018 ஏப்ரல் மாதம் நியூயார்க்கில் மீன்வளத்துறை அமைச்சர் ஜே மெர்சிகுட்டி அம்மாவை சந்தித்து, இந்த திட்டம் குறித்து விவாதித்தனர். ஜூலை 2019 இல், இ.எம்.சி.சி மீன்வளத்துறை செயலாளர் கே ஆர் ​​ஜோதிலலுடன் ஒரு சந்திப்பை நடத்தியது மற்றும் கருத்துத் தாளை விரிவாக விவாதித்தது. ரூ .5 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த திட்டத்திற்காக இ.எம்.சி.சி கேரள அரசிடம் ஒரு கடிதத்தையும் கோரியது. இ.எம்.சி.சி இன்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நற்சான்றிதழ்களை சரிபார்க்க 2019 அக்டோபரில் அரசு வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது.

பின்னர், ஜனவரி 2020 இல், இந்த திட்டம் ASCEND-2020 முதலீட்டாளர்கள் சந்திப்பில் காட்சிப்படுத்தப்பட்டது. இது பிப்ரவரி 28, 2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வழிவகுத்தது. இந்த பிப்ரவரி தொடக்கத்தில், KSIDC நிறுவனம் அலப்புழாவில் நான்கு ஏக்கர் நிலத்தை ஒதுக்கும் என்றூ நிறுவனத்திற்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி, ஆழ்க்கடல் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் அது தொடர்புடைய துறைமுக மேம்பாடுகளை ரூ .2950 செலவில் தயாரிப்பதற்காக கே.எஸ்.ஐ.என்.சி இ.எம்.சி.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. சுவாரஸ்யமாக, இந்த ஆண்டு பிப்ரவரி 11 அன்று, இ.எம்.சி.சி ஜெயராஜனை அணுகியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

தேர்தலுக்கு முன்பு இந்த விசயம் எப்படியான விவகாரத்தை ஏற்படுத்தியுள்ளது?

சிபிஐ (எம்) கடல் செல்வத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க முயற்சிக்கிறது என்ற எதிர்க்கட்சி குற்றச்சாட்டு கடற்கரை பிரதேசங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திட்டம் பங்குதாரர்களிடையே விவாதிக்கப்படவில்லை. திட்ட கூறுகள் பல துறைமுகங்கள் உட்பட மாநில மீன்வளத் துறையை தனியார்மயமாக்கும். சிபிஐ (எம்) உடன் இணைந்த ஒரு நிறுவனத்தைத் தவிர பல்வேறு மீனவர் சமூக அமைப்புகள் பிப்ரவரி 27 அன்று கடலோர வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. காங்கிரஸும் பாஜகவும் இந்த பிரச்சினையை மீனவர் சமூகத்தினரிடையே கொண்டு சென்றுள்ளது. மீன்வள மற்றும் வேளாண் துறைகளில் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான தனது சொந்த நிலைப்பாட்டிற்கு முரணாக இருப்பதால் இந்த பிரச்சினை சிபிஐ (எம்) கட்சியை சங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது. பொதுமக்கள் பார்வையில் இருந்து இந்த ஒப்பந்தந்த்தை மறைக்கிறது கட்சி என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் ASCEND சந்திப்பிற்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய போது இ.எம்.சி.சி. உடனான கே.எஸ்.ஐ.டி.சி. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொழிற்துறை அமைச்சர் தவிர்த்துவிட்டார்.

இ.எம்.சி.சி. என்றால் என்ன?

இ.எம்.சி.சி. என்பது நியூயார்க்கை தலைமையகமாக கொண்டு செயல்படும் உலகளாவிய கூட்டமைப்பாகும். இந்தியாவில் இதன் கிளையான இ.எம்.சி.சி இன்டர்நேஷனல் இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ரூ. 5000 கோடிக்கு திட்டங்களை முன்மொழிவு செய்தாலும் கூட, ரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் கடல் துறையில் நிறுவனத்தின் சாதனைப் பதிவு பற்றி குறிப்பிடப்படவில்லை. கேரள அரசிடம் கூறப்பட்டுள்ள முன்மொழிவு அந்நிறுவனத்தின் கடல்சார் தொழில்துறைக்கு நுழைவாயிலாக அமைபும் என்று கூறியது. ரியல் எஸ்டேட், சுற்றுலா, சுகாதாரம் மற்றும் வர்த்தகம் போன்ற பல்வேறு வணிக துறைகளில் தனக்கு பங்கு இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பல்வேறு நாடுகளில் பல உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Why is the kerala govt caught in a net over a deep sea fishing deal