மூன்று மாத தென்மேற்கு பருவமழைக் காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால், கேரளாவின் பருவமழை சமீபத்தில் சில நாட்களில் மட்டுமே 'இயல்பு' அளவை எட்டியது. இதற்கு நேர்மாறாக, பெங்களூரு மற்றும் தெற்கு கர்நாடகா மாவட்டங்கள் ஜூன் மாதத்தில் இருந்து பருவ மழைக் கண்டன. மழையின் அளவுகளில் பெரிய வேறுபாடுகள் இருந்தபோதிலும், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவில் எவ்வளவு மழை பெய்தது?
தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் கடந்த வார இறுதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம், பெங்களூரு மற்றும் வடக்கு கேரளாவில் உள்ள மாவட்டங்களில் தொடர்ச்சியான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது - சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சில பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கேரளாவில் உள்ள திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் புதன்கிழமை மாலையுடன் (ஆகஸ்ட் 31) முடிவடைந்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பொழிவு 100 மி.மீ-க்கு மிகாமல் பதிவாகியுள்ளது. கடந்த வாரம்தான் கேரளாவின் பருவ மழை, புதன்கிழமை நிலவரப்படி 1,512 மிமீ (-15 சதவீதம், ஆனால் சாதாரணமாகக் கருதப்படுகிறது) ‘இயல்பான’ அளவைத் தாண்டியுள்ளது.
சமீப காலமாக கர்நாடகாவில் தொடர் மழை பெய்து சேதத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு, கர்நாடகாவில் 894.7 மிமீ அல்லது 33 சதவீத மழை கூடுதலாக பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை, பெங்களூருவில் 24 மணி நேரத்தில் 93.7 மிமீ மழை பதிவானது. இது கடந்த பத்தாண்டில் அதிக அளவு மழைபொழிவு பதிவான இரண்டாவது ஆகஸ்ட் மாத நாளாக பதிவாகி உள்ளது.
கர்நாடகாவின் தெற்கு உள்பகுதியில் உள்ள மாவட்டங்களில், மாண்டியாவில் 296 மி.மீ அளவுக்கு அதிக அளவு மழை பெய்துள்ளது. இந்த மண்டலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களைத் தவிர, 13 மாவட்டங்களில் ஜூன் மாதத்தில் இருந்து குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. அவை: சாமராஜநகர் (179 மிமீ), தும்குரு (176 மிமீ), கோலார் (161 மிமீ), சித்ரதுர்கா (145 மிமீ), பெங்களூரு நகர்ப்புறம் (142 மிமீ), ராமநகரா (140 மிமீ), பெங்களூரு கிராமப்புறம் (125 மிமீ), சிக்பல்லாபுரா (119) மிமீ), தாவங்கரே (94 மிமீ) மற்றும் ஹாசன் (77 மிமீ) என மழை பொழிவு பதிவாகி உள்ளது.
கொடைக்கானல் டி.ஆர்.எம்.எஸ் (230 மிமீ), எர்ணாகுளம் தெற்கு (170 மிமீ), நேரியமங்கலம் (82.5 மிமீ), அதிரப்பள்ளி (72.5 மிமீ), தர்மஸ்தலா மற்றும் கண்ணூர் (70 மிமீ), உடும்பன்னூரில் (69 மிமீ), கட்லுவில் (67.5 மி.மீ.) ஆரளம் (66.5 மி.மீ.), வடவத்தூர் (63.5 மி.மீ.), பாபிளேஷ்வர் (60 மி.மீ.), கொல்லங்கோடு (49 மி.மீ.) ஆகிய இடங்களில் புதன்கிஅமை மிதமானது முதல் கனமழை வரை மழை பொழிவு பதிவாகியுள்ளது.
கடும் மழை பொழிவுக்கு என்ன காரணம்?
‘சினாப்டிக்’ அமைப்புகள் எதுவும் இல்லாத நிலையில், அதாவது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் அல்லது நாட்டில் பருவமழை காற்றழுத்த தாழ்வு மண்டலம் இல்லாத நிலையில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த வாரம் பரவலாக மழை பதிவாகியுள்ளன.
தற்போது பருவமழை முடிவடையும் நிலையில் உள்ளதால், பருவமழை சற்று குறைந்துள்ளது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) புதன்கிழமை கேரளாவில் பருவமழை தீவிரமாகவும், கர்நாடகாவில் தீவிரமாகவும் இருந்தது என்று கூறியது. பருவமழை தாழ்வு நிலை - மழைப்பொழிவுக்கான முக்கிய பங்களிப்பு காரணியாக உள்ளதால் - இந்த மாநிலங்களில் மழைப்பொழிவுக்கு சாதகமாக உள்ளது.
ஜூலை மாத நடுப்பகுதியில் பருவமழை அமைப்பு நாடு முழுவதும் ஏற்பட்ட உடன் பருவமழை தாழ்வுநிலை அதன் இயல்பான நிலையில் இருந்து வடக்கு அல்லது தெற்கே 5 டிகிரி ஊசலாடியது. இந்த அலைவு பொதுவாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், இந்தியாவில் உச்ச பருவமழை மாதங்களாகப் பார்க்கப்படுகிறது. இந்த தாழ்வுநிலை அதன் இயல்பான நிலைக்கு தெற்கே அமைந்திருந்தால், இந்தியாவில் வலுவான பருவமழை பொழியும் என்று பார்க்கப்படுகிறது. இத்தகைய நிகழ்வில் இந்திய தீபகற்பத்தின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் பயனடைகின்றன. இந்த தாழ்வுநிலை அதன் இயல்பான நிலையில் இருந்து வடக்கே மாறும்போது, இமயமலை அடிவாரத்திற்கு செல்லும் போது அல்லது இல்லாமல் இருக்கும்போது, இடையில் பருவமழை பொழியும் சூழல் உள்ளதாக அறிவிக்கப்படும். இந்த மழைப்பொழிவு பெரும்பாலும் தென் தீபகற்பத்திலும், கிழக்கு, வடகிழக்கு மற்றும் வட இந்தியாவிலும் மட்டுமே இருக்கும் இதுதான் மழைபொழிவு முறை.
மழைக்காலம் இவ்வாறு மழை பொழிவு, மழைபொழிவு நிற்பது காரணமாக ஈரமான மற்றும் வறண்ட வானிலைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
தாழ்வுப் பகுதியைத் தவிர, தென் தமிழகத்தில் ஒரு சூறாவளி சுழற்சி உள்ளது. அதில் இருந்து தெற்கு மத்தியப் பிரதேசம் வரை ஒரு தாழ்வுப் பகுதி செல்கிறது.
வானிலை முன்னறிவிப்பு என்ன சொல்கிறது?
புதன்கிழமை அன்று பதிவான சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, உத்திரபிரதேசம், மேற்கு வங்க கங்கை பகுதி மற்றும் பீகார் ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்க மேக மூட்டம் நிலவுவதைக் காட்டியது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை கேரளா மற்றும் தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 4 வரை 'மஞ்சள்' அலர்ட் வெளியிட்டுள்ளது. கேரளா, மாஹே, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமான (24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 204 மிமீ வரை) மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. காரைக்கால், புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், பீகார், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கோவா, கடலோர மற்றும் வடக்கு உள்துறை கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் ஞாயிற்றுக்கிழமை வரை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கேரள கடற்கரையில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
திங்கள்கிழமை (செப்டம்பர் 5), ஜம்மு காஷ்மீர், கில்கிட், பால்டிஸ்தான், லடாக், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், கங்கைக்கரை மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் கனமழை (24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.4 மிமீ வரை) பொழியும் என்று ‘மஞ்சள்’ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.