Advertisment

பேரழிவுக்கு கொண்டு செல்லும் நிலக்கரி உபயோகம்: உலக நாடுகள் தவிர்க்க முடியாதது ஏன்?

இந்தியாவில் ஏழ்மையான மாநிலமாகவும், நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்ட மாநிலமாகவும் ஜார்க்கண்ட் திகழ்கிறது. அதே சமயம், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இந்திய மாநிலமாகவும் உள்ளது.

author-image
WebDesk
New Update
பேரழிவுக்கு கொண்டு செல்லும் நிலக்கரி உபயோகம்: உலக நாடுகள் தவிர்க்க முடியாதது ஏன்?

ஒவ்வொரு நாளும், ராஜூ என்ற இளைஞர், தனது சைக்கிளில் பெடல் அழுத்துவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலநிலையைப் பேரழிவிற்குக் கொண்டு செல்கிறார் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

Advertisment

தினந்தோறும், சுரங்கங்களிருந்து எடுக்கப்படும் 200 கிலோ வரையிலான நிலக்கரியை தனது சைக்கிளில் வைத்துக்கொண்டு பயணம் செய்கிறார். போலீஸ் மற்றும் வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக பெரும்பாலும் இரவில் சைக்கிள் ஓட்டும் ராஜூ, சுமார் 16 கிமீ பயணித்து வர்த்தகர்களுக்கு நிலக்கரியை 2 டாலருக்கு வழங்குகிறார். ராஜூவை போல், ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியில் இதன் மூலம் தான் பிழைப்பு நடத்துவதாக கூறப்படுகிறது.

காலநிலை பேரழிவுக்கு எடுத்துசெல்லும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தான் ஸ்காட்லாந்தில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு தற்போது நடைபெற்றது.

காலநிலை மாற்றத்தின் பேரழிவைத் தவிர்ப்பதற்கு, பசுமை இல்ல வாயுக்களின் மிகப்பெரிய ஆதாரமான நிலக்கரியை எரிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஆனால், மக்கள் வாழ்வாதாரத்திற்காக நிலக்கரியை நம்பியிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மின்சாரத்திற்கான உலகின் மிகப்பெரிய எரிபொருளாக நிலக்கரி உள்ளது.இதுமட்டுமின்றி ராஜுவைப் போன்ற பலர், தங்கள் வாழ்நாள் முழுவதும் அதனை நம்பியிருக்கிறார்கள். ஏழைகளைத் துக்கத்திலிருந்து நிலக்கரி காப்பாற்றியுள்ளதாக ராஜூ கூறுகிறார்.

COP26உச்சநிலை மாநாட்டுத் தலைவர் அலோக் ஷர்மா பேசுகையில், "நிலக்கரி எரிக்கப்படுவதை தடுப்பது சில வளர்ந்த நாடுகளில் சாத்தியம். ஆனால், வளரும் நாடுகளில் அவ்வளவு எளிது அல்ல. வளர்ந்த நாடுகளைப் போல "கார்பன் ஸ்பேஸ்" வளர அனுமதிக்கப்பட வேண்டும். நிலக்கரி போன்ற மலிவான எரிபொருளை எரிப்பது, மின்சாரம் உற்பத்தியுடன் எஃகு உற்பத்தி போன்ற தொழில்துறை செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

சராசரியாக, வழக்கமான இந்தியரை விட அமெரிக்கர் 12 மடங்கு அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் மின்சாரம் இல்லாத 27 மில்லியன் மக்கள் உள்ளனர்.

பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது இந்தியாவில் மின்சார தேவை அடுத்த இருபது ஆண்டுகளில் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என்றும், மேலும் கடுமையான வெப்பம் ஏர் கண்டிஷனிங்கிற்கான தேவையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்

publive-image

உலகின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான கோல் இந்தியா 2024 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியை ஆண்டுக்கு 1 பில்லியன் டன்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொழிற்சங்க மையத்தின் செயலர் ராமானந்தன் கூறுகையில், " நிலக்கரி விளைவுகள் குறித்து பாரிஸ், கிளாஸ்கோ அல்லது டெல்லியில் மட்டுமே கலந்துரையாடல் நடைபெறுகின்றன. அவை இந்தியாவின் நிலக்கரி பெல்ட்டில தொடங்கவில்லை. இங்கு நிலக்கரி பணி 100 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இது மேலும் தொடரும் என தொழிலாளர்கள் நம்புகின்றனர்" என்றார்.

காலநிலை மாற்றத்திற்கான ஆய்வுகளை நடத்தும் குழு அறிக்கையின்படி, நிலக்கரி எரிப்பதன் விளைவு உலக அளவிலும் உள்நாட்டிலும் உணரப்படும்.கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்காவிட்டால், இவ்வுலகம் இன்னும் தீவிர வெப்ப அலைகள், ஒழுங்கற்ற மழைப்பொழிவு,அழிவுகளுமான புயல்களை வரும் ஆண்டுகளில் சந்திக்க நேரிடும் என தெரிவிக்கின்றனர்.

வாஷிங்டனில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்துப் பயிலும் சந்தீப் பாய் கூறுகையில், " 2021இல் இந்திய அரசு நடத்திய ஆய்வில், இந்தியாவில் ஏழ்மையான மாநிலமாகவும், நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்ட மாநிலமாகவும் ஜார்க்கண்ட் திகழ்கிறது. அதே சமயம், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இந்திய மாநிலமாகவும் உள்ளது. அங்கு சுமார் 3 லட்சம் பேர் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கங்களில் நேரடியாக வேலை செய்தும், நிலையான சம்பளம் பெறுகின்றனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் நிலக்கரியுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயணம் செய்கிறார்கள்" என்கிறார்.

இந்தியாவின் நிலக்கரி பெல்ட் எஃகு மற்றும் செங்கல் தயாரிப்பு போன்ற எரிபொருள் தேவைப்படும் தொழில்களால் நிறைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய முதலாளிகளான இந்திய ரயில்வே, நிலக்கரியைக் கொண்டு செல்வதன் மூலம் தங்கள் வருவாயில் பாதியை ஈட்டுகிறது.

நரேஷ் சவுகான்(50) - ரினா தேவி (45) தம்பதிக்கு, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அவர்களை நிலக்கரியை நாட வைத்தது. தன்பாத்தில் ஜாரியா நிலக்கரி சுரங்கம் அருகில் வசிக்கும் இவர்கள், நான்கு கூடை நிலக்கரியை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதன் 3 டாலர் சம்பாதிக்கின்றனர். அவர்களது வீட்டருகே எப்போது நிலக்கரி எரிப்பதன் புகை சூழ்ந்துகொண்டிருக்கும்.

பரம்பரை பரம்பரையாக நிலக்கரிச் சுரங்கங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் குடும்பங்களில் ஒருசிலர் சொந்தமாக வைத்திருக்கும் நிலத்தில் விவசாயம் செய்கின்றனர். மற்றவர்கள் வேறு எந்த தொழிலுக்குச் செல்லமுடியவில்லை, நிலக்கரி, கல் மற்றும் நெருப்பு மட்டுமே உள்ளது. இங்கே வேறு எதுவும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் சந்தீப் பேசுகையில், தற்போது, உலகம் நிலக்கரி பயன்படுத்துவதைக் கைவிடவேண்டும் என வலியுறுத்தி வருவதால், அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்வி குறியாகிறது. ஏற்கனவே, நிலக்கரி குறைந்த லாபம் ஈட்டுவதால் அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியாவும், நிலக்கரியைச் சார்ந்துள்ள பிராந்தியங்களைக் கொண்ட பிற நாடுகளும், தங்கள் பொருளாதாரத்தை பன்முகப்படுத்த வேண்டும். அதற்கு, அதனை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி நிலக்கரி பணியிலிருந்து விலக வைக்க வேண்டும்.

இந்த செயல்முறையில் தான் அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.இல்லையெனில், பலரும் மூர்த்தி தேவியாக மாற வேண்டிய நிலை ஏற்படும்" என கூறுகிறார்.

கணவர் இன்றி நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மூர்த்தி தேவி பணியாற்றி நிலக்கரி சுரங்கம் 4 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அவருக்கு கிடைக்கவேண்டிய நிலுவைத் தொகையும் கிடைக்கவில்லை. வறுமை பிடியால், வேறு வழியின்றி நிலக்கரியைத் திருடி விற்பனை செய்கிறார். சில நாள்களில், டாலரில் சம்பாதித்தாலும், சில் நாள்கள் பணமின்றி அடுத்தவரின் உதவியை நாட வேண்டிய கட்டாயமாகும். நிலக்கரி இருந்தால் நாம் வாழ்வோம். நிலக்கரி இல்லை என்றால், நாங்கள் வாழ மாட்டோம்" என அவர் தெரிவிக்கிறார்.

இத்தகைய முறையில் இந்தியர்களின் வாழ்வியலுடன் நிலக்கரி இணைந்துள்ளது. அதனை முழுவதுமாக அகற்றுவது, பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக மாற்றுவது தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jharkhand Climate Change
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment