Why Israel is mediating between Russia Ukraine: சனிக்கிழமை அன்று திடீரென மாஸ்கோவிற்கு விஜயம் செய்த இஸ்ரேல் நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே மத்தியஸ்தராக இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
பென்னட் இஸ்ரேல் நாட்டின் பிரதமராக ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற நிலையில், உலக அளவில் பலம் பெரிய அளவில் சோதிக்கப்படாத தருணத்தில் இஸ்ரேலை ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு சங்கடமான நிலையில் நிறுத்தி, ராஜதந்திர முயற்சிகளின் மூலமாக ஒரு முக்கிய தலைவராக உருப்பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் போருக்கு நடுவே இரு நாட்டிற்கும் இடையே மத்தியஸ்தராக பணியாற்றுவது என்பது இஸ்ரேலுக்கு பாதகமாக அமையலாம். சிரியாவில் பாதுகாப்பு ஒருங்கமைப்பிற்காக க்ரெம்ளினை நம்பியிருக்கும் இஸ்ரேல் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திற்காக மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. இந்த சூழலில் விளாடிமிர் புதினின் கோபத்திற்கு இஸ்ரேலை ஆளாக்குவது தவிர்க்க முடியாத சங்கடங்களை ஏற்படுத்தும். இருப்பினும் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்ததாகக் கூறப்படும் முயற்சிகள் பலனைத் தருமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. உக்ரைன் விவகாரத்தில் எதிர்பாராத திருப்பத்தை தர முயற்சிக்கும் இஸ்ரேலின் பங்கு என்ன என்பதை நாம் இங்கே காண்போம்.
பென்னட்டின் பந்தயம்
கடந்த ஆண்டு, முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யஹூவை பதவி நீக்கம் செய்வதில் கருத்தியல் ரீதியாக வேறுபட்ட 8 கட்சிகளின் உடன்படிக்கையின் படி பென்னட் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
நாட்டின் உயர்த் தொழில்நுட்பத்துறையில் மில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டிய யூத மதத்தை சேர்ந்த பென்னட் கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சரவைகள்ளில் பணியாற்றியுள்ளார். ஆனால் பெஞ்சமினின் ஆளுமை மற்றும் உலக அரங்கில் அவருக்கு இருந்த அனுபவம் பென்னட்டிடம் இல்லை.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் முன்னாள் கே.ஜி.பி. ஏஜெண்ட்டான புடினுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வது பென்னட்டை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சோதிக்கும்.
உள்நாட்டில் உள்ள எதிர்க்கட்சியினர், பென்னட் ஆட்சிக்கு வந்த விதம் சட்டத்திற்கு புறம்பானது என்று கருதுகின்றனர். மேலும் மக்கள் மத்தியில் அவருக்கு சிறந்த ஆதரவும் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவுக்கு எதிராக இஸ்ரேலின் மேற்கத்திய கூட்டாளி நாடுகள் பொருளாதார தடை விதித்த நிலையில், பென்னட் காட்டிய தயக்கம் அவருக்கு எதிராக மேலும் பல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்துகளை அவர் பதிவு செய்தாலும் கூட ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக கண்டனம் செய்வதையும் கூட பென்னட் நிறுத்திக் கொண்டார்.
மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் அதிகரித்ததாலும் கூட பென்னட் புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவருடனும் தொடர்பில் இருந்தார். மாஸ்கோவிற்கு வருகைப் புரிந்ததன் மூலம், போருக்கு பின்னால் ரஷ்ய அதிபரை சந்தித்த ஒரே மேற்கத்திய தலைவர் என்ற பெருமையை பெற்றார்.
உயர்மட்ட நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி மத்தியில் அவரின் ஈடுபாடு அவரின் அரசியல் அதிர்ஷ்டத்திற்கு உயிர் கொடுக்கலாம்.
டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் ஐரோப்பிய விவகார நிபுணரான எஸ்தர் லோபாட்டின் “பென்னட் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டார். ”தேர்தலில் பாதிக்கப்பட்டு, பொது விமர்சனத்திற்கு ஆளான ஒரு நபர் தற்போது தன்னுடைய தொப்பியில் இருந்து முயல்களை வெளியே எடுக்கும் ஜாலவித்தைக்காரராக மாறியிருக்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.
ராஜதந்திர நடவடிக்கைகள்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சுமூகமான உறவைக் கொண்டிருக்கும் ஒரு சில நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. 100 டன் மதிப்பிலான உதவிப் பொருட்களை வழங்கியதோடு உக்ரைனில் மருத்துவமனை ஒன்றை அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களுக்கு தாயகமாக திகழ்கிறது உக்ரைன். ஏற்கனவே அதில் பலர் இஸ்ரேலை நோக்கி சென்றுவிட்ட நிலையில் மேலும் பலர் இஸ்ரேலுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ரஷ்யாவுடனான உறவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. சிரியாவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பணிகளுக்காக, சிரியாவில் பாதுகாப்பு படையினரைக் கொண்டுள்ள ரஷ்யாவையே அதிகம் நம்பியுள்ளது. அந்த பகுதியில் தான் இஸ்ரேல் தொடர்ந்து தங்களின் எதிரிகளின் இலக்கு என்று அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
வியன்னாவில் அணு திட்டம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இஸ்ரேல் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் இந்த திட்டம் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளை போதுமான அளவு கட்டுப்படுத்தவில்லை என்று கூறி, அந்த எதிர்ப்பை ரஷ்யாவுடன் அடிக்கடி விவாதித்தது.
திடீர் மத்தியஸ்த ஈடுபாட்டினால், ரஷ்யா தொடர்ந்து போரை தீவிரப்படுத்தினாலும் கூட, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து விலகி தன்னுடைய நடுநிலைமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் நிலையை ஏற்படுத்தியுள்ளது இஸ்ரேல். எந்த ஒரு தவறான நடவடிக்கையும், முடிவும் புடினுடனான உறவை மேலும் மோசமடைய செய்யும். பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையும் பட்சத்தில்,புடின் அவரை வென்றுவிட்டார் என்று வெளிப்படையாக தோன்றினாலும், நெருக்கடி நிலைமை மேலும் மோசமடைய காரணம் இவர் தான் என்ற குற்றச்சாட்டுக்கு அவர் ஆளாகலாம்.
மாஸ்கோவுக்கு எதிராக எந்தவிதமான வெளிப்படையான எதிர்ப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடாத ஒரே ஒரு மேற்கத்திய நாடான இஸ்ரேல் க்ரெம்ளினுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே அதிக அழுத்தத்தை சந்திக்கும் சிக்கலான இடத்தில் இருக்கும் இணைப்புப் புள்ளியாக செயல்படும்.
வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட இஸ்ரேலின் முக்கியமான கடமைகளில் ஒன்று இது என்று அவர் பயணத்திற்கு பிறகு அமைச்சரவையில் தெரிவித்தார். பாலஸ்தீனியர்கள் மற்றும் அரபு நாடுகளுடன் சர்வதேச அமைப்புகள் நடத்திய மத்தியஸ்த்தால் பயனடையும் நாடான இஸ்ரேல் இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து முன்னேறியுள்ளது.
புடினுடன் ஒருவரும் பேசவில்லை. இஸ்ரேல் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேசக் கூடிய ஒரு நாடாக இருக்கிறது என்று கூறுகிறார் இஸ்ரேல் நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றிய வெரா மிக்கிலின் ஷாப்பிர் . ஆனால் என்ன நடக்கிறதோ அது தான் முன்னேறிச் செல்லும் என்றும் தெரிவித்தார்.
துருக்கி, ஃபிரான்ஸ் போன்ற மிகப்பெரிய தலைகளே போரை நிறுத்தும் முயற்சியில் தோல்வி அடைந்த நிலையில் இஸ்ரேலிடம், மிக முக்கியமான நெருக்கடி விவகாரத்தில் சரியான வழியில் மத்தியஸ்த்தம் செய்ய போதுமான அம்சங்கள் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு பக்கம் சர்வதேச அளவில் தன்னை பென்னட், ஒரே இரவில் உயர்த்திக் கொண்டார். மேலும் இதன் மூலம் பல அரசியல் புள்ளிகளை இஸ்ரேலுக்காக வென்றுள்ளார். ஆனால் மற்றொரு பக்கம் அவருக்கு மட்டுமின்றி, இஸ்ரேல் தேசத்திற்கும் உலகில் அதன் நிலைப்பாட்டிற்கும் எதிராக ஒரு ஆபத்தான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளார் என்று இஸ்ரேலி வல்லா செய்தி தளத்தில் பாரக் ராவிட் எழுதியுள்ளார். உக்ரேனிய விவகாரத்தின்ஆழம் முழுவதுமே தெரியாமல் பிரதமர் மூழ்கிவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.