Advertisment

பானி பூரி, கோபி மஞ்சூரியன் விற்பனையாளர்கள் மீது கர்நாடகா கடும் நடவடிக்கை எடுப்பது ஏன்?

கர்நாடகாவின் உணவுப் பாதுகாப்பு அமைப்பு ஜூலை 2024-ல், பானி பூரி மற்றும் ஷவர்மாவின் மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டறிந்தது.

author-image
WebDesk
New Update
pani puri 1

கடந்த 5 மாதங்களில், சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் உணவு விற்பனையாளர்கள் சுகாதாரமற்ற நடைமுறைகள் பற்றிய புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையால் 4,000 உணவு மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் உணவுப் பாதுகாப்பு அமைப்பு ஜூலை 2024-ல், பானி பூரி மற்றும் ஷவர்மாவின் மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கண்டறிந்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Why Karnataka is cracking down on vendors of pani puri and gobi manchurian

கடந்த 5 மாதங்களில், சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் உணவு விற்பனையாளர்கள் சுகாதாரமற்ற நடைமுறைகள் பற்றிய புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையால் 4,000 உணவு மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

கோபி மஞ்சூரியன், பானி பூரி போன்ற பல தெரு உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

உணவு விற்பனையாளர்கள் அல்லது ஆபரேட்டர்கள் (FBOs) செயற்கை உணவு வண்ணம் மற்றும் பிற புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக மாநிலம் தழுவிய நடவடிக்கை உள்ளது. கடந்த ஐந்து மாதங்களில், சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் உணவு விற்பனைகளின் சுகாதாரமற்ற நடைமுறைகள் பற்றிய புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையால் 4,000 உணவு மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

புகார்களுக்குப் பிறகு நடவடிக்கை

கர்நாடகாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையர் ஸ்ரீனிவாஸ் கே கூறுகையில், சில உணவுப் பொருட்களை உட்கொண்ட பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் குறித்து பல புகார்கள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, செயற்கை வண்ணம் கலப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை தீர்மானித்துள்ளது. கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய், சிக்கன் கபாப் போன்ற உணவுப் பொருட்களில் இதுபோன்ற நிறமூட்டும் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்து மார்ச் மாதம் முதல் 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

பானி பூரி மற்றும் ஷவர்மாவின் மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் (அவை புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை) மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றைக் கண்டறிந்த பின்னர், ஜூலையில் தடை விதிக்கப்பட்டது.

தீங்கு விளைவிக்கும் நிறமூட்டும் வேதிப் பொருட்கள்

உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை செய்ததில், உணவுப் பொருட்களில் டார்ட்ராசின், சன்செட் யெல்லோ, ரோடமைன் பி, பிரில்லியன்ட் ப்ளூ போன்ற செயற்கை நிறமூட்டிகள் இருப்பது தெரியவந்தது. இந்த பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் அல்லது நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உண்மையில், ரோடமைன் பி - சிவப்பு நிறத்தைக் கொடுக்கப் பயன்படுகிறது - பொதுவாக ஜவுளிகள் போன்ற பரந்த அளவிலான பொருட்களுக்கு வண்ணத்தைச் சேர்க்க செயற்கை சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாயத்தின் வெளிப்பாடு கண் பார்வையை சேதப்படுத்தும் மற்றும் சுவாசக் குழாயை எரிச்சலடையச் செய்யும்.

உணவு விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு விற்பானையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, உணவுப் பாதுகாப்புத் துறை இரண்டு வகையான மாதிரிகளை சேகரிக்க வேண்டும் - ஒரு கணக்கெடுப்பு மாதிரி மற்றும் சட்ட மாதிரி. இது முதலில் ஒரு உணவுப் பொருள் விற்பனையாளரிடம் இருந்து ஒரு கணக்கெடுப்பு மாதிரியை சேகரித்து சோதிக்கிறது. இந்த மாதிரி பாதுகாப்பற்றது என கண்டறியப்பட்டால், மேலும் நான்கு மாதிரிகள் (சட்ட மாதிரிகள் என அழைக்கப்படும்) சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் விற்பனையாளரிடம் இருந்து இருந்து சேகரிக்கப்பட்டு, மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (சி.எஃப்.டி.ஆர்.ஐ - CFTRI) கூடுதல் சோதனைக்காக அனுப்பப்படும். சி.எஃப்.டி.ஆர்.ஐ அறிக்கையானது மனித நுகர்வுக்குத் தகுதியற்றது எனக் கருதினால், அந்த உணவுப் பொருள் விற்பனையாளர் அல்லது ஆப்பரேட்டர் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் (JMFC) நீதிமன்றத்தில் அந்த உணவுப் பொருள் விற்பனையாளர் விசாரிக்கப்படுகிறது. உணவுப் பொருள் விற்பனையாளர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததற்காக கர்நாடகாவில் இதுவரை 284 உணவு விற்பனையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Safety
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment