இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்று எட்டு மாதங்களுக்குப் பிறகு, அவருடைய மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய கட்சி ஸ்ரீ லங்கா பொதுபல பெரமுனா (எஸ்.எல்.பி.பி) கோட்டாபயாவின் வெற்றியை உறுதி செய்துள்ளது. அவரது கட்சி ஆகஸ்ட் 5 புதன்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற முனைகிறது.
கடந்த ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின்னர், ஜனாதிபதி கோட்டாபய நாடாளுமன்றத்தை கலைத்ததிலிருந்து நிலவும் அரசியலமைப்பின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கிறது. கடந்த ஆண்டு தனது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, எஸ்.எல்.பி.பி பெரும்பான்மையைப் பெறவில்லை என்றாலும் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க அனுமதித்தார்.
களத்தில் உள்ள கட்சிகள்
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 225 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 70 கட்சிகள், 313 சுயேச்சைக் குழுக்கள் மற்றும் 7,452 வேட்பாளர்கள் வாக்குச் சீட்டுகளில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில், சிறுபான்மையினர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து சுமார் இரண்டு டஜன் இடங்கள் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையை அடைவதற்கான ஆளும் கட்சியின் அபிலாஷைகளுக்கு எதிராக முக்கிய பங்கு வகிப்பார்கள்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எஸ்.எல்.பி.பி வெற்றிக்கான வலுவான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி (யு.என்.பி) மற்றும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயாவால் தோற்கடிக்கப்பட்ட சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த சமகி ஜன பலவேகயா (எஸ்.ஜே.பி). ஆகியவை பலவீனமாகவும் பிளவுபட்டும் உள்ளன.
சுமார் ஒன்பது சிறிய கட்சிகளின் ஆதரவுடன் எஸ்.எல்.பி.பி மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையைப் பெற வாய்ப்பில்லை. மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை எந்தவொரு அரசியலமைப்பு திருத்தங்களையும் நிறைவேற்றுவதற்கு அவசியமானது. ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயாவுக்கு எதிராக வாக்களித்த நாட்டின் சிறுபான்மை தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் இந்த முறை பிரிக்கப்படலாம் என்பது ஆளும் கட்சிக்கு வலுவான நம்பிக்கையை அளிக்கிறது.
சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில அரசியல் கட்சிகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. ஏனெனில், தேர்தலில் அவர்களின் செயல்திறன் ராஜபக்ச குடும்பத்தால் விரும்பப்படும் முன்னோடியில்லாத சக்திகளை வரையறுக்கும்.
வடக்கு இலங்கையில் தமிழர்களின் ஒரு பெரிய அளவிலான வாக்குகளை தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ) பெற்று வந்தது. 2015 முதல் ஆட்சியில் இருந்த முந்தைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் அரசாங்கத்தில் தமிழர்களின் பிரச்னைகள் குறித்த அலட்சியம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலற்ற தன்மை குறித்து தமிழர்களிடையே வளர்ந்து வரும் அவநம்பிக்கை காரணமாகவும் அது இந்த தேர்தலில் வாழ்வா சாவா சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.
19வது திருத்தம் 1978ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை குறைத்துள்ளதால், ஜனாதிபதி கோட்டாபய 130 இடங்களுக்கு குறையாமல் அதிகபட்ச இடங்களை வெற்றி பெறவேண்டியது முக்கியமானது ஆகும். அதனால், ஒரு கௌரவமான வெற்றியுடன், அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள முக்கியமான முடிவுகளை செயல்படுத்த முடியும் என்று எஸ்.எல்.பி.பி நம்புகிறது.
கோவிட் -19 க்கு இடையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான சவால்கள்
கோவிட் -19 க்கு இடையில் தேர்தல் நடத்துவதால் இது இலங்கை வரலாற்றில் மிகவும் செலவுமிக்க தேர்தலாக அமைகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, வாக்குப்பதிவின் போது 8,000க்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள் சுமார் 69,000 காவல்துறையினருக்கு உதவுவார்கள்.
ஏற்றுமதி உற்பத்தி மற்றும் சுற்றுலாவில் பெருமளவில் வருமானம் பெறும் ஒரு நாட்டில், கோவிட்-19 இன் தாக்கம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
தொற்றுநோய்க்குப் பிறகான காலம், பெரும்பாலும் சீனாவிற்கு கடன்பட்டிருக்கும் பெரிய பொதுக் கடன் சவால்களுடன் இலங்கையின் பொருளாதாரம் பலவீனமாகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட் -19இன் தாக்கம் குறித்து ஒரு தேசிய தொழிலாளர் துறை கணக்கெடுப்பு செய்ததில் வணிகங்களின் நிலை மேம்படவில்லை என்றால் சுமார் 300,000 ஊழியர்கள் குறுகிய காலத்தில் தனியார் துறையில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மதிப்பிடுகிறது.
இலங்கையில் தற்போதைய வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கை செய்துள்ள இந்த கணக்கெடுப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8% முதல் 9% வரை பணம் அனுப்புவது வெகுவாகக் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், “வெளிநாடுகளில் தங்கள் பணிக்கான தேவை கிடைக்காததால் கணிசமான எண்ணிக்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் எப்போதும் ஏழ்மையாகவும் பலவீனமாகவும் இருந்தபோதிலும், சுமார் 50 சதவீத வேலை இழப்புகள் இலங்கை கிராமங்களில் நிலைமையை மோசமாக்கியுள்ளன.
நாட்டின் கொள்கைகளில், அரசியலில் அடுத்தது என்ன?
தமிழ் சிறுபான்மையினர் மீதான அரசியல் ஏகபோக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இழந்து வரும் நேரத்தில், பெரும்பான்மை சிங்கள பௌத்த வாக்காளர்களால் ஆதரிக்கப்படும் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவது, ஜனாதிபதி கோட்டாபயாவின் கொள்கைகள், அரசியல் ஆகியவை தேர்தலுக்குப் பின்னர் இலங்கைக்கு முக்கியமானதாக இருக்கும்.
பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட கோட்டாபய ஆட்சியின் கடைசி எட்டு மாதங்கள் அவர் பெரும்பான்மை சிங்களவர்களுக்காக மட்டுமே நிற்கிறார் என்ற குற்றச்சாட்டுகளை தகர்த்ததாக எஸ்.எல்.பி.பி கூறுகிறது. இருப்பினும், பல தசாப்தங்களாக இன மோதல்களைக் கண்ட ஒரு நாட்டில் இலங்கையின் அரசியல் எதிர்க்கட்சி தனது பங்கை ஆற்றவும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் வலிமையாக இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.