Advertisment

பப்களை திறக்க பரிசீலனை; கேரள மது கொள்கையில் மாற்றம் ஏன்?

கேரளாவில் தனியார்கள் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த நிலையில், கேரள அரசு இப்போது அம்மாநிலத்தில் பப்களை திறக்க பரிசீலித்துவருகிறது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் பொழுதுபோக்கு தேவை என்ற புகார்கள் வந்துள்ளன. அதனால், அவர்களுக்கு பப்கள் உதவக்கூடும்” என்று கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala news, kerala liquor policy, kerala alcohol policy, kerala cm pinarayi vijayan, ldf government, udf government, கேரளா, கேரளா மது கொள்கை, பினராயி விஜயன், cpm, congress, bjp, kerala prohibition, kerala liquor ban, kerala liquor, Tamil indian express

kerala news, kerala liquor policy, kerala alcohol policy, kerala cm pinarayi vijayan, ldf government, udf government, கேரளா, கேரளா மது கொள்கை, பினராயி விஜயன், cpm, congress, bjp, kerala prohibition, kerala liquor ban, kerala liquor, Tamil indian express

யஷீ, கட்டுரையாளர்

Advertisment

கேரளாவில் தனியார்கள் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த நிலையில், கேரள அரசு இப்போது அம்மாநிலத்தில் பப்களை திறக்க பரிசீலித்துவருகிறது. இது குறித்து திங்கள்கிழமை பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் பொழுதுபோக்கு தேவை என்ற புகார்கள் வந்துள்ளன. அதனால், அவர்களுக்கு பப்கள் உதவக்கூடும்” என்று கூறினார். கடந்த மாதம், உள்நாட்டில் கிடைக்கும் பழங்களிலிருந்து தயார் செய்யப்படும் மது மற்றும் குறைவான மதுவைக் கொண்ட மதுபானங்களை தயாரிக்கும் சிறிய மதுபான உற்பத்தி நிலையங்களுக்கு உரிமம் வழங்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு (எல்.டி.எஃப்) அதன் முந்தைய மதுபானக் கொள்கையிலிருந்து மாறியதன் காரணம் என்ன? என்றும், மதுபான நிறுவனங்களிடமிருந்து பணத்தை பெறுவதற்காகவே இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சி இயக்கம் குற்றம் சாட்டியது.

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு (யு.டி.எஃப்) கேரளாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் முழு மதுவிலக்கு அறிவிக்கப்படும் என்று அறிவித்தது. அதற்கான முதல் படியாக 2014 ஆம் ஆண்டு ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான மதிப்பீட்டைக் கொண்ட ஹோட்டல்களில் உள்ள அனைத்து பார்களையும் மூடியது. 2016 இல் எல்.டி.எஃப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அது மது விலக்கு கொள்கையில் இருந்து விலகி வருகிறது. ஜூன் 2017 இல், 3, 4 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை (ஐ.எம்.எஃப்.எல்) விற்பனை செய்ய அனுமதித்தது. நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் மதுபானம் விற்பனை செய்ய தடை விதித்த உச்சநீதிமன்ற உத்தரவை மீறவில்லை என்றால் 2 நட்சத்திர ஹோட்டல்கள் பீர்/ஒயின் பார்களை நடத்த அனுமதிக்கப்பட்டது. முன்பு இரவு 10 மணி வரை பார்கள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு 11 மணி வரை பார்கள் திறந்திருக்க அனுமதி அளித்தது. ஹோட்டல்கள் மற்றும் விருந்து அரங்குகளில் கட்டணம் செலுத்தினால் மதுபானம் வழங்க அனுமதி அளித்தது. அதே போல, விமான நிலையங்களின் உள்நாட்டு விமான போக்குவரத்து பிரிவில் மதுபானம் கிடைக்கவும் அனுமதி அளித்தது.

ஏன் இந்த மென்மையான அணுகுமுறை?

கேரளாவில் 2014 ஆம் ஆண்டு வரை தனிநபர் மதுபான நுகர்வு நாடிலேயே அதிக அளவில் ஆண்டுக்கு 8.3 லிட்டர் மதுபானம் என்று இருந்தது. எல்.டி.எஃப் அரசு மதுபானத் தொழில்துறையின் மீதான நடவடிக்கையால் மாநிலத்தில் பெரிய எண்ணிக்கையில் வேலை இழப்பு ஏற்பட்டது. அது சுற்றுலாத் துறையையும் மோசமாக பாதித்துள்ளது. இருப்பினும், அரசாங்கம் இதற்கு பொருளாதார அடிப்படையிலான காரணங்களைவிட அதிக அளவில் வேறு காரணங்களை அளித்துள்ளது.

சமநிலைப்படுத்தும் நடவடிக்கை

முதல்வர் பினராயி விஜயன் தனது அரசாங்கம் மதுபான கட்டுப்பாட்டை நம்புகிறது. மதுபானை தடையை அல்ல. மதுபான தடை நடைமுறைக்கு வந்ததிலிருந்து போதைப்பொருள் பயன்பாடு ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளது என்று பினராயி விஜயன் கூறினார்.

2017 ஆம் ஆண்டு ஹோட்டல்களில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளித்த பின்னர், “முழுமையான மதுபான தடையை விதித்த யு.டி.எஃப் அரசின் மதுபானக் கொள்கை ஒரு முழுமையான படுதோல்வி” என்று பினராயி விஜயன் கூறினார்.

“யு.டி.எஃப் அரசின் மதுக் கொள்கை நடைமுறைக்கு மாறானது. அது போதைப்பொருள் பயன்பாடு ஆபத்தான முறையில் உயர்வதற்கு வழிவகுத்தது. எல்.டி.எஃப் அரசின் மது கொள்கை மதுவிலக்கு நோக்கமாக கொண்டது. அரசாங்கம் மேலும் போதைப்பொருளால் பாதிகப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்களைத் தொடங்குவதோடு தற்போதுள்ளவற்றை வலுப்படுத்தும்” என்று பினராயி விஜயன் கூறினார்.

மது விற்பனையை ஊக்குவிக்காத வகையில், சுகாதாரக் கொள்கைக்கு இணங்க எல்.டி.எஃப் அரசாங்கம் மாநிலத்தில் மதுபானம் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 21 முதல் 23 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், முதல்வர் பினராயி விஜயன், தனது அரசாங்கம் பப்களைத் திறப்பதைக் கருத்தில் கொண்டிருப்பதாகக் கூறியபோது, ​​வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காகவும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் தற்போதுள்ள கேரள பானங்கள் கார்ப்பரேஷன் (பெவ்கோ) விற்பனை நிலையங்கள் புதுப்பிக்கப்படும் என்றும் கூறினார். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு எதிர்க்கட்சிகளும் அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது என்றும் மதுபான லாபிக்கு தலைவணங்குகின்றன என்றும் குற்றம் சாட்டியது. ஆனால், இப்போதைக்கு கேரள மதுக்கடைகளும் அவற்றின் வாடிக்கையாளர்களும் உற்சாகப்படுத்த வேண்டியது அதிகம்.

Bjp Kerala Pinarayi Vijayan All India Congress Cpm Kerala Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment