ஒரிசா மாநிலத்தில் திடீரென கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?
ஒரிசாவின் மொத்த எண்ணிக்கையில் 80 சதவீதத்திற்கும் (240 பேர்) அதிகமான பாதிப்புகள் கஞ்சாம், குர்தா, ஜாஜ்பூர் , பத்ராக், பலேஸ்வர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காணப்படுகிறது
ஒரிசாவின் மொத்த எண்ணிக்கையில் 80 சதவீதத்திற்கும் (240 பேர்) அதிகமான பாதிப்புகள் கஞ்சாம், குர்தா, ஜாஜ்பூர் , பத்ராக், பலேஸ்வர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காணப்படுகிறது
கொரோனாவில் மிகவும் குறைவான பாதிப்பை சந்தித்து வந்த ஓரிசா மாநிலத்தில், நேற்று மட்டும் புதிதாக 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரிசாவைப் பொறுத்த வரையில், இது ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த இரண்டு நாட்களில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பதன் மூலம், மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்களால் ஒரிசாவில் தொற்று எண்ணிக்கை அதிகமாவதாக கருதப்படுகிறது.
Advertisment
மொத்த எண்ணிக்கையில் 80 சதவீதத்திற்கும் (240 பேர்) அதிகமான பாதிப்புகள் கஞ்சாம், குர்தா, ஜாஜ்பூர் , பத்ராக், பலேஸ்வர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காணப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகபட்ச எண்ணிக்கையில் வந்தடைந்ததும் இந்த மாவட்டங்கள் தான். கஞ்சாம் மாவட்டத்தில் மட்டும் கடந்த சில நாட்களாக சுமார் 8000 தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். மாவட்டத்தின் 83 என்ற மொத்த எண்ணிக்கையில், 79 பாதிப்புகள் கடந்த மூன்று நாட்களில் கண்டறியப்பட்டவையாகும்.
நேற்று (வெள்ளிகிழமை) மட்டும் இந்தியாவில் 3340 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 15 குறைவானதாகும். இதுவரையில், மொத்தமாக 59,564 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்போது தான், தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. உதாரணாமாக, வியாழக்கிழமை இந்தியாவின் எண்ணிக்கை 3355 ஆகும். இது முந்தைய நாளை விட 175 குறைவாக இருந்தது.
Advertisment
Advertisements
3.2 சதவீத நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை யும், 4.7 சதவீதம் பேருக்கு அவசர சிகிச்சைப்பிரிவிலும் சிகிச்சை அளிக்கப் படுகிறது. 1.1 சதவீதம் பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மூன்று நாட்களுக்குப் பிறகு கேரளாவின் எர்ணாகுளத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 503- க உள்ளது. அவற்றில், 484 பேர் குனமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று, 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 6009 ஆக அதிகரித்துள்ளது.கடந்த பத்து நாட்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மூன்று மடங்காக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. ஏப்ரல், 28 அன்று கொரோனா தொற்று எண்ணிக்கை 2058, மே- 9 அன்று மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 6009. கோயம்பேடு சந்தை பரவலின் மையமாக உருவெடுத்ததாலும், பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தியதாலும் இந்த தமிழகத்தில் இந்த உயர்வு காணப்படுகிறது. மஹாராஷ்டிராவில் 2,02,105 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்றுவரை 2,16,416 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil