Advertisment

வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி மறுத்தது ஏன்? தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

பணவீக்கம் அதிகரிப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவலை கொண்டுள்ளது. இது ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த முன்னிருக்கும் முதன்மை பிரச்சினையாகும். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஊடகங்கள் வாயிலாக இதை மீண்டும் வலியுறுத்தினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Why the RBI refused to cut repo interest rates gdp forecast - வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி மறுத்தது ஏன்? நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி

Why the RBI refused to cut repo interest rates gdp forecast - வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி மறுத்தது ஏன்? நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

Advertisment

அவ்வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. கூட்டத்தின் முடிவில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே இருந்த 5.15 சதவீத வட்டி விகிதம் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கிக்கு மற்ற வங்கிகள் அளிக்கும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த முறை நடந்த ஆய்வு கூட்டத்தில் ரெப்போ விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் ரெப்போ விகிதம் தொடர்ந்து 5 முறை (1.35 சதவீதம்) அளவில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு மற்றும் வாகன கடன்களின் வட்டியில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் முன் சவால் என்ன?

பணவியல் கொள்கையைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் மிக முக்கியமான பொறுப்பு என்பது பண மதிப்பின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதாகும். சில்லறை பணவீக்கத்தை பராமரிப்பது - இது நுகர்வோர் விலைக் குறியீட்டை (சிபிஐ) அடிப்படையாகக் கொண்டது - 4% அளவில் (2 சதவீத புள்ளியின் மாறுபாட்டுடன்).

ஆனால், ரிசர்வ் வங்கியின் மற்றொரு முக்கிய கவலை பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியாகும்.

பெரும்பாலும், சில்லறை பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஒரே நேரத்தில் உயர்ந்து வீழ்ச்சியடைகின்றன - ஏனெனில் அதிக வளர்ச்சி என்பது பொருட்களுக்கான அதிக தேவையையும், விலைகள் அதிகரிப்பதையும் குறிக்கிறது - ரிசர்வ் வங்கியின் பணி இங்கு எளிது.

இருப்பினும், இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய கட்டத்தில், பணவீக்கம் அதிகரித்தபோதும் பொருளாதார வளர்ச்சி கடுமையாகக் குறைந்துள்ளது.

சில்லறை பணவீக்கம் உயர்ந்து, ரிசர்வ் வங்கியின் இலக்கு அளவை விட 4% ஆக மீறியது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தொடர்ந்து ஆறாவது காலாண்டில் சரிந்து Q2 (ஜூலை முதல் செப்டம்பர் வரை) வெறும் 4.5% ஆக இருந்தது.

ஆகவே, பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறாமல் இருப்பதை உறுதிசெய்து, வளர்ச்சியை அதிகரிப்பதற்கான கவலைகளை சமநிலைப்படுத்துவதே ரிசர்வ் வங்கியின் முன் இருக்கும் சவாலாகும்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கான ரிசர்வ் வங்கியின் கணிப்பு என்ன?

நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி மற்றொரு முழு சதவீத புள்ளியால் 5% ஆக குறைத்துள்ளது. கடந்த இரண்டு கொள்கை மறுஆய்வுக்கு இடையில் - அதாவது 4 மாதங்கள் - ரிசர்வ் வங்கி தற்போதைய நிதிக்கான வளர்ச்சி கணிப்பை கிட்டத்தட்ட 7% முதல் 5% வரை குறைத்துள்ளது என்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியின் வேகத்தை அளவிட முடியும்.

மேலும், வரவிருக்கும் 12 மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 6% க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - அதாவது செப்டம்பர் 2020 வரை.

பணவீக்கத்தில், எண்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வெறும் 3.6% சில்லறை பணவீக்க கணிப்பிலிருந்து, ரிசர்வ் வங்கி இப்போது கணிப்பை 5.1% ஆக உயர்த்தியுள்ளது. இருப்பினும், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை, பணவீக்கம் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி தடுமாறும் போது ரிசர்வ் வங்கி ஏன் விகிதங்களைக் குறைக்கவில்லை?

ரிசர்வ் வங்கியின் தர்க்கத்திற்கு பல அம்சங்கள் உள்ளன.

பணவீக்கம் அதிகரிப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவலை கொண்டுள்ளது. இது ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த முன்னிருக்கும் முதன்மை பிரச்சினையாகும். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஊடகங்கள் வாயிலாக இதை மீண்டும் வலியுறுத்தினார்.

இரண்டாவதாக, ரிசர்வ் வங்கி ஏற்கனவே ரெப்போ விகிதங்களை 135 பிபிஎஸ் குறைத்துள்ளது. பணப் பரிமாற்றம் ஆழமடையும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், சந்தையில் ஏற்கனவே உபரி பணப்புழக்கம் உள்ளது என்று கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒருவர் கடன் வாங்க விரும்பினால் சந்தையில் பணம் இருக்கிறது, ஆனால் கிரெடிட் ஆஃப்-டேக் பலவீனமாக உள்ளது, மேலும் இது மற்றொரு விகிதக் குறைப்பால் மேம்பட வாய்ப்பில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்றாவதாக, வளர்ச்சியை அதிகரிப்பதற்கான நிதி முயற்சிகளுக்காக எதிர்வரும் மத்திய பட்ஜெட்டை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியது.

ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட்டால், ஏன் விகிதங்களை உயர்த்தக்கூடாது?

சாதாரண சூழ்நிலைகளில், இதுபோன்ற சில்லறை பணவீக்கத்தை எதிர்கொள்ளும்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை உயர்த்தியிருக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் மிகவும் சிக்கலானவை.

ஒன்று, பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணம் உணவு விலைகள் அதிகரிப்பதே ஆகும். அவை ஒரு நிலையற்ற காரணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பாராத இயற்கை சீற்ற காரணிகளில் இருந்து விவசாயம் மீண்டு வருவதால், உணவு விலைகள் மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது, பொருளாதார வளர்ச்சி மந்தநிலை அனைத்து கொள்கை வகுப்பாளர்களுக்கும் வெளிப்படையான கவலையாகும். இந்த நேரத்தில் ரெப்போ வீத உயர்வு பொருளாதார வளர்ச்சிக்கான விஷயங்களை கணிசமாக மோசமாக்கும்.

என்ன விளைவு?

இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய கவலை வளர்ச்சி மந்தநிலை மற்றும் குறிப்பாக நுகர்வோர் தேவை வீழ்ச்சி. அது மேம்படும் வரை, பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது. பணவீக்கம் ஒரு கவலை தான், ஆனால் பணவீக்கத்திற்கான காரணங்கள் நிலையற்றவை. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதற்கும், சிறிது காலம் குறைவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கும் இது உதவுகிறது. இல்லையெனில் அதே உணவு விலை பணவீக்கம் அதிகமாக வெளிப்படும்.

தற்போதைய சுழற்சியில் ரிசர்வ் வங்கி ஏற்கனவே முடிந்தவரை குறைத்துவிட்டது, இப்போது இந்த Cuts நடைமுறைக்கு வரும் வரை காத்திருக்கிறது. பொதுவாக, வீதக் குறைப்பு தாக்கத்தைக் காட்ட குறைந்தபட்சம் இரண்டு காலாண்டுகள் ஆகும்.

பந்து இப்போது அரசாங்கம் பக்கம் உள்ளது. இது வரி விகிதங்களை - குறிப்பாக ஜிஎஸ்டி விகிதங்களை குறைத்து நுகர்வோர் தேவையை அதிகரிக்க முடியுமா?

Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment