மே மாதத்தின் முதல் இரண்டு நாட்கள் வழக்கத்திற்கு மாறான ஈரப்பதம் நிலவியது. வடகிழக்கு மாநிலங்களான ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் தவிர, நாடு முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்தது. மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் எதிர்பார்த்ததை விட 10 முதல் 15 மடங்கு மழை அதிகமாக பெய்துள்ளது.
வழக்கத்திற்கு மாறான இந்த மழைப் பொழிவு வியாழன் கிழமைக்குள் நிறைவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. ஆனால், இப்படி வழக்கத்திற்கு மாறான மழைப் பொழிவு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் அதிகரித்து வருவது நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வருவதை நினைவூட்டுகிறது.
இந்த ஆண்டு வெப்பம் மற்றும் வறண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை மையம் பருவமழை குறித்து முன்னறிவித்திருந்தாலும், இந்தியாவில் பருவமழையை குறிக்கும் எல். நினோவின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வேகமாக நடந்து வருகிறது.
உலகளவில், 1800-ம் ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வெப்பமான மார்ச் மாதமாக அறிவித்துள்ளது.
கார்பன் ப்ரீஃப், காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ஒரு பகுப்பாய்வு, எல்.நினோவின் வேகமான வளர்ச்சியை மேற்கோள் காட்டி, 2023-ம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டுகளின் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறுயுள்ளது.
இந்தியா வெப்பமயமாகிறதா?
உலக சராசரியை விட இந்தியா சற்று குறைவாகவே இருந்தாலும், உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு இந்தியாவிலும் காணப்படுகிறது. எடுத்துக் காட்டாக, 2022 ஆம் ஆண்டு, தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட 1.15 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருந்தது (1850-1900 காலகட்டத்தின் சராசரி வெப்பநிலை) மற்றும் பதிவான ஐந்தாவது அல்லது ஆறாவது வெப்பமான ஆண்டாகும்.
இந்தியாவில், 2022ல் சராசரி வெப்பநிலை இயல்பை விட 0.64 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது (1981-2010 காலகட்டத்தின் சராசரி). தொழில்துறைக்கு முந்தைய வெப்பநிலையில் இருந்து வேறுபாடு தெளிவாக இல்லை, ஆனால் இந்தியாவின் வெப்பமயமாதல் உலக சராசரியை விட குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில் புவி அறிவியல் அமைச்சகத்தால் செய்யப்பட்ட இந்தியாவின் காலநிலையின் மிக விரிவான மதிப்பீடு, 1900 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் சராசரி வெப்பநிலை சுமார் 0.7 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது உலக வெப்பநிலை உயர்வை விட கணிசமாகக் குறைவு. இப்போது பல ஆண்டுகளாக ஒரு டிகிரி செல்சியஸைத் தாண்டியது. நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவின் வெப்பமயமாதல் வெவ்வேறு உமிழ்வு சூழ்நிலைகளில் தற்போதைய நிலைகளில் இருந்து 2.4 முதல் 4.4 டிகிரி செல்சியஸ் வரம்பில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களில் வெப்பம் அதிகமாக உள்ளது. வெப்பமண்டல இந்தியப் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1950 மற்றும் 2015 க்கு இடையில் கிட்டத்தட்ட ஒரு டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது, இந்த மதிப்பீடு மேலும் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் நிலை என்ன?
இந்தியா வெப்பமயமாதல் மாநிலங்களுக்கு இடையே வேறுபட்டுள்ளது. சில மாநிலங்கள் குறைவாகவும், சில மாநிலங்கள் அதிகமாகவும் வெப்பம் பதிவு செய்துள்ளன. கடந்த வாரம், இந்திய வானிலை மையம் முதல் முறையாக மாநில அளவிலான வெப்ப பதிவை வெளியிட்டது. அதில், கடந்த 120 ஆண்டுகளில் ஹிமாச்சலப் பிரதேசம், கோவா மற்றும் கேரளாவில் 100 ஆண்டுகளுக்கு 1 டிகிரி செல்சியஸ் என்ற விகிதத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 29 மாநிலங்களின் தரவுகளில் வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவை - மிசோரம், அசாம், சிக்கிம், மணிப்பூர், திரிபுரா - அவற்றின் வெப்பநிலை 100 ஆண்டுகளுக்கு 0.7 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு, இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளன. 2022ஆம் ஆண்டு சிக்கிம் அதிக வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. மாச்சலப் பிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இரண்டாவது வெப்பமான மாநிலமாக இருந்தது. சுவாரஸ்யமாக, 2 மாநிலங்கள் கர்நாடகா மற்றும் தெலங்கானா 2022-ல் இயல்பை விட குளிர்ச்சியாக இருந்தது. ஓரளவு இங்கு குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வானிலை - உயிரிழப்புகள்
இந்திய வானிலை ஆய்வு மையம் முதல் முறையாக வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் இறப்புகள் பற்றிய தரவுகளையும் வெளியிட்டுள்ளது. அதில் வெப்ப அலைகள் அதிக கவனத்தை ஈர்த்திருந்தாலும், மின்னல் தாக்குதல்களால் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளது.
2022-ல் இந்தியாவில் வானிலை நிகழ்வுகளால் ஏற்பட்ட 60 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் பதிவு செய்யப்பட்ட 2,657 இறப்புகளில் 1,608 இறப்புகள் மின்னல் தாக்குதல்களால் ஏற்பட்டவை என்று கூறியுள்ளது. வெள்ளம் மற்றும் அதிக மழையால் 937 உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.