ஜவுளி, சோலார் மாட்யுல்கள், IT வன்பொருள், ஆட்டோமொபைல்கள், மேம்பட்ட இரசாயன செல்கள் (ACC) மற்றும் சிறப்பு எஃகு உள்ளிட்ட 14 உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்களில், 6 தாமதமான பாதையில் செல்கின்றன. உணவு பதப்படுத்துதல் மற்றும் மொபைல் போன் உற்பத்தி உள்பட மற்றவை, திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கான பாதையில் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Why some PLI schemes are in the slow lane; what govt is doing about it
14 துறைகளை உள்ளடக்கிய உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் (PLI) முன்னேற்றத்திற்கும் ,உறுதியான விளைவுகளை மேம்படுத்தவும் சிலவற்றைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது. மேலும், சிலவற்றில் செலவினத்தை அதிகரிக்க அதன் வடிவங்களை மாற்றும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன.
PLI திட்டங்கள் இந்தியாவிற்கு இரண்டு முனைகளில் முக்கியமானவை என்று அரசாங்கம் கருதுகிறது: ஒன்று, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பது போன்று, உள்நாட்டு உற்பத்தித் தளத்தையும் அதிகரிக்க பொது நிதியைப் பயன்படுத்துவது. மற்றொன்று, லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்குவது.
இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடமிருந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல்களை சேகரித்தது. விநியோகச் சங்கிலி நிறுவப்பட்டதும், இத்திட்டங்களின் பலன்கள் சிறிய சப்ளையர்களுக்கு சென்றதும் முழுமையாக பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், மொபைல் தயாரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் இதன் பலன்கள் தற்போது தெரியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஒரு திட்டம் வெகுஜனத்தை சென்றடைந்த பின்னரே, வேலைவாய்ப்பு முடிவுகளை அளவீடு செய்ய முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிப்ரவரி 2024 முதல் கிரிசில் தரமதிப்பீட்டு நிறுவனத்தின் குறிப்பில், இந்தத் திட்டம் அதன் காலப்பகுதியில் ரூ. 3-3.5 லட்சம் கோடி தொழில்துறை மூலதனச் செலவை அதிகரிக்கலாம் என்றும், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் முக்கிய தொழில்துறைகளில் மொத்த மூலதனத்தின் 8-10 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பல்வேறு துறைகளுக்கான திட்டத்தில் சில மோசமான சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான தகுதி விதிமுறைகள், சீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான அணுகல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் இறக்குமதி கட்டணங்கள் உள்ளிட்டவை இதற்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.
தொடக்கநிலை சவால்
பல துறைகளுக்கான PLI திட்டங்கள் அனைத்து வகையிலும் ஒரு பெரிய பணியாகும். ஏனெனில், ஒரு உள்நாட்டு உற்பத்தித் தொழில் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். மேலும், இந்தியாவை பொறுத்தவரை இது புதிய முயற்சியாகும். சில துறைகளில் உள்ள நிறுவனங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்க நேரம் எடுக்கும் என்பதால், இது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு தொடக்க நிலையில் சவாலாக இருக்கலாம். சோலார் மாட்யூல்கள் மற்றும் ஏசிசி போன்ற துறைகளில் உள்ள PLI திட்டம் ஒன்றரை முதல் மூன்று ஆண்டுகள் வரை செயல்பட அனுமதிக்கும்.
மொபைல் போன் உற்பத்தியை பொறுத்தவரை, PLI திட்டத்திற்கு முன்பு, உள்நாட்டு நுகர்வுக்கான நிகர இறக்குமதியாளராக இந்தியா இருந்தது. இந்தத் திட்டத்திற்குப் பிறகு, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் நாட்டில் அசெம்பிளியை அதிகரித்ததால், நாட்டில் விற்கப்படும் அனைத்து ஃபோன்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. உண்மையில், இந்தியா 2023-24ல் சுமார் 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது.
பல PLI திட்டங்களில், ஊக்கத்தொகையின் ஆரம்ப பயனாளிகள் பெரிய நிறுவனங்களாக இருக்கக்கூடும். மொபைல் போன் தயாரிப்பில், இதுவரை ஆப்பிள் நிறுவனமே மிகப்பெரிய பயனாளியாக இருந்து வருகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான ஆப்பிள் சப்ளையர்களின் பட்டியலின்படி, அதன் சப்ளையர்களில் குறைந்தது 14 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இது, ஆப்பிள் இந்தியாவில் ஐபோன்கள் அசெம்பிளை தொடங்குவதற்கு முன்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்தது.
மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான ஆதரவு - ஒரு துறையில் முக்கியமான வெகுஜனத்தைப் பெறுவது ஆகும். இதனால் ஊக்கத்தொகை திரும்பப் பெறப்படும் போது, ஏற்றுமதி சமநிலை அடிப்படையில் அந்தத் துறை போட்டித்தன்மையுடன் இருக்கும். எவ்வாறாயினும், இந்த திட்டம் மானியத்திற்கானது என்றும், போட்டித்தன்மையை ஏற்படுத்தாது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
PLI திட்டத்தின் மதிப்பாய்வு
14 துறைகளில், குறிப்பாக டெக்ஸ்டைல்ஸ், மேம்பட்ட வேதியியல் பேட்டரி செல், சோலார் மாட்யூல்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்றவற்றில் PLI திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய, பங்குதாரர்களுடன் அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.