Advertisment

கொரோனா மாறுபாடுகள்: டெல்டாவுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஏன் கப்பாவுக்கு இல்லை?

உண்மையில், கப்பா மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட குறைவான ஆபத்தானது என்று முன்னர் மதிப்பிடப்பட்டது. டெல்டா மாறுபாடு தற்போது இந்திய மக்கள் தொகையில் மிகவும் ஆதிக்கம் செலுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம்.

author-image
WebDesk
New Update
Kappa variant of Covid-19

 Amitabh Sinha

Advertisment

Kappa variant of Covid-19 : லக்னோவில் அமைந்துள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதல் கட்ட SARS-CoV-2 வைரஸ் ஜீனோம் வரிசைப்படுத்தல் ஆராய்ச்சிகளின் முடிவுகளை உத்திரபிரதேச மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. மொத்தமாக ஆராயப்பட்ட 109 மாதிரிகளில் 107 மாதிரிகளில் டெல்டா மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மீதம் உள்ள இரண்டு மாதிரிகள் கப்பா மாறுபாட்டால் பாதிப்படைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

டெல்டா மாறுபாடு குறித்து நாம் அதிகம் விவாதித்துள்ளோம். ஏன் என்றால் இந்தியாவில் அதிகப்படியான தொற்றுகள் உருவாக காரணமாக இருந்த மாறுபாடு இதுவாகும். ஆனால் கப்பா மாறுபாடு குறித்து இதுவரை பேசவில்லை. இந்த வைரஸ் மாறுபாட்டிற்கு இதற்கு முன்பு வேறொரு பெயர் இருந்தது முக்கிய காரணமாகும். மேலும் உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தான் இந்த மாறுபாட்டிற்கு கப்பா என்று பெயர் வைத்தது. தற்போது இந்திய மக்கள் தொகையில் இந்த மாறுபாட்டினால் ஏற்படும் தொற்றுகள் குறைவாகவே உள்ளது.

மேலும் படிக்க : 40 லட்சத்தை தாண்டிய கொரோனா மரணங்கள்; இறப்பு விகிதங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணம் என்ன?

கொரோனா வைரஸின் டெல்டா மற்றும் கப்பா மாறுபாடுகள் என்ன?

இவை இரண்டும் ஒரே மூலத்தில் இருந்து உருவான இரண்டு மாறுபாடுகள் ஆகும். கிட்டத்தட்ட சகோதரர்கள் என்று கூறமுடியும். டெல்டா மாறுபாடு இரட்டை பிறழ்வு வைரஸ் மாறுபாடு அல்லது B.1.617 என்று அழைக்கப்பட்டது. எந்த நாட்டில் இருந்து மாறுபாடுகள் தோன்றுகிறதோ, அந்த நாட்டின் பெயர் அடிப்படையில் மாறுபாடுகளுக்கு பெயர்கள் வழங்கப்பட்டன்ன. யூ.கே. வேரியண்ட், தென் ஆப்பிரிக்கா மாறுபாடு, ப்ரேசில் மாறுபாடுகள் என்று வழங்கப்பட்டது. B.1.617 இந்திய மாறுபாடு என்று வழங்கப்பட்டது. நாட்டின் பெயர்கள் அடிப்படையில் மாறுபாடுகளுக்கு பெயர் வைப்பதை தவிர்க்க உலக சுகாதார அமைப்பு கிரேக்க எண் முறைகளில் பெயர்களை வைக்க பரிந்துரை செய்தது.

