பாகிஸ்தான் அணியை திருப்பி அனுப்புவதாக நியூசிலாந்து மிரட்டியது ஏன்?

பாகிஸ்தானில் சிலர் இந்த நிகழ்வுகளைத் தங்கள் நாட்டிற்கு அவமரியாதையாக எடுத்துக்கொண்டு நியூசிலாந்து தங்கள் வீரர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தங்கள் நாட்டை அவமதித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

By: November 30, 2020, 5:40:30 PM

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நியூஸிலாந்து சுற்றுப் பயணத்தில், இதுவரை ஒரு பந்துகூட வீசப்படவில்லை. ஆனால், 3 டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரைப் பற்றி ஏற்கனவே நிறைய செய்திகள் வெளிவந்துள்ளன. அவை அனைத்தும் தவறான காரணங்களுக்காக வெளிவந்துள்ளன.

இந்த சுற்றுப்பயணத்தின் 7  உறுப்பினர்கள் நியூசிலாந்துக்கு சென்ற சில நாட்களில் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்ததால் இந்த சுற்றுப்பயணம் ஒரு நிச்சயமற்ற நிலைக்கு சென்றது. இப்போது உள்ளூர் தொற்று நோய் பரவல்கள் ஏதும் இல்லாத போட்டியை நடத்தும் நியூஸிலாந்து, தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறையை மீறியதாக பல நோயாளிகள் மீது குற்றம் சாட்டியுள்ளது. அந்நாடு சுற்றுலாப் பயணிகள் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்காவிட்டால் வீட்டிற்கு அனுப்பப்படலாம் என்று கூறும் அளவிற்கு சென்றுள்ளது.

என்ன நடந்தது?

பாகிஸ்தான் அணி தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு 4 சுற்று  பரிசோதனைகளை மேற்கொண்டது. மேலும், பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர். உண்மையில், இடது கை ஆட்டக்காரரான ஃபக்கர் ஜமானுக்கு காய்ச்சல் மற்றும் கோவிட் போன்ற பிற அறிகுறிகள் இருந்ததால் அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு உறுதி செய்திருந்தாலும் அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டார்.

இருப்பினும், இந்த சுற்றுப்பயணத்தின் 53 உறுப்பினர்களில் 6 பேர் – சர்பராஸ் அகமது, ரோஹைல் நசீர், நசீம் ஷா, முகமது அப்பாஸ், ஆபிட் அலி மற்றும் டேனிஷ் அஜீஸ் ஆகியோர் நவம்பர் 24ம் தேதி நியூசிலாந்துக்கு சென்றதும் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. உதவி பயிற்சியாளர் ஷாஹித் அஸ்லாமுக்கும் தொற்று உறுதி என பரிசோதனை முடிவு வந்தது. கிறிஸ்ட்சர்ச்சில் நிர்வகிக்கப்படும் ஒரு தனிமைப்படுத்தும் மையத்தில் வழக்கமான 3 நாள் பரிசோதனையில் கூடுதலாக ஒரு நபர் தொற்று உறுதி செய்தார்.

அந்நாட்டின் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் கருத்துப்படி, நியூசிலாந்து அதிகாரிகள் இது குறித்து மிகவும் ஒரு தெளிவற்ற பார்வையைப் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியினர் ஹால்வேஸில் ஒன்றாக சேர்ந்து உணவைப் பகிர்ந்துகொவது, எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணியாமல் இருப்பது போன்றவற்றில் ஈடுபட்டனர் – இவை தனிமைப்படுத்தும் நெறிமுறைகளின் தெளிவான மீறல் ஆகும். அந்த அணியின் பயிற்சி செய்யும் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன. சுகாதார அதிகாரிகளின் மதிப்பீடு நிலுவையில் உள்ளது. எந்தவொரு மீறல்களும் சுற்றுப்பயணத்தை ரத்துசெய்யும் என்று போட்டி நடத்தும் அரசாங்கம் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை அளித்துள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் ஒரு அறிக்கையில், சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவ நாங்கள் கலந்துரையாடுவோம்.” என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு எவ்வாறு பதிலளித்தது?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக பிரச்னையைத் தனிக்கும் மனநிலைக்கு வந்தது. பி.சி.பி தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது உயிர் பாதுகாப்பான சூழலில் தங்கியிருந்த வீரர்களுடன் பரிவு காட்டும்போது, ​இது நாட்டின் மரியாதை மற்றும் நம்பகத்தன்மைக்குரிய விஷயம் என்றார்.

“இந்த 14 நாட்களில் தொடர்ந்து கவனமாக இருங்கள். பிறகு, உங்களுக்கு உணவகங்களுக்குச் சென்று சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கான சுதந்திரம் இருக்கும். நாங்கள் இன்னும் ஒரு மீறலைச் செய்தால், அவர்கள் எங்களை வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று அவர்கள் என்னிடம் தெளிவாகக் கூறியுள்ளனர்” என்று பாக்கிஸ்தான் வீரர்களுக்கு வாட்ஸ்அப் செய்தியில் கான் கூறியதாக இ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் எதிர்வினை என்ன?

