Advertisment

Explained : ராஜ்ய சபா மார்ஷல் உடைகளில் மாற்றம் செய்வது ஏன் ?

பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி : மார்ஷல்களின் முந்தைய சீருடை ராஜ்ய சபாவிற்கே உரித்தான ஒரு அடையாளமாகும், இது தான் கடந்து வந்த நாட்களை ஞாபகப்படுத்துகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajya sabha marshal uniform change,rajya sabha upsc, rajya sabha marshal functions, rajya sabha,

rajya sabha marshal uniform change,rajya sabha upsc, rajya sabha marshal functions, rajya sabha,

கடந்த திங்களன்று ராஜ்யசபாவின்  மார்ஷல்கள் அடர்த்தியான சூட்டு அணிந்தும், ஆயுதப் படைகள் பயன்படுத்தும் தொப்பிகளோடு காட்சியளித்தனர். முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து வந்த விமர்சனங்களுக்கு மத்தியில், மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு செவ்வாய்க்கிழமை புதிய சீருடையை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

Advertisment

publive-image

 

என்ன மாற்றப்பட்டது- 

பொதுவாக, மாநிலங்களவையில்  இருக்கும் மார்ஷல்கள் வெள்ளை சஃபாரி சூட்கள் அணிந்து கொண்டும், வெள்ளை நிற தலைக்கட்டுடன் காட்சியளிப்பார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், 1965ம் ஆண்டு முதல், மார்ஷல்களின் தோற்றம் இதுவாகத் தான் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், கடந்த ஐம்பது ஆண்டுகளாக வெள்ளை சஃபாரி சூட்கள் நடைமுறை பழக்கத்தில் இருந்தது என்பதை நாம்  புரிந்துக் கொள்ளலாம்.

 

publive-image

 

இந்த மார்ஷல்களின் பணிகள் என்ன- 

ராஜ்ய சபாவின் தலைவர், துணைத் தலைவர் (கள்), தலைமை அதிகாரிகளுக்கு உதவுவதே இந்த மார்ஷல்களின் பணியாகும். மார்ஷல்களின் நியமனம், பதவிக் காலம் அனைத்தும் மற்றும் ராஜ்ய சபா தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும்.

இந்த மாற்றம் ஏன் ? 

ராஜ்யசபா வட்டாரங்கள் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற ஆங்கில நாளிதழிடம் தெரிவிக்கையில்,"மார்ஷல் பணிபுரிபவர்களே இந்த மாற்றத்தை விரும்பியதாக கூறப்படுகிறது. நவீன தோற்றத்துடனும், அனைவராலும் எளிதாக அணுகக்கூடிய ஒரு உடையை நாடியதாகவும் தெரிகிறது. அவை உறுப்பினர்களுக்கு பணி செய்யும் சபை உதவியாளர்களின் ஆடையைப் போல் இருப்பதால், மார்ஷல்கள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சபை உதவியாளர்கள் மார்ஷல்களின் ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை சஃபாரி சூட் ஊழியர்களின் சீருடையைப் போன்று இருக்கின்றது, ஆனால் மார்ஷல்கள்  ஒரு அதிகாரிகளாக இருப்பதால், மார்ஷல்கள் நீண்டகாலமாக தங்கள் உடையை மாற்றக் கோரி வந்திருந்தனர். மேலும், அந்த சிக்கலான தலைபாகையை  அணிய நீண்ட நேரம் எடுக்கும் என்று நினைக்கின்றனர்.

இதனையடுத்து, ராஜ்ய சபா செயலகத்தின் மூத்த அதிகாரிகள் ( அவை பாதுகாப்பு அதிகாரி  உட்பட)  மார்ஷல்களின் உடையைக் குறைத்து ஒன்றாக கூடி விவாதித்தனர். மார்ஷலகல் தோற்றத்தை மாற்றுவதற்கான அனைத்து முடிவுகளும் வெளிநிபுணர்களின் உதவி இல்லாமல் சபைக்குள்ளே எடுக்கப்பட்டது என்று ராஜ்ய சபா வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

ஏன் பிரச்சனையானது - 

மார்ஷல்களின் புதிய சீருடை இராணுவ அதிகாரிகள் அணியும் உடையோடு ஒத்தியுள்ளது. முன்னாள் இராணுவப் படைத் தளபதி ஜெனரல் வி.பி மாலிக் தனது ட்வீட்டரில்  “இராணுவத்தில் இல்லாத நபர்கள் இராணுவ சீருடைகள் ஒத்தியிருப்பது போல் அணிவது  சட்டவிரோதமானது என்றும், நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தானது என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த ட்விட்டரை ராஜ்ய சபா தலைவர், ராஜநாத் சிங், ராஜ்ய சபா செயலகம் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

ஜெனரல் வி.பி மாலிக் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் உடன் பேசுகையில், “  பெரும்பாலும் நாம் ஒரு வரையறையை  பின்பற்றிவருகிறோம். சமீபத்தில் கூட உள்துறை அமைச்சகம் இராணுவத்திற்கு வெளியே உள்ளவர்கள் இராணுவ சீருடையை நகலெடுத்து அணியக்கூடாது என்ற சுற்றறிக்கையும்  அனுப்பியிருந்தது . இராணுவம் அல்லாதவர்களால் இத்தகைய சீருடைகளை அணிவது நாட்டின் பாதுகாப்புக்கே அபாயமாகும்.  இது ஆள்மாறாட்டத்திற்கு வழிவகுக்கும் . கடந்த காலங்களில், பாராளுமன்றம்  தாக்குதல்களை எதிர்கொண்டது' என்றார்.

பெயர் சொல்ல விரும்பாத ராஜ்ய சபாவின் முன்னாள் தலைமை அதிகாரி, ஒருவர் கூறுகையில்  “அவர்கள் தற்போது ஆளுநருக்கு உதவியாக இருக்கும் ஏடிசி (அல்லது)  ஜனாதிபதியின் ராணுவச் செயலாளர் இருப்பதை போன்ற  ஒரு தோற்றத்தை தேடிவருகின்றனர். மார்ஷல்களின் முந்தைய சீருடை ராஜ்ய சபாவிற்கே உரித்தான ஒரு அடையாளமாகும், இது தான் கடந்து வந்த நாட்களை ஞாபகப்படுத்துகிறது. மக்களவையும் இதுபோன்ற ஒரு மாற்றத்தை தேடாமல் இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி," என்றும் குறிப்பிட்டார்.

Rajya Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment