இந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்?

SBI News In Tamil: இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்...

SBI News: இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது இரண்டாவது காலாண்டில் (ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) மேலும் குறைந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளது.

“இரண்டாவது காலாண்டு Q2 மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2%, நிதி ஆண்டு 20, 5.0%: நீண்ட கடுமையான காலத்தில் பயணிக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கான முன்னறிவிப்புகளில் வளர்ச்சி விகிதத்தை 6.1% இல் இருந்து இப்போது 5% ஆக மாற்றியுள்ளது. அடுத்த நிதியாண்டில் (2020-21), மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2% வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கிறது.

கடந்த ஆறு மாதங்களில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மிக வேகமாக குறைந்துள்ளது. பெரும்பாலான அரசு சாரா மதிப்பீடுகள் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 7.5% ஆகக் கொண்டுள்ளன. முழு ஆண்டு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட ஜூலை மாதத்தைப் போலவே அரசாங்கத்தின் மதிப்பீடுகள் 8% முதல் 8.5% வரை இருந்தன. இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், முழு ஆண்டிற்கான வளர்ச்சி 5% ஆக கீழ்நோக்கி இந்திய பொருளாதாரம் குறுகிய காலத்தில் தொடர்ந்து பிரச்னையாகும் என்று தெரிவிக்கிறது.

எஸ்பிஐ வளர்ச்சி மதிப்பீட்டை ஏன் குறிப்பிட்டது?

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை முன்னறிவிப்பதில் எஸ்பிஐ பயன்படுத்தும் அதன் கலப்பு முன்னணி குறிகாட்டியில் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதை எஸ்பிஐ குறிப்பு விவரிக்கிறது. அதன்படி, மந்தநிலை காரணமாக, குறைந்த ஆட்டோமொபைல் விற்பனை, விமானப் போக்குவரத்து இயக்கங்களில் சரிவு, முக்கிய துறை வளர்ச்சிகள் தட்டையாக இருந்தல், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு குறைந்து வருகிறது என்று அது கூறுகிறது.

எஸ்பிஐ தனது 33 உயர் அதிர்வெண் முன்னணி குறிகாட்டிகளில் முடுக்கம் விகிதத்தை கூறுகிறது – அதாவது பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளுக்கு முன்னால் விளைவு அல்லது மாற்றங்களைக் காட்டும் குறிகாட்டிகள் – முதல் காலாண்டில் Q1 -இல் 65% இலிருந்து (மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ந்தபோது) இரண்டாவது காலாண்டில் Q2-இல் வெறும் 27% ஆக குறைந்துவிட்டது.

அதிகப்படியான மழை, வெள்ளம் மற்றும் தற்போதைய உலக பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்படும் பாதகமான தாக்கத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2019 ஆண்டில், இந்தமுறையும் இந்திய ரிசர்வ் வங்கியே மீண்டும் ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் என்று எஸ்பிஐ எதிர்பார்க்கிறது. ஆர்.பிஐ நிதி செலவைக் குறைப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் ரெப்போ விகிதங்களை மீண்டும் மீண்டும் குறைத்துள்ளது. எனவே, டிசம்பரில் நாணயக் கொள்கைக் குழு கூடும் போது ரிசர்வ் வங்கி விகிதங்களை மேலும் குறைக்கும் என்று எஸ்பிஐ எதிர்பார்க்கிறது.

ஆனால், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வீதக் குறைப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எஸ்பிஐயின் குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “இருப்பினும் இதுபோன்ற விகிதக் குறைப்பு எந்தவொரு உடனடி பொருள் மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்காது…”

வளர்ச்சி வளர்சிப் பின்னணியில், திடீர் கொள்கைகளுக்கு எதிராக எஸ்பிஐ அரசாங்கத்தை எச்சரிக்கிறது. “இத்தகைய வளர்ச்சி மந்தநிலைக்கு எதிராக, டெலிகாம், மின்சாரம் மற்றும் என்.பி.எஃப்.சி போன்ற துறைகளில் எதிர்மறையான திடீர் கொள்கைகளை இந்தியா (அதாவது அரசு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, இப்போது மிகவும் தாமதமாகிவிட்ட என்.பி.எஃப்.சி துறைக்கு நீடித்த தீர்வு காண்பது கட்டாயமாகும்”என்று அது கூறுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close