கடந்த 15 நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒவ்வொன்றும் லிட்டருக்கு ரூ.9.20 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலையை மாற்றியமைப்பதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை மேலும் எவ்வளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது?
வாகன எரிபொருட்களின் விற்பனையில் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை விலையை தீர்மானிக்கும் கச்சா எண்ணெய் விலையில் பீப்பாய் ஒன்றுக்கு 1 டாலர் உயர்ந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் ரூ.0.52 - 0.60 பைசா உயர்த்தப்படும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை நவம்பர் 4 முதல் பீப்பாய் ஒன்றுக்கு 28.4 டாலர் அதிகரித்து ஒரு பீப்பாய் விலை 108.9 டாலராக உள்ளது. எரிபொருள் விலைகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தற்போதைய விலையில் 5.50 - 7.80 ரூபாய் வரை மேலும் உயரக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
நவம்பர் 4ம் தேதி உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக 137 நாட்களுக்கு விலை விலை மாற்றங்களை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.
“தற்போதைய வரி விகிதங்களில் கச்சா எண்ணெய் விலையில் ஒவ்வொரு டாலர் 1 விலை உயர்வுக்கும், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் 60 பைசா அதிகரிக்க வேண்டும்” என்று கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ-இன் துணைத் தலைவர் & இணை குழு தலைவர் பிரசாந்த் வசிஷ்ட் கூறினார்.
எப்படியாக இருந்தாலும், பெட்ரோல், டீசல் இரண்டின் மீதான கலால் வரியை குறைப்பதன் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க மத்திய அரசு முடிவெடுக்கலாம். 2021 நவம்பரில் பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டாலும், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டாலும், தொற்று நோய்காலத்தில் இருந்து விலையுடன் ஒப்பிடுகையில், மத்திய வரிகள் முன்பை விட பெட்ரோல் மீது லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீது 6 ரூபாயும் அதிகமாக உள்ளது. டெல்லியில் தற்போது பெட்ரோல் விலையில் 43 சதவீதமும், டீசல் பம்ப் விலையில் 37 சதவீதமும் மத்திய மற்றும் மாநில வரிகள் உள்ளன.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் கடந்த வாரம் எல்.பி.ஜி.-யின் விலையை ரூ.50 உயர்த்தி, தலைநகர் டெல்லியில் சமையல் எரிவாயுவின் விலை 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.949 ஆக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தற்போதைய விலையில் எல்.பி.ஜி விற்பனையில் இன்னும் நஷ்டம் அடைந்து வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் திடீர் விலை உயர்வு ஏன்?
மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் மீது லிட்டருக்கு 10 ரூபாயும் கலால் வரி குறைத்து அறிவித்த பிறகு, நவம்பர் 4-ம் தேதி தொடங்கி 137 நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மாற்றாமல் வைத்திருந்தன. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விலை மாற்றம் செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதால், இந்தக் காலகட்டத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வின் முழுத் தாக்கமும் இப்போது நுகர்வோருக்குக் கடத்தப்படுகிறது. 15 நாட்களில் 13 முறை விலை உயர்ந்த பிறகு, தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.60 ஆகவும், டீசல் விலை ரூ.95.90 ஆகவும் உயர்ந்துள்ளது.
சாதாரணமாக, பெட்ரோலியப் பொருட்களின் சர்வதேச விலையின் 15 நாள் சுழற்சியில் சராசரிக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி மாற்றி அமைக்கப்படுகின்றன.
ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் சவூதி அரேபியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் பற்றிய கவலைகளுக்கு வழிவகுத்தது. இது கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.