Advertisment

மரணத்திற்கு கூட வழிவகுக்கும்... 'தனிமை' உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவது எப்படி?

தனிமை பற்றி புதன்கிழமை நேச்சர் ஹ்யூமன் பிஹேவியர் இதழில் ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (யு.கே) மற்றும் ஃபுடான் பல்கலைக்கழகம் (சீனா) ஆகியவற்றை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
loneli

தனிமை மற்றும் சமூகத்தில் இருந்து தள்ளி இருத்தல் உடலில் உள்ள புரதங்களின் அளவை பாதிக்கலாம் மற்றும் நோய் ஏற்பட்டு மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Advertisment

தனிமை பற்றி புதன்கிழமை நேச்சர் ஹ்யூமன் பிஹேவியர் இதழில் ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (யு.கே) மற்றும் ஃபுடான் பல்கலைக்கழகம் (சீனா) ஆகியவற்றை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

ஆய்வின் இணை ஆசிரியரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பார்பரா சஹாகியன் தி கார்டியனிடம் கூறுகையில், "தனிமை மற்றும் சமூக தனிமைப்படுத்தல் ஒரு பகுதி என்பதை மக்கள் உணரத் தொடங்க வேண்டும் என்பதே செய்தி என்று நான் நினைக்கிறேன். ஆரோக்கியமான வாழ்விற்கும், அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் அவர்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், அவர்கள் மற்றவர்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்றார். 

ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது? 

Advertisment
Advertisement

UK Biobank-ல் பங்கு பெற்ற 40-69 வயதுடைய 42,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களின் இரத்த மாதிரிகளின் 'புரோட்டோம்கள்' - ஒரு உயிரினத்தால் வெளிப்படுத்தப்படும் புரதங்களின் முழு தொகுப்பையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

தி கார்டியனில் உள்ள அறிக்கையின்படி, சமூக தனிமைப்படுத்தப்பட்டதாகப் புகாரளித்த 9.3% மற்றும் தனிமையைப் புகாரளித்த 6.4% பேரின் இரத்தத்தில் வெவ்வேறு அளவு புரதங்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க இது ஆராய்ச்சியாளர்களை அனுமதித்தது.

ஒருபுறம் சமூக தனிமை மற்றும் தனிமை மற்றும் மறுபுறம் புரதங்களுக்கு இடையிலான உறவை ஆராய மெண்டலியன் ரேண்டமைசேஷன் என்ற புள்ளிவிவர நுட்பத்தையும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.

கண்டுபிடிப்புகள் என்ன?

சமூக தனிமைப்படுத்தலுடன் தொடர்புடைய 175 புரதங்கள் மற்றும் self-reported loneliness எனக் கூறப்படும் நபர்களின் 26 புரதங்களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர், அவற்றில் பல ஒன்றுடன் ஒன்று - தனிமையுடன் தொடர்புடைய சுமார் 85% புரதங்கள் சமூக தனிமைப்படுத்தலுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த புரதங்களில் பெரும்பாலானவை சமூக தனிமை அல்லது தனிமையைப் புகாரளித்தவர்களில் அதிக அளவில் காணப்பட்டன.

"இந்த புரதங்களில் பல வீக்கம், வைரஸ் தொற்று மற்றும் நமது நோயெதிர்ப்பு மறுமொழிகளின் ஒரு பகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன, அத்துடன் இருதய நோய், டைப் 2 நீரிழிவு, பக்கவாதம் மற்றும் மரணம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன" என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்க:   Why loneliness may lead to ill health

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment