Advertisment

சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்கா கூறுவது ஏன்?

கட்டாய கருத்தடை, குழந்தைகளை குடும்பத்தில் இருந்து பிரித்தல், உய்குர் இஸ்லாமியர்களை நீண்ட நேரங்களுக்கு கட்டாயமாக வேலைப் பார்க்க வற்புறுத்துவது போன்ற அடக்குமுறைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
Why Nancy Pelosi called for a boycott of 2022 Beijing Winter Olympics

Boycott of 2022 Beijing Winter Olympics : சீனாவில் 2022ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் கூட்டத்தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று கூறும் மனித உரிமை ஆர்வலர்களுடன் சேர்ந்து குரல் எழுப்பி வருகிறார் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி. இன சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் காரணமாக இந்த அழைப்பை விடுத்துள்ளார் அவர்.

Advertisment

செவ்வாயன்று இந்த விவகாரத்தில் இரு கட்சி காங்கிரஸ் விசாரணையின் போது, உயர்மட்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் ஒலிம்பிக்கில் தங்கள் வருகையைத் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைவர்கள் சீனாவுக்குச் செல்வதன் மூலம் சீன அரசாங்கத்தை மதிக்க வேண்டாம் என்று கூறிய அவர், நடந்து கொண்டிருக்கும் ஒரு இனப்படுகொலையின் வெளிச்சத்தில் நீங்கள் அந்த நாட்டிற்கு உங்கள் பதவி காரணமாக செல்லும் போது எழும் கேள்வி உலகில் எந்த இடத்திலும் மனித உரிமைகள் பற்றி மீண்டும் பேச உங்களுக்கு என்ன தார்மீக அதிகாரம் உள்ளது? என்பது தான்.

இந்த போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று நான்சி மட்டும் கூறவில்லை. சில காலத்திற்கு முன்பு இங்கிலாந்தின் எம்.பிக்கள் ஒன்று சேர்ந்து விளையாட்டு வீரர்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஏன் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் நிறுத்தப்பட வேண்டும் என நான்சி கூறுகிறார்?

2015ம் ஆண்டு, பெய்ஜிங், 2022ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துவதற்கான ஏலத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த நகரம் தான் குளிர்கால மற்றும் கோடை கால ஒலிம்பிக்கை நடத்தும் நகரமாக வரலாற்றில் இடம் பெற இருந்தது. சீனாவில் இந்த வரலாற்று நிகழ்வு பரவலாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சீன அரசு உய்குர் இஸ்லாமியர்களை சின்ஜியாங் பகுதிகளில் நெடுங்காலமாக ஒடுக்கி வருவதை விரும்பவில்லை.

அப்போது தான் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் அங்கு நடைபெற கூடாது என்ற எதிர்ப்புகள் கிளம்பியது. பல ஆண்டுகளாக, பல சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் இணைந்து இந்த நிகழ்வை முழுமையாக புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். மே 17 அன்று, உய்குர்கள், திபெத்திய உரிமைக் குழுக்கள் மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களின் கூட்டணி சீனாவில் மதிப்புமிக்க விளையாட்டு நிகழ்வை நடத்துவதற்கான முடிவைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கூட்டணி ‘இராஜதந்திர புறக்கணிப்புகள்’ மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் (ஐ.ஓ.சி) மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான நேரம் முடிந்துவிட்டது என்று அறிவித்தது.

கடந்த சில ஆண்டுகளாக பல அமெரிக்க தலைவர்களால் மேற்கோள்காட்டப்பட்ட 2022 குளிர்கால ஒலிம்பிக்கை எதிர்க்கும் குரல்கள் மற்றும் சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுகள் பெலோசியின் கோரிக்கைக்கு வழி வகுத்தது. பிப்ரவரியில், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலியும், விளையாட்டுக்கள் நடைபெற அனுமதிப்பது சீனாவில் பெரும் கொடூரங்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.

இந்த போட்டிகளை புறக்கணிப்பதால் சீனாவின் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்டுவரப்பட்டு, உய்குர்கள் மற்றும் இதர இஸ்லாமிய சிறுபான்மையினர் நிலை சரியாகும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

உய்குர் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள்

2018ம் ஆண்டு, ஐக்கியநாடுகள் சபையால் அமைக்கப்பட்ட ஒரு சுயதீன குழு கடந்த காலங்களில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சீனா 'மறு கல்வி முகாம்கள்' என்று மில்லியனுக்கும் அதிகமான உய்குர்கள் மற்றும் பிற முஸ்லீம் சிறுபான்மையினரை பல ஆண்டுகளாக தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக பல நம்பகமான அறிக்கைகள் கிடைத்ததாகக் கூறியது. . 2019 ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய விசாரணையில், சின்ஜியாங்கில் உள்ள குழந்தைகள் தங்கள் முஸ்லிம் சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்த தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தது.

கட்டாயத் தொழில் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சீன அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது. தடுப்பு முகாம்கள், கட்டாய உழைப்பு மற்றும் கட்டாய கருத்தடை உள்ளிட்ட உய்குர் மக்கள் மீது சீனா விரிவான அடக்குமுறை திட்டத்தை விதித்தாக கூறி சீன அரசு மீது கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசுகள் குற்றச்சாட்டை முன்வைத்தது.

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து துணிகளும் சுமார் 87 சதவீதம் சின்ஜியாங்கில் பெறப்பட்ட பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பொருள் உலகளவில் விற்கப்படும் ஐந்தில் ஒன்று பருத்தி ஆடைகளில் இப்பகுதியில் இருந்து பெறப்பட்ட பருத்தி மற்றும் நூலில் இருந்து உருவாக்கப்படுவது. பிராந்தியத்தின் செழிப்பான பருத்தித் தொழிலை நிர்வகிக்கும் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் உய்குர் முஸ்லிம்கள், அவர்கள் கட்டாய உழைப்பாளர்களாக உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான கட்டாய உழைப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளின் காரணமாக ஜனவரி மாதம் டிரம்ப் நிர்வாகம் சிஞ்சியாங்கிலிருந்து அனைத்து பருத்தி மற்றும் தக்காளி பொருட்களுக்கும் இறக்குமதி தடை அறிவித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்தபோது பிடன் நிர்வாகம் தடையை மாற்ற முயற்சிக்கவில்லை.

சின்ஜியாங் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது, அதற்கு பதிலாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெறுமனே தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக தொழில் திறன்களைப் பயிற்றுவிப்பதாக கூறி வருகின்றனர்.

publive-image

சீனாவின் நிலைப்பாடு என்ன?

மனித உரிமைகள் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததற்காக பெலோசி பொய்களை மட்டுமே கூறுகிறார் என்று சீனா புதன்கிழமை குற்றம் சுமத்தியது. சில அமெரிக்க நபர்களின் கருத்துகள் முழுவதும் பொய்யானவை மற்றும் தவறான தகவல்களை கொண்அவை என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜ்ஜன் கூறினார். அமெரிக்க அரசியல்வாதிகள் ஒலிம்பிக் போட்டிகளை. இழிவான அரசியல் விளையாட்டிற்காக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்வை புறக்கணிக்க முந்தைய அழைப்புகளை சீனா கண்டனம் செய்துள்ளது. முன்னதாக, அரசாங்க செய்தித் தொடர்பாளர் குவோ வீமின் இந்த அச்சுறுத்தல்கள் "தோல்விக்குத் தள்ளப்பட்டவை" என்று கூறினார்.

கடந்த காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்துள்ளதா?

ஆம். ஒலிம்பிக் புறக்கணிப்புகளுக்கு நீண்ட கால வரலாறு இருக்கிறது. உண்மையில் சில நிபுணர்கள், புறக்கணிப்பிற்கான காரணங்களில் இருக்கும் ஒற்றுமையை சுட்டிக் காட்டியுள்ளனர். பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் புறக்கணிப்பிற்கான காரணங்கள் போன்றே, 1936 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான புறக்கணிப்பு, மற்றும் 1980 மாஸ்கோ கோடைகால ஒலிம்பிக் புறக்கணிப்பு காரணங்களும் அமைந்துள்ளது.

1936ம் ஆண்டு நாஜி ஜெர்மனி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் இந்த நிகழ்வைப் புறக்கணிப்பதாக விவாதித்தன, இருப்பினும், சோவியத் நாடுகளைத் தவிர, பெரும்பாலானவை பங்கேற்றன. நாஜிக்கள் ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலையைத் தொடர்ந்ததால், சோவியத் நாடுகளின் புறக்கணிப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் மீது 1979 டிசம்பரில் படையெடுப்பத்த காரணத்தால் 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற இருந்த போடிகளுக்கு எதிராக புறக்கணிப்பு குரல்கள் எழுந்தன. இந்த புறக்கணிப்புகளுக்கான அமைப்பை அமெரிக்கா வழிநடத்தியது. 66 நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்தது. இருப்பினும் 80 நாடுகள் போட்டியில் பங்கேற்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment