Advertisment

இலங்கையின் முக்கியமான திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்டது ஏன்?

சர்வதேச அளவில் தாக்குதலுக்கு ஆளான இந்தியா இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
இலங்கையின் முக்கியமான திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்டது ஏன்?

Arun Janardhanan

Advertisment

Why Sri Lanka pushed India out of Colombo terminal project, what’s being offered as compensation :  நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு இலங்கை அரசு 2019ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தை தள்ளுபடி செய்தது. கொழும்பு துறைமுகத்தில் ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினலை கட்ட இந்தியா மற்றும் ஜப்பானுடன் 2019ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியது இலங்கை.

கிழக்கு பகுதியில் கண்டெய்னர் டெர்மினலை இலங்கை துறைமுகம் ஆணையம் சொந்தமாக உருவாக்கும் என்று மகிந்தராஜபக்‌ஷ அறிக்கை வெளியிட்ட பிறகு, மேற்கு பகுதியில் அமைய இருக்கும் கண்டெய்னர் டெர்மினலை இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து உருவாக்க உள்ளதாக கேபினட் ஒப்புதல் அளித்தது. இது இந்தியாவிற்கு இழப்பீடு செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இலங்கை அரசு மேற்கொண்டு பிரச்சனைகளுக்கான சூழலை மட்டுப்படுத்தி இம்முயற்சியை மேற்கொண்டாலும் இதனை ஏற்றுக் கொள்ளுமா இந்தியா என்பதில் இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

இந்தியாவின் பதில் எவ்வாறு இருந்தது?

மகிந்தவின் அறிக்கையில் இ.சி.டி. இலங்கை அரசால் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது இந்தியாவிற்கு ஒரு சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் முதல் பதில், இலங்கை ஒருதலைபட்சமாக முத்தரப்பு ஒப்பந்தத்தில் முடிவெடுத்திருக்க கூடாது என்பது தான்.

இந்தியாவிற்கு எவ்வாறு இலங்கை சலுகை அளிக்க உள்ளது?

2019ம் ஆண்டு ஒப்பந்தத்தை தள்ளுபடி செய்த பிறகு, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதியில் இந்தியா மற்றும் ஜப்பானின் துணையோடு ஒரு கண்டெய்னர் டெர்மினலை ஏற்படுத்த கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை அரசின் இரண்டு முக்கிய அதிகாரிகள், இலங்கையின் இந்த சலுகையை இந்தியா தெளிவற்றது என்றும் முற்றிலுமாக நிராகரிக்கும் நிலையில் உள்ளது என்றும் பதில் அளித்ததாக கூறியுள்ளனர். இந்திய அதிகாரிகள், செவ்வாய்கிழமை மதியம் வரை இது தொடர்பாக முறையான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறினர்.

வணிக ரீதியாக மேற்கு முனையம் இந்தியாவிற்கு சிறந்த சலுகையாகும். டெவலப்பர்களுக்கு 85% பங்குகளை வழங்குறது. ஆனால் இ.சி.டியில் அது வெறும் 49% மட்டுமே. அதானி உள்ளிட்ட முக்கிய முதலீட்டாளர்களுக்கு இது சிறந்த சலுகை தான் என்ற போதிலும், இறுதி முடிவு இந்திய அரசிடம் இருந்து வர வேண்டும். புவிசார் அரசியல் ரீதியாகவும் இதனை அணுக வேண்டும். ஏன் என்றால் இலங்கையில் ஒரு துறைமுக முனையம் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சத்தையும் அவசியத்தையும் கருத்தில் கொண்டால் மேற்கு முனையம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. இந்த முன்மொழிவிற்கு இந்தியாவின் பதில் நிச்சயமற்றதாக இருப்பின், நிச்சயமாக கூறுகின்றேன் இலங்கை தரப்பில் இருந்து இந்தியாவிற்கு முறையாக தகவல் தராமல் இருப்பது தான் காரணமாக இருக்கும் என்று. இரண்டு முனையங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. இ.சி.டி. ஏற்கனவே ஓரளவு நிறைவுபெற்றதாக இருக்கிறது. ஆனால் மேற்கு முனையம் ஆரம்பத்தில் இருந்து துவங்கப்பட வேண்டும் என்று கொழும்புவில் இருந்து அதிகாரி ஒருவர் கூறினார்.

இலங்கை ஏன் இ.சி.டியில் இந்த முடிவை எடுத்தது?

2019 ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீது அழுத்தம் கடுமையான அழுத்தம் உள்ளது என்று மகிந்த ராஜபக்‌ஷே தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

பேச்சுவார்த்தையின் போது கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் கொடுத்த கடும் அழுத்தத்திற்கு மத்தியிலும் கூட கோத்தபய இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் உறுதியாக இருந்தார். மக்கள் மத்தியில் அவர் புகழ் மங்கத்துவங்குவது போன்று அழுத்தம் அதிகரித்து வந்தது என்று மூத்த கேபினட் அமைச்சர் ஒருவர் கூறினார். ”அவர்கள், அதிபர் தேர்தலின் போது வெளியிடப்பட்ட கோத்தபயவின் தேர்தல் அறிக்கை கூட 2019 ஒப்பந்தத்திற்கு மாறாகவே உள்ளது என்பதை மேற்கோள் காட்டினர். இந்த திட்டத்தில் இலங்கையின் பங்கு 51% இருக்கிறது என்று அவர் தொடர்ந்து கூறிய போதும், அவர்களை சமாதானப்படுத்த போதுமானதாக இல்லை.

மைத்றிபாலா சிறிசேன - ரனில் விக்ரமசிங்கே நிர்வாகத்தின் போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்தது 49% பங்குகளை இந்த திட்டத்தில் கொண்டிருந்தது. தனியார்மயமாக்கலுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவை சங்கங்கள் திரட்டுவதற்கு முன்பு நிர்வாகம் சரண் அடைந்தது.

இந்தியாவிற்கு எதிராக துறைமுக சங்க ஊழியர்களை தூண்டுவதற்கு பின்னணியில் சீனா இருக்கிறது என்று பல்வேறு புகார்கள் உள்ளன. இருப்பினும் தொழிற்சங்கங்கள், சிவில் சமூகக் குழுக்கள் உட்பட 223 இலங்கை தொழிற்சங்கங்கள் துறைமுக வர்த்தக சங்கங்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர்.

இந்தியா இலங்கை உறவில் இதனால் பாதிப்பு ஏற்படுமா?

இந்தியாவைப் பொறுத்தவரை, ECT திட்டம் முக்கியமானது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூட ஜனவரி மாதம் கொழும்புக்கு சென்றிருந்தார்.

மேற்கு முனையத்தின் சலுகை ஏற்றுக்கொள்ளப்படுமானால் இந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என்று இலங்கை அரசை சார்ந்தவர்களும், முன்னேற்றம் நடக்கும் என்று நம்புவர்கள் கூறுகிறார்கள். ஆனாலும், சில விமர்சனங்கள், இது தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச தாக்கங்களை இலங்கை அரசு எதிர்கொள்ளும் என்று கூறுகின்றனர்.

எஸ்.எல்.பி.பி. கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர், கோத்த, தன்னுடைய வார்த்தையில் இருந்து மாறாத மனிதர். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் அவரது நாற்காலியை அசைக்கும் அளவிற்கு இருந்ததுதான் இ.சி.டி. ஒப்பந்தத்தை தள்ளுபடி செய்ய உந்தியது என்று கூறினார்.

தேர்தலில் அவருக்கு வாக்களித்த மஹிந்த - எஸ்.எல்.பி.பி. தொண்டர்கள் தவிர, தேசியவாத, இனவாத கருத்துகளைக் கொண்ட மத்தியதர இலங்கை குடிமக்களும் அவருக்கு ஆதரவை அளித்தனர். ஆனால் புத்த பிக்குகள் உட்பட தீவிர ஆக்கிரமிப்பு, தேசிய, இனவாத கொள்கைகள் கொண்டவர்களும் கூட இ.சி.டி. ஒப்பந்தத்திற்கு ஒன்று கூடினார்கள். நடுத்தர வர்க்க மக்களின் பொதுவான உணர்வுகளும் இந்திய பிணைப்புக்கு எதிரானவை என்பது உண்மை.

இந்த ஒப்பந்த ரத்தின் மூலம் உழைக்கும் மக்களை கொண்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிதறிய நடுத்தர வர்க்க மக்கள் உட்பட அனைவரும் மேலிடத்தைப் பெற்றுள்ளனர், இது அரசியல் ரீதியாக பிரதமர் மஹிந்தா மற்றும் அவரது தம்பி அதிபர் கோட்டபயா ஆகிய இருவருக்கும் சாதகமாக இல்லை.

இதற்கிடையில், சர்வதேச அளவில் தாக்குதலுக்கு ஆளான இந்தியா இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். புவி-அரசியல் மற்றும் பொருளாதார முன்னணியில் தனிமைப்படுத்தும். பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரத்தை புதுப்பிக்க அந்நாடு நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில் இந்த முயற்சிகள் அந்நாட்டிற்கு பாதகமாக அமையும்.

இதே போன்ற பிரச்சனைகள் மேற்கு முனைய சலுகையிலும் ஏற்படுமா?

இலங்கை அரசு வட்டாரங்கள் அதற்கான வாய்ப்புகளை முழுமையாக நிராகரித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை அன்று 23 கொழும்பு துறைமுக சங்கத்தினருக்கு 220 சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தை அறிவித்தன. அது அரசை எதிர்த்து நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தை உருவாக்குவதாக அமைந்தது.  "இந்த கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, ECT இல் 49% க்கு பதிலாக WTC இல் தனியார் பங்கு 85% ஆக இருக்கும் பட்சத்தில் இலங்கையின் மிகப்பெரிய பொது பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான ஜான் கீல்ஸ் ஹோல்டிங் பி.எல்.சி (ஜே.கே.எச்) மற்றும் இந்திய தரப்பில் அதானி குழு ஆகியவை டபிள்யூ.டி.சி சலுகையை ஏற்றுக்கொள்ளக்கூடும் என்ற கருத்தை இலங்கை அரசாங்க அதிகாரிகள் பெற்றனர். ”என்று இலங்கை துறைமுக ஆணையத்தின் (SLPA) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ECT ஒப்பந்தத்தை "ஒருதலைப்பட்சமாக" ரத்து செய்வதற்கு முன்னதாக, இலங்கை அரசாங்கமும் இது தொடர்பாக தொழிற்சங்கங்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற முடிந்தது, இதில் 23 தொழிற்சங்கங்களில் 22 கையெழுத்திட்டு, தனியார் முதலீட்டில் மேற்கு முனையம் துவங்கி, அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களில் அரசாங்கத்தை ஆதரிக்க ஒப்புக் கொண்ட ஒரு கடிதத்தை வழங்கின. “இது வணிக ரீதியாக அதானிக்கும் ஒரு சிறந்த ஒப்பந்தமாகும். கிழக்கு மற்றும் மேற்கு முனைய முடிவுகளை ஒரு அமைச்சரவை தாளில் குறிப்பிட தொழிற்சங்கங்களும் ஒப்புக் கொண்டன, ”என்று SLPA அதிகாரி கூறினார்.

தொழிற்சங்கங்களின் ஒப்புதல் கடிதத்தின் நான்காவதாக மேற்கு முனையம் தொடர்பாக எதிர்காலத்தில் அரசாங்கம் எடுக்கும் ஒரு நல்ல முதலீட்டு முடிவை நாங்கள் ஆதரிப்போம் என்று குறிப்பிட்டிருந்தது.

கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வலையமைப்பான வியத்மகா (தொழில் வல்லுநர்கள்), தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இறுதிச் சுற்று பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தது, இது சமீபத்திய WTC திட்டத்திற்கு வழிவகுத்தது. எஸ்.எல்.பி.ஏ-வின் முன்னாள் தலைவரும், தற்போதைய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான வியத்மகாவின் நலகா கோதாவேவா, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கொழும்பிலிருந்து தொலைபேசியில் பேசினார், இந்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை இந்தியாவை வெளியேற்றவில்லை என்று கூறினார். "அதற்கு பதிலாக, நாங்கள் தொழில் வல்லுநர்களாக இருப்பதால், இந்திய நலன்களையும் மதிக்கும் என்பதை உறுதிசெய்யும் உரையாடல்கள் மூலம் பேசுவதற்கு நாங்கள் முன்வந்தோம். இது இப்போது ஒரு நல்ல தீர்வாகும் என்று மேற்கு முனைய முன்மொழிவை குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment