/tamil-ie/media/media_files/uploads/2022/03/NATO-1.jpg)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், நேட்டோ அமைப்பு கிழக்கு ஐரோப்பா முழுவதும் உள்ள உறுப்பு நாடுகளில் தனது துருப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. ஆனால், உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கான திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தது.
கடந்த வாரம், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ரஷ்யாவிற்கு எதிரான அதன் பாதுகாப்பை வலுப்படுத்த, நேட்டோ கூட்டணி முதன்முறையாக ரேபிட் ரெஸ்பான்ஸ் படையை தொடங்குவதாக தெரிவித்தார்.
நேட்டோ "கூட்டுப் பாதுகாப்பை" உறுதிசெய்யும் ஆர்டிக்கல் 5-ஐ செயல்படுத்தினால் போர் தீவிரமடையக்கூடும். ஏனெனில், ஒரு கூட்டாளியின் மீதான தாக்குதல், அனைத்து நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதப்படும்.
நேட்டோவில் உள்ள உக்ரைனின் சில அண்டை நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அத்தகைய சூழ்நிலை உருவாகக்கூடும்.
ஆர்டிகல் 5 என்றால் என்ன? அதன் தேவை என்ன?
ஆர்டிகல் 5 குறித்து அறிந்துகொள்ள, முதலில் நேட்டோ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதற்கான இலக்குகளை அறிவது அவசியம். 1949இல், நேட்டோ நிறுவனர்களான அமெரிக்கா, கனடா மற்றும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள், சோவியத் யூனியன் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, கூட்டுப் பாதுகாப்பை வழங்குவதற்கான நெறிமுறையாக நேட்டோவை தொடங்கினர்.
ஆர்டிகல் 5 என்பது 1949 வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாகும் . இது மேற்கு ஐரோப்பாவின் சாத்தியமான படையெடுப்பிற்கு எதிராக ஒரு கூட்டுப் பாதுகாப்பை வழங்குகிறது.
அதாவது, வடக்கு அட்லாண்டிக் பகுதியில் ஏதெனும் தாக்குதல் நடைபெறும் சூழலில், நேட்டோ உறுப்பு நாடுகள் தனித்தனியாகவும், மற்ற நாடுகளுடன் இணைந்தும், ஆயுத படை பயன்படுத்துவது உட்பட பல முயற்சி மூலம் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கும் அமைதியை நிலைநாட்டவும் வேண்டும்.
ஆனால், நேட்டோ அமைப்பானது, இதுவரை அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அல் கொய்தா பயங்கரவாதிகள் நான்கு ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தி, இரண்டு விமானங்களை உலக வர்த்தக மையத்திலும், மற்றொன்றை பென்டகனிலும் மோத செய்தனர். அதற்கு அடுத்த நாளே, நேட்டோ அமைப்புகள் ஒன்றிணைந்து ஆர்டிகல் 5 ஐ செயல்படுத்தி, அமெரிக்காவுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தினர்.
இந்த முறை ஏன் ஆர்டிக்கல் 5 செயல்ப்படுத்தவில்லை?
உக்ரைன் மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியின் பங்குதாரராக இருந்தாலும், நேட்டோவின் உறுப்பினர் கிடையாது. அதன்காரணமாக, ஆர்டிகல் 5 அமல்ப்படுத்தவில்லை.
கடந்த மாத இறுதியில், தொலைக்காட்சி உரையில் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனை நேட்டோ கூட்டணியில் முழு அளவிலான உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதே சமயம், உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பப் போவதில்லை என்று நேட்டோ கூறியிருந்தாலும், ஆர்டிகல் 4வது பிரிவுக்கு அழைப்பு விடுத்தது.
அதாவது, கூட்டணியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான வடக்கு அட்லாண்டிக் கவுன்சிலின் ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த முயற்சியானது, வரலாற்றில் அரை டஜன் முறை மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. சொல்லப்போனால், உலகளவிலான அவரச நிலைமையின் தீவிரத்தை நிரூபிக்க, சுமார் எட்டு உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து அதனை தேர்ந்தெடுத்தால் போதுமானது ஆகும்.
நேட்டோவை ஆர்டிகல் 5ஐ செயல்படுத்த ஏது தூண்டலாம்?
நேட்டோ தனது கூட்டாளிகளில் ஒருவர் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதலைத் தொடுத்தால் மட்டுமே ஆர்டிகல் 5 ஐ செயல்படுத்தும்.
சில உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவின் சில சைபர் தாக்குதல்களின் தாக்கம் நேட்டோ உறுப்பு நாடுகளில் உணரப்படுவதாக எச்சரித்துள்ளதாக NPR தெரிவித்துள்ளது.
அமெரிக்க செனட் புலனாய்வுக் குழுவின் தலைவர் மார்க் வார்னர் NPR க்கு அளித்த பேட்டியில், நீங்கள் சைபர் தாக்குதலை தொடரும்போது, அவரை புவியியல் எல்லைகளை அடையாளம் காணாது. சைபர் தாக்குதலில் சில கிழக்கு போலந்தில் உள்ள அமைப்புகள் பாதிக்கப்படலாம் என்றார்
ரஷ்யா - நேட்டோ பிரச்சனை என்ன?
ஐரோப்பிய நிறுவனங்களுடன் குறிப்பாக நேட்டோவுடன் உக்ரைன் வளர்ந்து வரும் நெருக்கத்தை,நீண்டகாலமாக ரஷ்யா எதிர்த்து வருகிறது. முன்னாள் சோவியத் குடியரசான உக்ரைன் ஒருபுறம் ரஷ்யாவுடனும், மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது
மாஸ்கோ தாக்குதலைத் தொடங்கிய பிறகு, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விரைவாக பதிலடி கொடுத்தனர். ரஷ்யாவின் மத்திய வங்கி மற்றும் இறையாண்மை சொத்து நிதிகள் மீது தடைகளை விதித்தனர்
அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெல்லன் வெளியிட்ட அறிக்கையில், "இந்த நடவடிக்கை மூலம் ரஷ்யா தனது படையெடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதிக்கு சொத்துக்களைப் பயன்படுத்தும் திறனைக் கணிசமாகக் குறைக்கும். உக்ரைன் மீதான படையெடுப்பை தடுத்திட, புதின் மற்றும் அவரது உள் வட்டமும் சார்ந்திருக்கும் நிதியை குறிவைக்க வேண்டும் என்றார்.
English Article Written by RAHEL PHILIPOSE
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.