GST revenue collection data : ஆகஸ்ட் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியானது ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.எடியைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து இரண்டு மாதங்களாக ஜி.எஸ்.டி. ரூ. லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவிட் தொற்றுநோய் இரண்டாம் அலையின் போது தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட உள்ளூர் ஊரடங்குகளுக்கு பிறகு பெறப்பட்டுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.எடி வசூல் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் குறிக்கிறது.
ஜி.எஸ்.டி. வசூல் எவ்வளவு?
ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ .1,12,020 கோடியாக வந்தது, கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ. 86,449 கோடி வசூலானது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 29.6% கூடுதலாக வரி வசூல் ஆகியுள்ளது.
மொத்தமாக வசூலிக்கப்பட்ட ரூ. 1.12 லட்சம் கோடியில், சி.ஜி.எஸ்.டி. ரூ. 20,522 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ. 26,607 கோடி, ஐ.ஜி.எஸ்.டி. ரூ. 56,247 கோடி (பொருட்கள் இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ. 26,884 கோடி உட்பட), செஸ் ரூ. 8646 கோடி (ரூ. 646 கோடி இறக்குமதி வரி உட்பட) ஆகும்.
இது எதைக் குறிக்கிறது?
‘
ஜூலை மாதத்தில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிகம் மதிப்புள்ள சரக்குகளுக்காக விதிக்கப்பட்ட இ-வே பில்கள் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் வெளிப்படையாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்திலும் அவை சீராக இருந்தன.
ஜூலை மாதத்தில், இ-வே பில் உற்பத்தி ஜூன் மாதத்தில் 5.46 கோடியிலிருந்து 6.41 கோடியாகவும், மே மாதத்தில் இது 4 கோடியாகவும் உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இ-வே பில் உற்பத்தி 6.33 கோடியாக சீராக உள்ளது. தினசரி சராசரி இ-வே பில்கள் சுமார் 21.1 லட்சம், ஜூலை மாதத்தை விட சுமார் 2 சதவீதம் அதிகம்.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட முதல் காலாண்டுக்கான ஜிடிபி தரவு, குறைந்த அடிப்படை விளைவு காரணமாக, 20.1 சதவிகித உயர் வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்தது. ஏப்ரல்-மே மாதங்களில் தொற்றுநோயின் அளவு அதிகமாக இருந்த போதிலும் இவை நடைபெற்றுள்ளது.
ஏப்ரல்-மே மாதத்திற்கான மின் உற்பத்தி, எரிபொருள் நுகர்வு மற்றும் ரயில்வே சரக்கு போன்ற சில உயர் குறிகாட்டிகள் தொடர்புடைய தரவு, கொரோனா முதல் அலையை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு மீள்வது வேகமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.
தொடர்ச்சியாக ஒன்பது மாதங்களாக ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலான பிறகு ஜூன் மாதத்தில், கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 1 லட்சம் கோடிக்கு குறைவாக பதிவானது.
கோவிட் இரண்டாம் அலைக்கு பிறகு, அமலுக்கு வந்த தளர்வுகள் காரணமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது. இது பொருளாதாரம் சீராக மீள்வதை குறிக்கிறது. பொருளாதார வளர்ச்சி, ஏய்ப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள், குறிப்பாக போலி பில்லர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை ஜிஎஸ்டி வசூலுக்கு பங்களித்து வருகின்றன. வரவிருக்கும் மாதங்களிலும் வலுவான ஜிஎஸ்டி வருவாய் தொடர வாய்ப்புள்ளது, ”என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil