வாரத்துக்கு ஒருமுறை பூமியை நோக்கி ஒரு புதிய விண்கல் வருவதாக தலைப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் உலகம் அழிவதைப் பற்றி பேசுவதால் இந்த விண்கல் விவகாரம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
“கிசாவின் பிரமிட்டை விட இரண்டு மடங்கு பெரிய விண்கல் 465824 2010 எஃப்ஆர் (465824 2010 FR) செப்டம்பர் 6ம் தேதி பூமியின் சுற்றுப்பாதையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாறை திகில், அபாயகரமான விண்கல் போன்ற ஆபத்தான வர்ணனைகளுடன் பல எதிர்விணைகளைப் பெற்றுள்ளது.
உண்மையில், விண்வெளி பொருட்களிலிருந்து ஒரு முறையான அச்சுறுத்தும் ஆபத்து ஏற்படுவது மிகவும் அரிதானது. அப்படியான அச்சுறுத்தல் சில மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்று நாசா கூறுகிறது.
விண்கல் 465824 2010 FR-இல் இருந்து வரும் ஆபத்து குறைத்துள்ளதாக கூறும், விண்வெளி ஏஜென்ஸி “நம்முடைய கோள் வல்லுநர்கள் 2010 FR விண்கல் பற்றி கவலைப்படவில்லை இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு பூஜ்ஜியமாக இருப்பதால் மக்கள் கவலைகொள்ளக் கூடாது. இந்த விண்கல் செப்டம்பர் 6 ஆம் தேதி 4.6 மில்லியன் மைல்களுக்கு அப்பால் நமது பூமி கிரகத்தின் வழியாக பாதுகாப்பாக செல்லும். இது சந்திரன் இருக்கும் தூரத்தை விட 19 மடங்கு அதிகம்! ” என்று தெரிவித்துள்ளனர்.
விண்கல் என்றால் என்ன?
விண்கற்கற்கள் சூரியனைச் சுற்றும் பாறைப் பொருள்கள். அவை கோள்களைவிட மிகச் சிறியவை. அவை சிறு கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. நாசாவின் கூற்றுப்படி, அறியப்பட்ட விண்கற்களின் அல்லது சிறுகோள்களின் எண்ணிக்கை 994,383 ஆகும். இவை 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவாகியதிலிருந்து எஞ்சியவைககள் ஆகும்.
விண்கற்கள் மூன்று வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையிலான முக்கிய விண்கல் பெல்ட்டில் காணப்படும். அங்கே 1.1 முதல் 1.9 மில்லியன் விண்கற்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது குழு ட்ரோஜன்கள், அவை ஒரு பெரிய கிரகத்துடன் ஒரு சுற்றுப்பாதையை பகிர்ந்து கொள்ளும் விண்கற்கள் ஆகும்.
வியாழன், நெப்டியூன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு ட்ரோஜன்கள் இருப்பதை நாசா தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் 2011 ஆம் ஆண்டு ஒரு பூமி ட்ரோஜன் இருப்பதையும் தெரிவித்தனர்.
மூன்றாவது வகைப்பாடு பூமிக்கு அருகில் செல்லும் சுற்றுப்பாதைகளைக் கொண்ட பூமிக்கு அருகில் உள்ள விண்கற்கள் (NEA) ஆகும். பூமியின் சுற்றுப்பாதையை கடக்கும் விண்கற்கலை பூமியை கடப்பவைகள் என்று அழைக்கப்படுகிறது. இதுபோல 10,000க்கும் மேற்பட்ட விண்கற்கள் அறியப்படுகின்றன. அவற்றில் 1,400க்கும் மேற்பட்டவை அபாயகரமான விண்கற்கள் (PHA) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சிறுகோள்களிலிருந்து பூமி எதிர்கொள்ளும் அச்சுறுத்தலின் அளவு என்ன?
பிளானட்டரி சொசைட்டி குறிப்பிட்டுள்ளபடி, 1 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட 1 பில்லியன் விண்கற்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 30 மீட்டர் விட்டத்தைவிட பெரிய விண்கள் ஒன்று பூமியை தாக்கினால் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
நாசாவின் பூமிக்கு அருகிலுள்ள பொருட்களை அவதானிக்கும் திட்டத்தின் படி, 140 மீட்டர் விட்டத்தைவிட பெரிய விண்கல் (ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்தைவிட பெரியது) அவைகள் பேரழிவு அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவைகள். இருப்பினும், 140 மீட்டருக்கும் அதிகமான எந்த விண்கற்களும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியைத் தாக்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்பு இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு விண்கல் - ஒரு வால்நட்சத்திரத்திலிருந்து அல்லது ஒரு விண்கல்லில் இருந்து ஒரு சிறிய பகுதி ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு ஒவ்வொரு 2000 ஆண்டுகளுக்கு பூமியை பாதிக்கிறது. இதனால் அது தாக்கும் பகுதியில் கடுமையான சேதம் ஏற்படுகிறது.
1 கி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட விட்டம் கொண்ட விண்கற்கள், உலகளாவிய பேரழிவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. அவை மிகவும் அரிதானவை. அது 100,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நமது கிரகத்தை பாதிக்கிறது. வால் நட்சத்திரங்கள் அத்தகைய சேதத்தை ஏற்படுத்தும் நிகழ்தகவு இன்னும் 500,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வதற்கான சாத்தியம் குறைவாக உள்ளது.
சிக்சுலம் என்ற 10 கி.மீ விட்டம் கொண்ட பெரிய விண்வெளி பொருள் தாக்கியதால் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான டைனசோர் இனங்கள் திடீரென அழிந்துபோனது.
எல்லா விண்வெளி பொருட்களும் ஆபத்தானவையா?
நாசாவின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும், பூமி 100 டன்களுக்கும் அதிகமான தூசி மற்றும் மணல் அளவுள துகள்களை விண்வெளியில் இருந்து பெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஒரு கார் அளவிலான விண்கல் நம்முடைய கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைந்து, ஒரு சுவாரஸ்யமான நெருப்பு பந்தை உருவாக்குகிறது. ஆனால், அது பூமியின் மேற்பரப்பை அடைவதற்கு முன்பு எரிந்துவிடுகிறது.
விண்கற்களை திசை திருப்ப வழி இருக்கிறதா?
பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள், விண்கற்கள் பூமியை அடைவதற்கு முன்னர், அதன் மீது விண்கலத்தால் தாக்கி அது பூமிக்குச் செல்லும் போக்கிலிருந்து திசை திருப்புவது போன்ற கடுமையான அச்சுறுத்தல்களைத் தடுக்க பல்வேறு வழிகளை பரிந்துரைத்துள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான விண்கள் தாக்கம் மற்றும் விலகல் மதிப்பீடு (AIDA) திட்டத்தில், நாசாவின் இரட்டை விண்கள் திசைதிருப்பல் சோதனை (DART) பணி மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) ஹேரா ஆகியவை அடங்கும். இந்த மிஷனின் இலக்கு பூமிக்கு அருகிலுள்ள ஒரு இரட்டை டிடிமோஸ் ஆகும். அதனுடைய ஒரு பகுதி பூமிக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
நாசா, 2022 ஆம் ஆண்டில் டிடிமோஸ் அமைப்பின் சிறிய வீண்கல் மீது நொடிக்கு 5 கி.மீ வேகத்தில் இடிக்கும் நோக்கத்துடன், 2021ம் ஆண்டில் டார்ட் கட்டுமானத்தை தொடங்கியுள்ளதாக 2018-ம் ஆண்டில் அறிவித்தது. 2024 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஹேரா, 2027 ஆம் ஆண்டில் டிடிமோஸ் அமைப்புக்கு வந்து DART மோதலால் உருவாகும் தாக்த்தால் ஏற்படும் பள்ளத்தை அளவிடுவதோடு, விண்கல்லின் சுற்றுப்பாதை பாதையில் ஏற்படும் மாற்றத்தையும் ஆய்வு செய்யும்.
சமீபத்திய ட்வீட்டில், நாசா தெரிவிக்கையில், “ஆம், விண்கற்கள் எப்போதுமே பூமியை பாதுகாப்பாக கடந்து செல்கின்றன. மேலும், அடுத்த 100 ஆண்டுகளில் விண்கல் மோதும் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. சில நேரங்களில் குறிப்பிட்ட விண்கள்களைச் சுற்றியுள்ள ஆபத்து குறித்து தலைப்புச் செய்திகள் வெளிவருகின்றன. எனவே, இதுபோன்ற உரையாடல்களைப் பார்க்கும்போது, அவை நம்பத்தன்மை அற்றவை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.