ஆர்.பி.ஐ பெரிய கார்ப்பரேட்களுக்கு வங்கி உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்க காரணம் என்ன?

நவம்பர் 26ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி ஐ.டபிள்யூ,ஜியின் 33 பரிந்துரைகளில் 21 பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது. இதில் தனியார் வங்கிகளுக்கான உரிமம் தொடர்பான பரிந்துரைகளும் இருந்தன. ஆனால் பெரிய வணிக குழுக்களுக்கு வங்கி உரிமம் தருவது தொடர்பாக நீண்ட மௌனத்தை கடைபிடித்து வருகிறது ஆர்.பி.ஐ. வங்கி.

RBI, connected lending, corporate, business, banking sector

George Mathew 

RBI has kept entry of big businesses in banking on hold for now: பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி உரிமம் வழங்குவதற்கான ஆர்.பி.ஐயின் இண்டர்நெல் வொர்க்கிங் க்ரூப் வழங்கியுள்ள முன்மொழிவை ஆர்.பி.ஐ., இணைக்கப்பட்ட கடன் மற்றும் சுய-வியாபாரம் ஆகியவை வங்கியில் அனுமதிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்ற அச்சங்களுக்கு மத்தியில் முடக்கியுள்ளது.

கவலைப்பட என்ன இருக்கிறது?

கார்ப்பரேட்களை வங்கி பிரிவிற்கு அழைத்து வருவதன் மூலம் மூலதனம், வணிக அனுபவம் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவற்றை கொண்டு வர இயலும். ஆனால், வங்கிகள் மறைத்துவிடக் கூடிய சுய-வியாபாரம் அல்லது இணைக்கப்பட்ட கடனைத் தடுப்பது அல்லது கண்டறிவது மேற்பார்வையாளர்களுக்கு எளிதானது அல்ல என்ற அச்சம் உள்ளது. சிக்கலான நிறுவன கட்டமைப்புகள் மற்றும் துணை நிறுவனங்களுக்குப் பின்னால் அல்லது விளம்பரதாரர்கள் மற்றும் அவர்களின் குழு நிறுவனங்களின் சப்ளையர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் இணைக்கப்பட்ட கட்சி அல்லது தொடர்புடைய கட்சிகளுக்கு கடன் தருவது மறைக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. பிறகு இந்த கடன்கள் வங்கியின் மோசமான கடனாக மாறலாம். மேலும் அதிக அதிக கடன்பட்டுள்ள மற்றும் அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தொகை மற்றும் உரிமங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் திறன் இருக்கும்.

நவம்பர் 26ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி ஐ.டபிள்யூ,ஜியின் 33 பரிந்துரைகளில் 21 பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது. இதில் தனியார் வங்கிகளுக்கான உரிமம் தொடர்பான பரிந்துரைகளும் இருந்தன. ஆனால் பெரிய வணிக குழுக்களுக்கு வங்கி உரிமம் தருவது தொடர்பாக நீண்ட மௌனத்தை கடைபிடித்து வருகிறது ஆர்.பி.ஐ. வங்கி.

இணைக்கப்பட்ட கடன் என்றால் என்ன?

இணைக்கப்பட்ட கடன் வழங்குதல் என்பது வங்கியின் கட்டுப்பாட்டு உரிமையாளர் தனக்கு அல்லது அவருடன் தொடர்புடைய கட்சிகள் மற்றும் குழு நிறுவனங்களுக்கு சாதகமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் கடன்களை வழங்குவதை உள்ளடக்கியது. வணிகக் குழுக்களுக்கு நிதியுதவி தேவை என்கிற பட்சத்தில் அவர்களிடத்தில் வங்கி இருந்தால் எந்த கேள்வியும் கேட்காமல் எளிதாக கடன் பெற முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நிறுவனங்கள் இந்த வக்கிகளை தயார் நிலையில் இருக்கும் நிதிகளின் தனிப்பட்ட தொகுப்பாக காணும் என்பதாகும். பெரிய வணிகக் குழுக்கள் ஏற்கனவே வங்கியின் விளம்பரதாரர்களாக மாறாமல் கூட வங்கி அமைப்பில் செயல்படாத சொத்துக்களின் (NPAs) பெரும்பகுதியைக் கணக்கிட்டுள்ளன.

2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.டபிள்யூ.ஜி தன்னுடைய அறிக்கையை வெளியிட்ட போது முன்னாள் ஆர்.பி.ஐ. ஆளுநர் ரகுராம் ராஜன் துணை ஆளுநர் விரல் ஆச்சர்யா வணிக நிறுவனங்கள் வங்கித்துறைக்கு வருவதை கடுமையாக எதிர்த்தனர். தொழில்துறை நிறுவனங்களுக்கு நிதி தேவைப்பட்டால், அவர்கள் உள் வங்கி வைத்திருந்தால் எளிதாகப் பெறலாம் என்று கூறினார்கள். இது போன்ற இணைக்கப்பட்ட கடன்கள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. கடன் வாங்கும் நபர்களாலே வங்கிகள் நடத்தப்பட்டால் வங்கிகள் எப்படி சிறந்த கடன்களை வழங்க முடியும்? உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் கொண்ட ஒரு சுயாதீனமான உறுதியான கட்டுப்பாட்டாளர் கூட, மோசமான கடன் வழங்குவதைத் தடுக்க நிதி அமைப்பின் ஒவ்வொரு மூலையிலும் இருப்பது கடினம் என்று அவர்கள் இருவரும் இணைந்து எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டனர். இதுவரையில் மிகப் பெரிய அச்சம் சுய-வியாபாரம் பற்றியது – நிறுவனங்கள் வங்கியை எளிதில் கிடைக்கும் நிதிகளின் தனிப்பட்ட தொகுப்பாகப் பயன்படுத்தும் என்று 2011ம் ஆண்டில் ஆர்.பி.ஐ. ஆளுநராக பணியாற்றிய டி. சுப்பாராவ் குறிப்பிட்டார்.

இதுவரை நடைபெற்றது என்ன?

ஐந்து சகாப்தங்களுக்கு முன்பு வரை வங்கித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டன. இணைக்கப்பட்ட கடன்கள் மற்றும் பயனாளிகளின் பணத்தை தவறாக பயன்படுத்தியது போன்ற புகார்கள் எழுந்த நிலையில் 60களுக்கு பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டுவிட்டது. தாராளமயமாக்கலுக்கு பிறகு 1993ம் ஆண்உக்கு பிறகு தனியார் நிறுவனங்களுக்கு முதற்சுற்று உரிமங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு இரண்டு சுற்று உரிமங்கள் தனியார் வங்கிகளுக்கு 2003-2004 மற்றும் 2013-2014 ஆண்டுகளில் வழங்கப்பட்டது. இருப்பினும், ஆதித்யா பிர்லா குழுமம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் பஜாஜ் குழுமம் உள்ளிட்ட முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் 2013-14 இல் ஆர்வம் காட்டினாலும் வணிக நிறுவனங்களாக அவை கருதப்படவில்லை.

தொழில்துறை குழுக்கள் வங்கிப் பங்குகளை வைத்திருக்க முடியுமா?

பெரிய தொழில் நிறுவனங்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் புதிய தனியார் துறை வங்கியின் பங்குகளில் 10 சதவீதம் வரை பங்குபெற அனுமதிக்கப்படுவதாகவும், வங்கியில் வட்டியைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் மத்திய வங்கி கூறுகிறது. இப்படியான பங்குதாரர்கள் வங்கிக்குழுவின் இயக்குநராக இருக்கக் கூடாது என ஆகஸ்ட் 2016 இல் வெளியிடப்பட்ட தனியார் துறையில் யுனிவர்சல் வங்கிகளுக்கு ‘ஆன் டேப்’ உரிமம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களில் ஆர்பிஐ கூறியுள்ளது. மொத்த சொத்துக்கள் அல்லது மொத்த வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட குழுவின் நிதி அல்லாத வணிகத்துடன் ரூ. 5,000 கோடி அல்லது அதற்கு மேற்பட்டவை பெரிய தொழில்துறை நிறுவனமாக கருதப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why rbi has kept entry of big businesses in banking on hold for now

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com