/tamil-ie/media/media_files/uploads/2019/11/A8.jpg)
Why it is unfair to blame Punjab farmers alone for delhi pollution - டெல்லி காற்று மாசுபாடு - பஞ்சாபை மட்டும் குறை சொல்வது ஏன் நியாயமற்றது தெரியுமா?
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுவரை இல்லாத அளவு காற்று மாசு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தாண்டு டெல்லியில் காற்று மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கடுமையாக அதிகரித்துள்ளது. அங்கு காணப்படும் மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஏராளமானோர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு வரும் 5ம் தேதி வரை விடுமுறை அறிவித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
டெல்லியை சுற்றியுள்ள உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைப்புற பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடைக்கு பிறகு காய்ந்த சருகுகளை எரிப்பதால் பெருமளவு காற்று மாசு ஏற்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் நிலத்தில் சருகுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் மீது அதிக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த முழு தகவல் இங்கே,
நவம்பர் மதியம் 3 மணி நிலவரப்படி, டெல்லியின் சராசரி AQI (காற்று தரம் குறியீடு) 486 ஆக இருந்தது. ஃபரிதாபாத் 484; காசியாபாத் 481; குர்கான் 464; நொய்டா 490, கிரேட்டர் நொய்டா 472 என்று இருந்தன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளிவிவரங்களின்படி, இவை அனைத்தும் ‘கடுமையான காற்று மாசு' என்ற நிலையில் இருந்தது.
டெல்லி 399 (மிக மோசம்); ஃபரிதாபாத் 404 (கடுமையான பாதிப்பு); காசியாபாத் 453 (கடுமையான பாதிப்பு); குர்கான் 364 (மிக மோசம்); நொய்டா 432 (கடுமையான பாதிப்பு); கிரேட்டர் நொய்டா 438 (கடுமையான பாதிப்பு) என்ற நிலையில் இருந்தன.
நவம்பர் 3 ம் தேதி நண்பகல் வரை பஞ்சாபின் முக்கிய நகரங்களில் AQI நிலைமை பின்வருமாறு: சிபிசிபி படி, அமிர்தசரஸ் 253 (மோசம்); பதிந்தா 278 (மோசம்); சண்டிகர் 238 (மோசம்); ஜலந்தர் 327 (மிக மோசம்); லூதியானா 323 (மிக மோசம்); பாட்டியாலா 377 (மிக மோசம்) என்று இருந்தன.
நவம்பர் 2 அன்று மாலை 4 மணி நிலவரப்படி, அமிர்தசரஸ் 265 (மோசம்); பதிந்தா 308 (மிகவும் மோசம்); சண்டிகர் 279 (மோசம்); ஜலந்தர் 283 (மோசம்); லூதியானா 305 (மிகவும் மோசம்); பாட்டியாலா 263 (மோசம்) என்ற நிலையில் இருந்தன.
நவம்பர் 2 ஆம் தேதி வரை பஞ்சாபில் சருகுகளை எரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை என்ன?
பஞ்சாபில் நவம்பர் 2 ஆம் தேதி வரை, மொத்தம் 22,458 வயல்களில் சருகுகள் எரிக்கப்பட்டதாக வழக்குகள் பதிவாகியுள்ளது. அதுவும், அக்.31ம் தேதி ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான தீ விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டது. அன்று மட்டும் 3,135 வழக்குகள்.
13 நகரங்களில் வெள்ளிக்கிழமை ‘கடுமையான பாதிப்பு’ எனும் AQI பதிவு செய்யப்பட்ட ஹரியானாவில் சற்று குறைவாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த பருவத்தில் அக்டோபர் 31 வரை ஹரியானாவில் 4,288 வயல்களில் சருகுகள் எரிக்கப்பட்டுள்ளன.
எனவே, மாசுபட்ட காற்று பஞ்சாபிலிருந்து டெல்லி மற்றும் அதற்கு அப்பால் இந்தோ-கங்கை சமவெளிகளில் வீசுகிறதா?
பரவலாக, ஆம். நாட்டின் வடமேற்கில் பஞ்சாப் அமைந்துள்ளது; ஹரியானா பஞ்சாபின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் அமைந்துள்ளது. டெல்லி ஹரியானாவின் கிழக்கிலும், பஞ்சாபின் தென்கிழக்கில் உள்ளது. ஆண்டின் இந்த நேரத்தில், பஞ்சாப் மீது காற்று பொதுவாக வடக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசுகிறது. ஹரியானாவும் டெல்லியும் பஞ்சாபிலிருந்து காற்றைப் பெறுகின்றன, இது அவர்களின் வடமேற்கே உள்ளது.
ஆனால் காற்றின் உயரம் மற்றும் வேகம் குறித்து கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது.
“தற்போது பஞ்சாபில் காற்று வடமேற்கு திசையில் வீசுகிறது. இவை கடந்த பல நாட்களாக மணிக்கு 2 கி.மீ.க்கு குறைவான வேகத்தில் வீசும் ‘அமைதியான காற்று’ ஆகும். பல இடங்களில், ‘ஏர் லாக்கிங்’ கூட இருக்கிறது” என்று சண்டிகரின் இந்திய வானிலை ஆய்வு இயக்குநர் (ஐஎம்டி) இயக்குநர் டாக்டர் சுரிந்தர் பால் கூறுகிறார். காற்றின் மெதுவான வேகம் காரணமாக, பஞ்சாபிலிருந்து அதிக மாசு ஹரியானா மற்றும் டெல்லியை நோக்கி செல்லவில்லை என்று டாக்டர் பால் கூறினார்.
பஞ்சாபிற்கு மேலே கிட்டத்தட்ட நிலையான காற்று வீசுவதால் மேற்பரப்பில் இருந்து 1-2 கி.மீ தூரத்தில் காற்று வீசுகிறது என்று வானிலை துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்; பொதுவாக மேற்பரப்புக்கு நெருக்கமான இந்த காற்று, 10-15 மீட்டர் உயரத்தில் வீசுகிறது. அவை மாசுபட்ட காற்றை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
டெல்லியின் மாசுபாட்டில் பஞ்சாப் வகித்த பங்கு என்ன?
டெல்லியின் மாசுபாட்டிற்கு பஞ்சாபை மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்று டாக்டர் பால் கூறுகிறார். குளிர்காலத்தின் தொடக்கத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல் சருகுகள் எரிக்கப்படுகின்றன, காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, காற்றின் வேகம் மிகவும் மெதுவாக அல்லது அமைதியாக இருக்கும்.
சருகிலிருந்து வரும் புகை, தொழில்துறை மற்றும் வாகன மாசுபாடு, ஏர் லாக்கிங்கை மேலும் வலிமையாக்குகிறது அவை மழையால் அல்லது வேகமான காற்றால் உடைக்கப்படலாம் என்று டாக்டர் பால் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.