பாகிஸ்தானில் சிலர் இந்த நிகழ்வுகளைத் தங்கள் நாட்டிற்கு அவமரியாதையாக எடுத்துக்கொண்டு நியூசிலாந்து தங்கள் வீரர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தங்கள் நாட்டை அவமதித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

தனது கோபத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் மிக முக்கியமான முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில், தொற்றுநோய்களின் போது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதற்காக நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு கடன்பட்டிருக்க வேண்டும். இதனால் போட்டியை நடத்தும் நாடுகள் போட்டியை ஒளிபரப்புவதில் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று வாதிட்டுள்ளார்.

“இது ஒரு கிளப் அணி கிடையாது. இது பாகிஸ்தானின் தேசிய அணி – இந்த கிரகத்தின் மிகப் பெரிய நாடு ” என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறினார்.

“நீங்கள் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இந்த வகையான அறிக்கைகள் அளிப்பதை நிறுத்துங்கள். அடுத்த முறை நீங்கள் சொல்வதைப் பற்றி கவனமாக இருங்கள். நான் மிகவும் வேதனைப்படுகிறேன், விரக்தியடைகிறேன், கோபப்படுகிறேன்” என்று அக்தர் மேலும் கூறினார். மேலும், பிசிபி பனிவான அறிக்கைகளை ஏற்ககூடாது, “அவர்கள் அணியைத் திரும்ப அழைப்பதோடு, நியூசிலாந்திற்கு எதிராக ஐந்து ஆண்டுகள் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்திருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் அவர்கள் செய்யும் செயல்களில் மிகவும் கவனமாக இருக்குமாறு ஆலோசனை வழங்கிய பின்னர், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக செய்யப்பட்டதைப் போல, சுற்றுப்பயணத்தை நியூசிலாந்திற்கு நேரடி தனி விமானத்தில் அனுப்பாததற்காக பி.சி.பி-யை அவர் திட்டினார். வெளிப்படையாக, இந்த அணி ஆக்லாந்தில் தரையிறங்குவதற்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கும், பின்னர் கோலாலம்பூருக்கும் சென்றது, வழியில் வெளிப்படும் அபாயத்தை அதிகரித்தது.

வீரர்கள் தங்கள் தனிமைப்படுத்தலை எங்கு செலவிடுவார்கள் என்பது குறித்து முன்பே தெளிவு இருந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பாகிஸ்தான் வீரர்கள் ஒரு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் விதிவிலக்காக எடுத்துக் கொண்டார்.

இப்போது என்ன நடக்க வாய்ப்புள்ளது?

சமீபத்திய கோவிட் பரிசோதனைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொற்று உறுதி என்ற முடிவுகள் இருந்திருந்தால், குறிப்பாக பி.சி.பி.க்கு கவலைப்படுவதற்கு ஒரு பெரிய காரணம் இருந்திருக்கும்.

ஆக்லாந்தில் 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் 6 வீரர்கள் மற்றும் உதவி பயிற்சியாளர் அணியில் சேருவார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட 6வது மற்றும் 12 வது நாட்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்னர் மீதமுள்ள இரண்டு பரிசோதனைகளுக்கு உட்படுவார்கள். இ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ குறிப்பிட்டுள்ளபடி, பரிசோதனையில் முழுவதுமாக தொற்று இல்லை என்று உறுதி செய்யப்படுபவர்கள் தங்கள் அறைகளின் பால்கனிக்கு சென்று அருகிலுள்ள பூங்காவை பார்வையிடலாம்.

இருப்பினும், அவர்கள் தனிமையில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் முடிவுக்கு உட்பட்டது.

டிசம்பர் 26ம் தேதி டெஸ்ட் போட்டிகள் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, 3 டி20 போட்டிகள் டிசம்பர் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு அணி நெறிமுறைகளை மீறுவது இது முதல் நிகழ்வா?

இல்லை. மேற்கிந்திய தீவுகள் அணியும் தற்போது நியூசிலாந்தில் உள்ளது. அவர்களும் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அவர்கள் உணவைப் பகிர்ந்துகொண்டு தங்கள் ஹோட்டலின் மண்டபங்களில் கூடியிருந்ததாகக் கண்டறியப்பட்ட பின்னர் பயிற்சியிலிருந்து தடைசெய்யப்பட்டனர். தனித்தனியாக, ஒன்றாக பயிற்சியளிக்கப்பட வேண்டி, பாதுகாப்பு குமிழின் ஒருமைப்பாட்டை சமரசம் செய்து இரண்டு பாதுகாப்பு சூழலுக்கும் தலா 20 பேர் என்று பிரிக்கபட்டனர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சிவப்பு முகமாக இருந்தது. பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. “எங்களை இங்கு வர அனுமதித்த நியூசிலாந்து பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்திடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். இது எங்கள் பார்வையில் சங்கடமாக இருக்கிறது” என்று அவர் நியூஸ்ஹப்பிடம் கூறினார்.

அந்த அணி 4 நாட்கள் பயிற்சியை இழந்தது. மேலும், நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டிகளுக்கு அவர்கள் குறைவான கூர்மையுடன் இருந்திருக்கலாம். ஏனெனில், அவர்கள் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்றுவிட்டார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Why new zealand threatened to send pakistan cricket team back home

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X