Arun Janardhanan
Why Tamil actor Suriya’s remarks on NEET are being scrutinised for contempt of court : நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் மூன்று பேர் அடுத்தடுத்து தங்களின் வாழ்வை முடித்துக் கொண்டனர். இந்த மாணவர்களின் மரணங்களை தொடர்ந்து, இந்த சூழலில் நீட் தேர்வுகள் குறித்து கண்டனம் தெரிவுக்கும் வகையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த சில வாக்கியங்கள் தற்போது சென்னை உயர் நீதிமனறம், நீதிமன்ற அவமதிப்பாக அந்த அறிக்கையை கையாள வேண்டும் என்ற அளவிற்கு சென்றுவிட்டது. சில ஓய்வு பெற்ற நீதிபதிகள் சூர்யாவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
நீட் தேர்வு குறித்து தன்னுடைய அறிக்கையில் சூர்யா என்ன குறிப்பிட்டிருந்தார்?
உச்ச நீதிமன்றம் கொரோனா நோய் தொற்று காலத்தில் மாணவர்களை நீட் தேர்வு எழுத வற்புறுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டினார். நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு மூன்று மாணவர்கள் மன உளைச்சல் மற்றும் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது என்று அந்த அறிக்கையில் பதிவு செய்திருந்தார்.
My heart goes out to the three families..! Can't imagine their pain..!! pic.twitter.com/weLEuMwdWL
— Suriya Sivakumar (@Suriya_offl) September 13, 2020
கொரோனா வைரஸால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் நிலையில் மாணவர்கள் தங்களின் தகுதிகளை நிரூபிக்க தேர்வெழுத வலியுறுத்தப்படுவது பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அறிக்கையின் முதல் பாதியில் கொரோனா காலத்தில் எப்படி இது போன்ற தேர்வுகளை நடத்தலாம் என்று கேள்வி எழுப்பிய அவர், “அனைவருக்கும் சம உரிமையை நிலை நிறுத்த வேண்டிய அரசு சட்டம் கொண்டு வந்து சமமற்ற சூழலை கல்வித்துறையில் புகுத்திவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் நாட்டில் இருக்கும் கல்வி கொள்கைகள் குறித்து குற்றம் சாட்டியுள்ள அவர், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த கள நிலவரம் அறியாதவர்கள் தான் கல்வி கொள்கைகளை உருவாக்கியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
To read this article in English
சென்னை உயர் நீதிமன்றத்தை அவமதித்ததாக கருதியதன் காரணம் என்ன?
சூர்யாவின் அறிக்கையில் மேலும் “கொரோனா வைரஸ் பயத்தின் காரணமாக நீதிமன்றங்கள் நீதியை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாக வழங்குகின்றன. ஆனால் அதே நீதிமன்றங்கள் மாணவர்களை பயமின்றி தைரியமாக கொரோனா தேர்வினை எழுத சொல்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய எஸ்.எம்.சுப்பிரமணியம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சஹி, சூர்யாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ”நீதிபதிகள் அவர்களின் வாழ்க்கை குறித்து அச்சம் அடைந்துள்ளனர். அதனால் அவர்கள் வீடியோ கான்ஃபிரஸிங் மூலமாக நீதி வழங்குகின்றனர். எனவே அவர்களுக்கு, மாணவர்களை தைரியமாக நீட் தேர்வு எழுத கூறும் உரிமை இல்லை” என்று கூற வருகிறா என்று அவர் தன்னுடைய கடித்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அறிக்கை நம் நீதிபதிகளின் நேர்மை, பக்தி, நம் நாட்டின் நீதி அமைப்பினை குறை மதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. மேலும். நம் நாட்டு மக்கள் நம் நீதிதுறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்துள்ளது” என்று தலைமை நீதிபதி சஹிக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் சூர்யா நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கமும் சூர்யாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அடுத்து என்ன நடந்தது?
திங்கள் கிழமை மாலை 6 முன்னாள் நீதிபதிகள் சூர்யாவிற்கு ஆதரவாக திரண்டனர். அவர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஹியை சூர்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். நான்கு மாணவர்கள், இது போன்ற பதட்டமான சூழலில் நீட் தேர்வினை எழுத இயலாமல் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு கலைஞரின் அதீத எதிர்வினையை நீதிமன்றம் இது போன்ற சூழலில் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். நீதிபதி சந்துரு, கே.என். பாஷா, டி. சுதந்திரம், டி. ஹரிபரந்தாமன், கே. கண்ணன், மற்றும் ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். இந்த சமூகத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களின் படிப்பிற்கும் வேலை வாய்ப்பிற்கும் உதவி வரும் அவரின் சேவையை கருத்தில் கொண்டு இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றாமல் விட்டுவிடுதல் நலம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.