மே மாத இறுதியில் இருந்து கிரேக்க எண்களில் மாறுபாடுகள் பெயரிடப்பட்டு வருகின்றன. அந்த சமயத்தில் இரட்டை பிறழ்வு மாறுபாடு என்று வரையறுக்கப்பட்டு வந்த B.1.617 வைரஸ், மேலும் மூன்று முக்கிய மாறுபாடாக பிறழ்ந்தது. அவைகள் முறையே B.1.617,1, B.1.617.2, மற்றும் B.1.617.3 என்று வழங்கப்பட்டது.

s B.1.617,1 மாறுபாடு கப்பா என்று வழங்கப்பட்டது. B.1.617.2, மாறுபாடு டெல்டா என்று வழங்கப்பட்டது. B.1.617.3 மாறுபாடு பெரிய அளவில் பரவாத காரணத்தால் குறிப்பிட்ட பெயர் ஏதும் வழங்கப்படவில்லை. இங்கிலாந்தில் பரவிய B.1.1.7-க்கு ஆல்பா என்று பெயரிடப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் பரவிய மாறுபாடுக்கு B.1.351 பீட்டா என்று பெயரிடப்பட்டது. ப்ரேசில் மாறுபாடு p.1-க்கு காமா என்று பெயரிடப்பட்டது. பொது விதாதத்திற்கு ஏற்ற வகையில் இந்த பெயர்கள் வழங்கப்பட்டாலும் இந்த மாறுபாடுகளுக்கு தனித்தனியே அறிவியல் பெயர்கள் உள்ளன.

உ.பி.யில் ஒரு சில மாதிரிகளில் காணப்படும் கப்பா மாறுபாடு ஒரு புதிய தோற்றம் அல்ல. இது இப்போது பல மாதங்களாக இந்திய மக்கள் தொகையில் உள்ளது.

மேலும் படிக்க : கொரோனாவின் லாம்ப்டா மாறுபாடு என்றால் என்ன? அது குறித்து இந்தியர்கள் தற்போது அச்சப்பட வேண்டுமா?

கவலை அளிக்க கூடிய வைரஸ் இல்லை

உத்திர பிரதேச மாநிலத்தில் கப்பா மாறுபாடு ஒரு புதிய அச்சுறுத்தல் அல்ல என்றும், இதற்கு முன்னர் மாநிலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கூட இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவை ஒரு புதிய மாறுபாடு அல்ல, ஏப்ரல் முதல் கப்பா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே கவலைப்பட ஒன்றுமில்லை ”என்று மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) அமித் மோகன் பிரசாத் கூறினார்.

உண்மையில், கப்பா மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட குறைவான ஆபத்தானது என்று முன்னர் மதிப்பிடப்பட்டது. டெல்டா மாறுபாடு தற்போது இந்திய மக்கள் தொகையில் மிகவும் ஆதிக்கம் செலுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம். அவர்களின் பெற்றோர் பரம்பரை (பி .1.617, அல்லது இரட்டை விகாரி) முதன்முதலில் விதர்பாவில் உள்ள மாதிரிகளிலிருந்து கண்டறியப்பட்டது, இது இந்தியாவில் இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளுக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. இந்த மாறுபாடு மக்கள் தொகையில் முந்தைய பிறழ்வுகளைக் காட்டிலும் அதிகமாக பரவியது. இது பின்னர் பி .1.617 இலிருந்து வெளிவந்த மூன்று துணைவாரிசுகளில் (Sub-lineages) இருந்து மாறியது, டெல்டா மாறுபாடு மிகவும் பரவக்கூடியது, எனவே மிகவும் பரவலாக இருந்தது.

உலக சுகாதார அமைப்பு கூட கப்பா வைரஸை வேரியண்ட் ஆஃப் இன்ட்ரெஸ்ட் என்று வரையறை செய்தது. ஆனால் variant of concern என்று டெல்டா வைரஸ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது மிகப்பெரிய அச்சுறுத்தலை குறிக்கிறது. ஆரம்பத்தில் மகாராஷ்டிராவில் குவிந்திருந்தாலும், டெல்டா மாறுபாடு சரியான நேரத்தில் மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. கப்பா மாறுபாடும் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அதன் பரவலானது டெல்டா மாறுபாட்டை விட மிகக் குறைவு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Delta Variant
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment