கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு ஏன் புதிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது? விளக்கப் படங்கள்
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுமா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என அனைத்து சந்தேகங்களையும் விளக்குகிறது இந்த சிறப்பு விளக்கப்படங்களின் தொகுப்பு.
உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை வகைப்படுத்தியுள்ளது. பி.1.1.529 என்ற பரம்பரையைச் சேர்ந்தது. இதற்கு ஒமிக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து, ப்ரிட்டன், ஹாங்காங், போட்ஸ்வானா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் பரவி உள்ளது.
Advertisment
ஒமிக்ரான் ஏன் மற்ற மாறுபாடுகளில் இருந்து வேறுபடுகிறது? இது ஏன் அதிக ஆபத்தான மாறுபாடாக கருதப்படுகிறது? தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுமா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என அனைத்து சந்தேகங்களையும் விளக்குகிறது இந்த சிறப்பு விளக்கப்படங்களின் தொகுப்பு.
Advertisment
Advertisements
புதிய மாறுபாட்டின் தோற்றம், கொரோனா தொற்றின் முடிவு மிகவும் தொலைவில் உள்ளது என்பதையே உணர்த்தியுள்ளது. கொரோனா பரவும் சங்கிலியை உடைப்பதற்காக கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. முகக்கவசங்கள், சமூக இடைவெளி, காற்றோட்டமான இடங்களில் இருத்தல் மற்றும் கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil