சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் தங்கள் நாடுகளுக்கு இடையே “சைபீரியாவின் சக்தி” என்று அழைக்கப்படுகிற முதல் எல்லை தாண்டிய எரிவாயு குழாய்த் திட்டத்தை தொடங்கி வைத்தனர். சீனாவுக்கு இந்த குழாய் வழியாக எரிவாயு வழங்கலைத் தொடங்கியுள்ளது.
சைபீரியா சக்தி திட்டம்
இந்த எரிவாயு குழாய்த்திட்டத்தின் மைய நோக்கம் சீனா மற்றும் ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதிகளுக்கு இயற்கை எரிவாயுவை அனுப்புவதாகும்.
மே 2014 இல், ரஷ்யா மற்றும் சீனா அரசுகளுக்கு சொந்தமான நிறுவனங்களான காஸ்ப்ரோம் மற்றும் சீனா தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சி.என்.பி.சி) ஆகியவை ஆண்டுதோறும் 38 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவை 30 ஆண்டு காலத்திற்கு வழங்க 400 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
இந்த குழாயின் சீனப் பிரிவு வடக்கு சீனாவின் ஹெய்ஹே முதல் ஷாங்காய் வரை 3,371 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்துவிட்டது. இந்தப் பிரிவு கட்டுமாணப் பணிகள் 2014 செப்டம்பரில் தொடங்கியது.
சீனாவின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2018 ஆம் ஆண்டில் சீனா சுமார் 276.6 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவை பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக சீனா 2018 ஆம் ஆண்டில் பயன்படுத்திய இயற்கை எரிவாயுவில் 45 சதவீதத்தை இறக்குமதி செய்துள்ளது.
இந்த 4,000 கி.மீ.-க்கும் அதிகமான எரிவாயு குழாய் ஆண்டுக்கு 61 பில்லியன் கன மீட்டருக்கு மேல் கொள்ளளவு கொண்டுள்ளது. இந்த இயற்கை எரிவாயு குழாய் சதுப்பு நிலங்கள் வழியாகவும் மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியாகவும், நில அதிர்வு செயல்திறனுள்ள பகுதிகள் வழியாகவும், பனிக்கட்டிகள் உறைந்த பிரதேசங்கள் வழியாகவும் பாறைகள் நிறைந்த பகுதி வழியாகவும் செல்கிறது. ரஷ்யாவின் காஸ்ப்ரோம், 2022 ஆம் ஆண்டில் கிழக்கு ரஷ்யாவின் யாகுட்டியாவில் அதன் தற்போதைய எரிவாயு ஆதாரத்தை தவிர, கிழக்கு ரஷ்யாவில் மேலும் ஒரு இடத்திலிருந்து எரிவாயுவைப் பெறத் தொடங்கும் என்று குறிப்பிடுகிறது.
“சைபீரிய எரிவாயு குழாய் மற்றும் கிழக்கு ரஷ்யாவில் புதிய எரிவாயு உற்பத்தி மையங்கள், கிழக்கு பிராந்தியங்களில், முதல்கட்டமாக எரிவாயு விரிவாக்கம் மூலம் சமூக-பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்குகின்றன” என்று காஸ்ப்ரோம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் ஏன் முக்கியமானது?
சீனாவைப் பொறுத்தவரை, இந்த எரிவாயு குழாய் திட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், அது வடக்கில் அமைந்துள்ள அதன் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு எரிபொருளை அளிக்கும். அவர்கள் நிலக்கரியிலிருந்து தூய்மையான மாற்று எரிசக்திகளுக்கு செல்ல முயற்சிக்கின்றனர்; குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்குவது ஆற்றல் பாதுகாப்பிற்கான அதன் தேவையை பாதுகாக்க உதவும்.
கூடுதலாக, சீனா மேலும் இரண்டு குழாய் இணைப்புகள் தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் ஒன்று சீனாவின் மேற்கு எல்லையான ரஷ்யாவுக்கு ஆண்டுதோறும் 30 பில்லியன் கன மீட்டருக்கு மேல் வழங்கும் சைபீரியா சக்தி 2 ஆகும். மற்றொன்று, ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவுக்கான ரஷ்யாவின் ஏற்றுமதி பாதையின் ஒரு பகுதியாக மாறக்கூடிய சாகலின் தீவில் இருந்து ஒரு எரிவாயு குழாய் திட்டம் ஆகும்.
ரஷ்யாவைப் பொறுத்தவரை, இந்த குழாய் திட்டம் அந்நாட்டின் சீன சார்பு உணர்வைக் குறிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.