Advertisment

இலங்கை புதிய அதிபர் பதவியேற்பு: நாடாளுமன்றத்தை கலைப்பு, தேர்தல் அறிவிப்பு ஏன்?

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இதற்கு 2020-ல் தேர்தல் நடந்த நிலையில், இப்போது கலைக்கப்பட்டது ஏன்?

author-image
WebDesk
New Update
SL par

இலங்கை புதிய அதிபராக அனுரகுமார திஸாநாயக்க, பதவியேற்ற மறுநாள் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்து நவம்பர் 14ஆம் தேதி உடனடித் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

Advertisment

திஸாநாயக்க, ஆட்சிக்கு வந்ததும், தனது கொள்கைகளைத் தொடர புதிய ஆணையை நாடுவேன் என்று பிரச்சாரத்தின் போது சுட்டிக்காட்டியிருந்தார். தொடர்ந்து  "மக்கள் விரும்பம் இல்லாத,  பொருத்தமில்லாத பாராளுமன்றம் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று கூறி நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். 

அரசியல் சூழ்நிலை 

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த  நாடாளுமன்றத்திற்கு ஆகஸ்ட் 2020 இல் தேர்தல் நடந்தது. அதாவது அடுத்த தேர்தல் ஆகஸ்ட் 2025-ல் நடக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றம் இப்போது கலைக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், திஸாநாயக்க தலைமையிலான சோசலிச தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் அவரது கூட்டணி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) கட்சிக்கு இந்த பாராளுமன்றத்தில் வெறும் 3 இடங்கள் மட்டும் உள்ளன. ஏனென்றால், 2022 வரை NPP இலங்கை அரசியலின் விளிம்புகளில்தான் இருந்தது.

இந்த சூழ்நிலையின் பின்னணியில், அவர் ஆட்சிக்கு வந்த நிலையில், திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்துவதாக அறிவித்தார், இதன் மூலம் என்.பி. பி பெரும் வெற்றியைப் பெறக்கூடும்.

இலங்கை அரசியல் அமைப்பு

இலங்கை அரசியல் அமைப்பை பொறுத்தவரை, அதிபரும் பிரதமரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் உண்மையில், 1978ல் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்பட்டதிலிருந்து, இரண்டு அலுவலகங்களும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. 

ஏனென்றால், அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும், பிரதமர் என்பவர் இலங்கையில் அதிபரின் பிரதியாளராக செயல்படுகிறார்.

ஜனாதிபதி என்பவர் நாட்டின் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் தலைவர், அத்துடன் இலங்கை ஆயுதப்படைகளின் தளபதி மற்றும் மத்திய அமைச்சரவையின் தலைவராக இருப்பார். பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஜனாதிபதி நேரடியாக ஆறு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பிரதமர் பாராளுமன்றம் மற்றும் மத்திய அமைச்சரவையின் மிக மூத்த உறுப்பினராகவும், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகராகவும் இருப்பார். ஜனாதிபதி (அதிபர்) வரிசையில் பிரதமரும் முதலாவதாக இருப்பார். கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த போது விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார்.

ஆங்கிலத்தில் படிக்க:     Why Sri Lanka’s newly elected President dissolved Parliament

இப்போது என்ன நடக்கும்? 

திசாநாயக்க திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு சில  மணி நேரத்திற்கு முன் தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 
செவ்வாயன்று, திசாநாயக்க, மூன்று என்.பி.பி  நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹரிணி அமரசூரியவை பிரதமராக நியமித்தார். 

 நவம்பரில் தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால அரசாங்கமாக செயல்படும் மத்திய அமைச்சரவைக்கு அமரசூரிய தலைமை தாங்குவார். அதன் பிறகு புதிய பிரதமர் நியமிக்கப்படுவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment