கன்னட மொழி ஆர்வலர்கள் மற்றும் கன்னட அரசியல் குழுக்களின் கோரிக்கைகளுக்கு பணிந்து, கர்நாடக அரசு சமீபத்தில் கன்னட மொழி விரிவான மேம்பாட்டு மசோதாவை தாக்கல் செய்தது.
இந்தச் சட்டம் அரசு வேலைகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது மற்றும் மாநிலத்தில் உருவாக்கப்படும் தனியார் வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குகிறது.
கர்நாடகா இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க முயல்வது இதுவே முதல் முறையா?
இல்லை. 1984 ஆம் ஆண்டு வரை, சரோஜினி மகிஷி கமிட்டி கர்நாடகாவில் கன்னடர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக 58 பரிந்துரைகளை வழங்கியது.
இந்தப் பரிந்துரைகள் மிகவும் கடினமானவை. இவைகளை செயல்படுத்த முடியவில்லை. ஏனெனில், அதில், அனைத்து பொதுத்துறை பிரிவுகளிலும் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு, மத்திய அரசு துறைகள் மற்றும் கர்நாடகாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ வேலைகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு கோரப்பட்டது.
இல்லையென்றால் குறைந்தப்பட்சம் 65 முதல் 80 சதவீதம் கோரப்பட்டது. இந்த ஒதுக்கீடு குரூப் ஏ மற்றும் பி பிரிவு பணி வகைகளிலும் கோரப்பட்டது.
சரோஜினி மகிஷி அறிக்கையை அமல்படுத்தாமல் புதிய மசோதாவை அரசாங்கம் முன்மொழிந்தது ஏன்?
கன்னட குழுக்கள் சமர்ப்பித்த நூற்றுக்கணக்கான மனுக்களில் பரிந்துரைகளை அமல்படுத்துவது ஒரு பகுதியாக இருந்தாலும், இதை செய்வது உரிமை மீறல்கள் உட்பட பல அரசியலமைப்பு சவால்களுக்கு வழிவகுக்கும் என்று மாநில அரசு கருதுகிறது.
இப்போது ஏன் சட்டம் கொண்டு வர வேண்டும்
இதில் முக்கிய காரணம், கன்னடம் புறக்கணிக்கப்படுகிறது என தொடர்ந்து ஆர்வலர்கள் கூக்குரல் எழுப்பிவருகின்றனர். ‘இந்தி திணிப்பு’ விவாதம் வேறு நிலைமையை மோசமாக்கியுள்ளது.
இதன் விளைவாக மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதுபோன்ற பிரச்சாரங்கள் தேர்தல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் பாஜக அணிகளுக்குள் இருந்தது.
சமீபத்தில், பொதுத்துறை வங்கிகளில் கன்னடம் பேசாத ஊழியர்கள்-குறிப்பாக இந்தி மொழி பேசும் மாநிலத்தை சேர்ந்தபணியாளர்களின் வருகையால் மாநிலத்தின் சில பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.
இந்தி பயன்படுத்துவது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், மாநிலத்தில் இருந்து செயல்படும் பிற பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட புதிய ஊழியர்களின் பட்டியல்களில் ஒரு சில உள்ளூர்வாசிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
இதனால் உள்ளூர்வாசிகளின் கோபம் அதிகரித்தது.
சட்டம் என்ன எதிர்பார்க்கிறது?
கன்னட மொழி பேசுபவர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிப்பதைத் தவிர, உயர்கல்வி நிறுவனங்களில் கன்னடத்தைப் பயன்படுத்தவும், உள்ளூர் மக்களைப் பணியமர்த்தும் தொழில்களில் கன்னடத்தைப் பயன்படுத்தவும் மசோதா வலியுறுத்துகிறது.
கன்னட நடுநிலைப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு உயர்நிலை, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறைக் கல்வியில் இடஒதுக்கீடு அளிக்க கோருகிறது.
அந்த வகையில், மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வ மற்றும் சட்டப்பூர்வமற்ற அமைப்புகள், இணை நிறுவனங்களில் வேலை தேடுவதற்கு கன்னடத்தை இன்றியமையாத மொழியாக அறிமுகப்படுத்துதல் ஆகியவை இந்த மசோதாவில் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், மாநிலத்தின் தொழில் கொள்கையின்படி, கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், தொழில்கள் சலுகைகள், வரிச்சலுகைகள் மற்றும் வரிகளை ஒத்திவைக்க உரிமை பெறும்.
கன்னட மொழி, சட்டத்தின்படி, மாநிலம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் அனைத்து உத்தியோகபூர்வ மற்றும் நிர்வாக கடிதங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
அரசு தனது சில கடிதப் பரிமாற்றங்களில் ஆங்கிலத்தை மட்டும் பயன்படுத்தியதற்காக சில குறைகளை எதிர்கொண்டது. இந்தச் சட்டத்தை செயல்படுத்த மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
மசோதா எப்போது நிறைவேற்றப்படும்?
இந்த மசோதா கடந்த வாரம் சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் முன், சட்டசபை மற்றும் சட்டப் பேரவையில் விவாதம் நடத்தப்படும்.
இருப்பினும், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“