உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும்
Anil Sasi
Advertisment
வங்கிக் கடனுக்கான வட்டிவீதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் 4 சதவீதமாக தொடர்கிறது என்றும், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நெகட்டிவ்வாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டின் இறுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) நெகட்டிவாக இருக்கவே வாய்ப்புள்ளது என்று சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி ஏன் வட்டி விகிதங்களை குறைக்கவில்லை?
Advertisment
Advertisements
கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த இந்தியப் பொருளாதாரம் புதிய லாக் டவுன்களுடன் இன்னமும் சிக்கிக் கொண்டிருப்பதால், தேவை குறித்த தொடர்ச்சியான கவலைகள், குறிப்பாக குடியிருப்பு ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற துறைகளில், ரிசர்வ் வங்கி கொள்கையை மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
MPC (நிதிக் கொள்கைக் குழு) வட்டி விகிதங்களைக் குறைக்காததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம்.
முதலாவது காரணம், நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்பட்ட சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.09 சதவீதமாக உயர்ந்து மார்ச் மாதத்தில் 5.84 சதவீதமாக இருந்தது, இது மத்திய வங்கியின் நடுத்தர கால இலக்கு வரம்பான 2-6 சதவீதத்தை மீறியது. இது ஒரு பெரிய red flag என்று தெரிகிறது. இதுவே, கொள்கை விகிதங்களைக் குறைப்பதைத் தவிர்ப்பதற்கான MPC இன் முடிவுக்கு காரணமானது.
நல்ல பருவமழை மற்றும் காரீஃப் பருவ விளைச்சலில் உயர்வு ஆகியவற்றுடன் விவசாயத் துறை வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளபோதும், உள்நாட்டு உணவு பணவீக்கம் உயர்ந்து வருவது குறித்த கவலைகளை தாஸ் குறிப்பாக சுட்டிக் காட்டினார்.
இரண்டாவது காரணம், மே மாதத்தில், MPC ரெப்போ விகிதத்தை 40 பிபிஎஸ் குறைத்து 4 சதவீதமாகக் கொண்டு வந்தது. அதே நேரத்தில் அதன் accommodative கொள்கை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தது. இதன் விளைவாக, கடந்த ஏழு மாத காலப்பகுதியில், COVID-19 பரவல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், MPC ஏற்கனவே ரெப்போ விகிதத்தை 115 பிபிஎஸ் குறைத்துள்ளது, வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்றம் இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை.
பரந்த பார்வையில், நிதிச் சந்தைகள் மிதமாக இருந்தபோதும், உலகளாவிய பொருளாதார செயல்பாடு பலவீனமாக உள்ளது என்று தாஸ் கூறினார். உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும், "COVID-19 கட்டுப்பாட்டு முயற்சிகள் குறித்த எந்தவொரு சாதகமான செய்தியும் இந்த சூழ்நிலையை மாற்றும்" என்று அவர் கூறினார்.
.தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil