இந்திய சமையல் கூடங்களில் அதிக அளவு இடம் பெற்றிருக்கும் சமையல் பொருட்களில் ஒன்று தான் இந்த பெருங்காயம். வருடத்திற்கு ரூ. 600 கோடி மதிப்பில் இந்த பெருங்காயத்தை நாம் இறக்குமதி செய்கிறோம்.
இப்போது, சி.எஸ்.ஐ.ஆர்-இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் பயோசோர்ஸ், பாலம்பூர் (ஐ.எச்.பி.டி) (CSIR-Institute of Himalayan Bioresource, Palampur (IHBT)) விஞ்ஞானிகள் இந்திய எல்லைக்குள் இருக்கும் இமயமலை பகுதியில் பெருங்காயம் வளர்ப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கன்று கடந்த வாரம் லஹால் பள்ளத்தாக்கிலுள்ள இமாச்சல பிரதேசத்தின் குவாரிங் கிராமத்தில் நடப்பட்டது.
பெருங்காயத்தை எங்கே விளைவிக்கின்றார்கள்?
ஃபெருலா அசஃபோடிடா (Ferula asafoetida) என்பது ஆண்டு தாவராகும். umbelliferae குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் வேர் பகுதியில் இருந்து ஓலியோ கம் பிசின் அதன் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த தாவரம் அனைத்து கனிமங்களையும் அதன் சதைப்பற்றுள்ள வேர்களுக்கு மத்தியில் சேமித்து வைக்கிறது.
அசஃபோடிடா தாவரங்கள் ஆஃப்கான் மற்றும் ஈரானை பூர்வீகமாக கொண்டவை. உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவு இந்நாடுகள் ஏற்றுமதி செய்கிறது. மிகவும் வறண்ட மற்றும் குளிர்ச்சியான பாலைவன பகுதிகளில் மட்டுமே வளருகிறது. இந்தியாவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
இந்தியா எப்படி பெருங்காயம் சாகுபடியில் இறங்குகிறது?
இந்தியா பெருங்காயம் சாகுபடியில் ஈடுபடவில்லை. இந்திய அரசு 1200 டன் பெருங்காய மூலப்பொருட்களை ரூ. 600 கோடி செலவில் ஈரான், ஆஃப்கான், உஸ்பெகிஸ்தான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
1963 மற்றும் 1989 ஆண்டுகளுக்கு இடையே, இந்தியா ஒரு முறை பெருங்காய விதைகளை வாங்க முயற்சித்ததாக ஐ.சி.ஏ.ஆர் – National Bureau of Plant Genetic Resources (NBPGR) தெரிவித்துள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எழுத்துவடிவிலான முடிவுகள் ஏதும் கிடைக்கவில்லை.
2017ம் ஆண்டு ஐ.எச்.பி.டி, இந்திய இமயமலையில் பெருங்காயம் பயிரிட ஒரு சோதனை திட்டத்துடன் என்.பி.பி.ஜி.ஆரை அணுகியது. ஆராய்ச்சிக்காக ஈரானில் இருந்து பெறப்பட்ட பெருங்காயம் இன்னும் என்.பி.பி.ஜி.ஆர் வசத்தில் உள்ளது. பல்வேறு சோதனைகளுக்காக அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வயலில் நட்டால் பூச்சி மற்றும் பூஞ்சை தொற்று மற்றும் இதர தொற்றுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள இதனால் முடிகிறதா என்பது போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்த இவை இரண்டு மாதங்கள் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலிடம் இருந்து அனைத்து ஒழுங்குமுறை ஒப்பந்தங்கள் பெறப்பட்ட பிறகு பெருங்காயத்தின் 6 வகைகள் ( (EC966538 with Import Permit-318/2018 and EC968466-70 with Import Permit-409/2018) ஐ.எச்.பி.டியால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆர் எண்ட் டி ஆராய்ச்சி 2018ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பலம்பூர் ஆராய்ச்சி நிலையத்தில் இந்த விதைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்பு, வடிவமைக்கப்பட்ட சோதனை கூடங்களில் வளர்க்க முடியுமா என்று அறியப்பட்டது. ஆனால் பெருங்காய விதைகள் வெகுநாட்களாக உறக்க நிலையிலேயே இருக்கிறது. மேலும் விதைகளின் முளைக்கும் விகிதம் வெறும் 1% மட்டுமே.
இறக்குமதி செய்யப்பட்டு பெறப்பட்ட 6 வகைகளும் வெவ்வேறு வகையில் முளைக்கின்றன என்ரு அசோக் குமார் தெரிவித்தார். ஐ.எச்.பி.டியின் மூத்த ஆராய்ச்சியாளராகவும் , இந்த திட்டத்தின் தலைமை ஆய்வாளராகவும் இருக்கிறார்.
இந்த செயலற்ற தன்மையைச் சமாளிக்க, விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பாலைவன நிலைமைகளில் உயிர்வாழும் தாவரத்தின் தழுவல் நுட்பத்தின் ஒரு பகுதியாக, விதைககளில் சில சிறப்பு இரசாயன சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. 20 நாட்களுக்கு பிறகு அனைத்து விதைகளும் முளைக்க துவங்கியது. இந்த ஆண்டு ஜூன் மாதம், சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனம் இமாச்சல பிரதேச விவசாய அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. கூட்டாக, இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் முன்னெடுக்கப்படும்.
இந்தியாவில் எந்தெந்த சூழல் பெருங்காய வளர்ப்பிற்கு சாதகமாக உள்ளது?
ஐ.எச்.பி.டி. மையத்தில் வளர்க்கப்பட்ட முதல் தாவரத்தை, ஐ.எஸ்.பி. டி இயக்குநர் க்வாரிங் கிராமத்தில் அக்டோபர் 15ம் தேதி நட்டு வைத்தார். பெருங்காயம் வளர்வதற்கான புவியியல்-காலநிலை நிலைமைகள் இந்தியாவில் இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். லஹூவல் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் பைலட் முறையில் நாங்கள் இதனை நட்டு வைத்தோம் என்று சேகர் மண்டே அறிவித்துள்ளார்.
வேளாண் அமைச்சகம் பள்ளத்தாக்கில் நான்கு இடங்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் உள்ள ஏழு விவசாயிகளுக்கு பெருங்காய விதைகளை விநியோகித்துள்ளது. வறண்ட மற்றும் குளிர்ச்சியான இடங்களில் பெருங்காயம் வளர்கிறது. 35 முதல் 40 டிகிரி வரையிலான வெப்பத்தை தாங்கும் இந்த தாவரங்கள் குளிர் காலத்தில் மைனஸ் 4 டிகிரி குளிரையும் தாங்க வல்லது என்று கூறினார் குமார்.
மணற்பாங்கான இடத்தில், மிகக்குறைவான ஈரப்பதம் கொண்ட, ஆண்டு மழை 200 மி.மீக்கும் குறைவாக உள்ள இடத்தில் இந்த தாவரங்கள் செழித்து வளரும். மண்டி, கிண்ணௌர், குலு, மணாலி, பாலம்பூர் போன்ற உயர்ந்த மலைப் பிரதேசங்கலில் சில இடங்களில் முன்னோட்டம் பார்க்கப்பட்டது. லடாக் மற்றும் உத்திரகாண்ட் போன்ற பகுதிகளிலும் தங்களின் சோதனைகளை விரிவுபடுத்தினார்கள். இதனை விவசாயம் செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளாது. விதை உற்பத்தி மையங்களும் உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
பெருங்காயத்தின் பயன்கள் என்ன?
பெருங்காயத்திற்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. வயிற்றுப் பிரச்சனை, செரிமான கோளாறுகளுக்கு தீர்வாக அமைகிறது. அதே போன்று ஸ்பாஸ்மோடிக், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது. பெரும்பாலும் மாதவிலக்கு மற்றும் பிரசவ காலங்களில் ஏற்படும் வலி மற்றும் அதிக உதிரப் போக்கினை சரிய செய்ய பயன்படுகிறது. வாயுப் பிரச்சனைகளை தீர்க்கும் பண்பு இருப்பதால் தாய்மார்களுக்கு அதிகம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பெருங்காய சாகுபடி எவ்வளவு நம்பிக்கைக்கு உரியது?
ஆரம்ப காலத்திலேயே இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. இதன் வேர்களில் இருந்து ஒலேகோ கம் ரெசினை உருவாக்க குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது தேவைப்படும். முதல் தாவரம் அக்டோபர் மாதம் விதைக்கப்பட்டுள்ளாது. அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்த தாவரத்தின் வளார்ச்சி, மண்ணின் தன்மை, காலநிலை மற்றும் இதர நிலைகளை ஆராய வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு ஹெக்டெர் நிலப்பரப்பில் பெருங்காய செடிகள் வைக்க வேண்டும் . அடுத்த 5 ஆண்டுகளில் 300 ஹெக்டர் நிலப்பரப்பில் பெருங்காயம் விவசாயம் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil