இந்த மாதத்தில் செவ்வாய் கிரகம் மிகவும் பிரகாசமாக இருக்க காரணம் என்ன?

பூமியில் இருந்து பார்க்கும் ஒரு நபரின் பார்வையில் காலையில் சூரியனும் செவ்வாயும் எதிர் எதிர் திசைகளில் தோன்றுபவை

Why Mars is the brightest this month thanks to Opposition

Why Mars is the brightest this month thanks to Opposition :  அப்போசிசன் என்ற நிகழ்வின் மூலம் ஒவ்வொரு 2 வருடங்கள் 2 மாதங்களுக்கு இடையே செவ்வாய் கிரகம் வியாழனைக் காட்டிலும் அதிக பிரகாசமாக இருக்கும். அக்டோபர் மாத இரவுகளில் சந்திரன் மற்றும் வெள்ளி கோளைக் காட்டிலும் மிகவும் பிரகாசமான மூன்றாவது வானியல் அதிசயமாக செவ்வாய் கிரகம் மாறிவிடுகிறது. இந்த வருடம், அக்டோபர் மாதம் 6ம் தேதி அன்று செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் தோன்றியது. அப்போசிசன் அக்டோபர் 13ம் தேதி தோன்றும். அப்போது அந்த கோள் மிகவும் பெரிய அளவில் தெரியும் என்று நாசா தெரிவிக்கிறது.

இந்நிகழ்வு அடுத்து டிசம்பர் மாதம் 8ம் தேதி 2022ம் ஆண்டு நடைபெறும். அப்போது பூமிக்கு மிக அருகில், 62.07 கி.மீ தொலைவில் அந்த கோள் இருக்கும். மிகவும் நெருங்கி வரும் என்றாலும் கூட, நிலாவை போன்று செவ்வாய் கிரகம் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போசிசன் என்றால் என்ன?

சூரியன், பூமி மற்றும் இதர கோள் (இங்கு செவ்வாய் கிரகம்) மூன்றும் ஒரே நேர் கோட்டில், பூமி இரண்டுக்கும் மத்தியில் இருக்கும் போது இதனை அப்போசிசன் என்று அழைப்போம். அப்போசிசன் நேரம் என்பது, குறிப்பிட்ட வருடத்தில், அந்த இதர கோள், பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது அழைக்கப்படுவதாகும். பூமிக்கு மிக அருகில் இருப்பதால் அது வானில் பிரகாசமாக இருக்கிறது. செவ்வாய் கோளின் சுற்றுவட்டப் பாதையில் அப்போசிசன் எப்போது வேண்டுமானால் நிகழலாம்.

இது எப்போது நிகழும்?

பூமியும், செவ்வாயும் சூரியனை வெவ்வேறு தொலைவில் சுற்றி வருகிறது. செவ்வாய் பூமியைக் காட்டிலும் அதிக தொலைவில் இருந்து சூரியனை சுற்றிவருகிறது என்பதால் அது சூரியனை முழுமையாக சுற்றிவர அதிக காலம் எடுத்துக் கொள்ளும். அப்போசிசன், பூமியை தாண்டி வெகு தொலைவில் சூரியனை சுற்றி வரும் கோள்களில் மட்டுமே நிகழ்கிறது. செவ்வாயை பொறுத்த வரையில், பூமி ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனுக்கும் செவ்வாய்க்கும் மத்தியில் சுற்றி வருகிறது. அப்போது தான் மூன்று கோள்களும் நேர்கோட்டில் பயணிக்கும். பூமியும் செவ்வாயும் சூரியனை சுற்றும் போது இவ்விரு கோள்களும் எதிர் எதிராக பயணிக்கும் சூழல் வரும். அப்போது அவை இரண்டும் சுமார் 400 மில்லியன் கி.மீ தொலைவுக்கு அப்பால் இருக்கும்.

To read this article in English

எவ்வாறாயினும், செவ்வாய் மற்றும் சூரியனும் பூமிக்கு நேர் எதிராக இரண்டு பக்கத்தில் இருக்கும் போது அதனை அப்போசிசன் என்று கூறுவோம். இதற்கு முன்பு 2003ம் ஆண்டு, 60 ஆயிரம் வருடங்களில், முதன்முறையாக பூமிக்கு மிக அருகே பயணித்தது செவ்வாய் கோள். இனி இது போன்று 2287ம் ஆண்டு வரையில் நிகழாந்து என்கிறது நாசா. இதற்கு காரணம் பூமி மற்றும் செவ்வாயின் சுற்றுப்பாதைகள் ஒரு முழுமையான வட்டம் கிடையாது. அவற்றின் பாதைகள் மற்று கோள்களின் ஈர்ப்பு சக்தியால் கொஞ்சம் மாறும். உதாரணத்திற்கு வியாழன் செவ்வாய் கோளின் சுற்றுவட்டப்பாதையில் மாற்றத்தை தரும்.

இது ஏன் அப்போசிசன் என்று அழைக்கப்படுகிறது?

நாசாவின் கூற்றுப்படி, பூமியில் இருக்கும் ஒருவரின் பார்வையில், செவ்வாய் கிரகமானது கிழக்கில் உதித்து இரவெல்லாம் பயணித்து காலையில் மேற்கில் மறைகிறது. சூரியன் காலையில் கிழக்கில் தோன்றி மாலையில் மேற்கில் மறைகிறது. பூமியில் இருந்து பார்க்கும் ஒரு நபரின் பார்வையில் காலையில் சூரியனும் செவ்வாயும் எதிர் எதிர் திசைகளில் தோன்றுபவை என்பதால் அப்போசிசன் எனப்படுகிறது. வானில் சூரியனை எதிர்க்கும் வகையில் இருப்பதால் இந்த நிகழ்வை இப்படி குறிப்பிடுகின்றனர்.

ஒருவர் செவ்வாய் கிரகத்தை எவ்வாறு பார்க்க முடியும்?

செவ்வாய் கிரகத்தைப் பார்க்க அப்போசிசன் சிறந்த நேரம். இந்த நேரத்தில், செவ்வாய் வெறுக்கண்களுக்கு பிரகாசமான நட்சத்திரமாகத் தோன்றும், மேலும் ஒரு தொலைநோக்கியிலிருந்து பார்க்கும்போது, “இது வியத்தகு அளவில் வளரும்” என்று நாசா கூறுகிறது. தொலைநோக்கியைப் பயன்படுத்துவது இருண்ட மற்றும் ஒளி பகுதிகள், சூரிய பனிக்கட்டிகள் மற்றும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு போன்ற கிரகத்தின் விவரங்களைக் காண முடியும். வளிமண்டல கொந்தளிப்பு மற்றும் உள்ளூர் வானிலை பொறுத்தே இந்த விபரங்களை காண இயலும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why mars is the brightest this month thanks to opposition

Next Story
அறிவியல் மற்றும் நெறிமுறை சிக்கல் நிறைந்த ஹேர்டு இம்யூனிட்டி: WHOherd immunity corona virus tracker latest corona tamil news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com