விமானத்தில் வைரஸ் பரவல் ஆபத்து ஏன் குறைவாகக் காணப்படுகிறது?

உள்நாட்டு விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கும் நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் விமான பயணங்கள் பாதுகாப்பானதா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

நோய் தொற்று இருப்பவர்கள் நம் அருகில் அமரும் சந்தர்பங்களைத் தவிர்த்து,  விமானத்திற்குள் பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்துகள்  குறைவாக கருதப்படுகிறது.

விமானத்திற்குள் ஏற்படும் நோய் தொற்று அபாயத்தை பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அளவிட முயன்று வருகின்றன.  சமீபத்தில் வெளியான இரண்டு ஆய்வுகளை இங்கே பார்க்கிறோம். இருப்பினும், விமானத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து குறித்து இதுவரை எந்த ஆய்வும் செய்யப்படவில்லை  .

ஒரு ஆய்வு 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது, விமானத்திற்குள் வைரஸ் பரவலை ஆய்வு செய்கிறது; மற்றொன்று ஆய்வு இந்த (2020) ஆண்டு வெளியிடப்பட்டது. போர்டிங் நடைமுறையில் நோய் தொற்று பரவலில் பங்கு என்ன என்பதை இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.

முதல் ஆய்வு கூறுவது என்ன?

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 1 மீட்டர் இடைவெளி தூரத்தை பராமரிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது. 2018ம் ஆண்டு எமோரி பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜியா தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு விமானப் பயணியின் மூலம் அருகாமையில் உள்ளவர்களுக்கு பரவும் அபாயத்தை அளவிட்டனர். பத்து சர்வதேச அமெரிக்க எகானமி வகுப்பு விமானங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், நீர்த்துளிகள் மூலம் பரவுகின்ற சுவாச நோய் பரவல் தன்மையையும் அவர்கள் கண்டறிந்தனர்.

 

 

14 சி இருக்கையில் உள்ள பயணி ஒருவருக்கு பாதிப்பு உள்ளதாக மேலே உள்ள படத்தில் காணலாம். இருக்கை எண் 11 வரையுள்ள பயணிகளுக்கு (14 சிக்கு மிக அருகில் உள்ளவர்கள்) 80% -100% விகிதத்தில் நோய் தொற்று ஏற்படுவதற்கான  வாய்ப்பு உள்ளது. மற்ற இருக்கையில் இருக்கும் பயணிகளுக்கு 3% க்கும் குறைவான அளவே ஆபத்து இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், தூரம் அதிகரிக்க நோய் தொற்று ஆபத்து விகிதமும் குறைகிறது. 14C இருக்கயில் இருந்து 1மீட்டர் ( உலக சுகாதார அமைப்பு நிபந்தனை) தொலைவில் இருக்கும் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு 1%-க்கும் குறைவாக உள்ளது. இருக்கை இடைவெளியில் நடந்து செல்லும் ஒரு விமான பணியாளருக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து 5% முதல் 20% வரை இருக்கும் என்றும் இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.

ஏன் குறிப்பாக 14 சி இருக்கை?
விசயங்களை எளிமையாக புரிய வைப்பதற்காகத் தான். ” ஆய்வுக்காக நாங்கள் 14 சி இருக்கையை பயன்படுத்தினோம். முதல் அல்லது கடைசி வரிசையைத் தவிர, எந்த இருக்கையில் பாதிப்புடையவர் அமர்ந்திருந்தாலும் இதே முடிவு தான்” என்று ஆய்வு தெரிவிக்கிறது.

ஆனால் இது கொரோனா நோய் தொற்றுக்கு பொருந்துமா?

இன்ஃப்ளூயன்ஸா (அ) கோவிட் -19 போன்ற நோய் தொற்றுக்கான நிகழ்தகவுகள் (probabilities) எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று
பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உயிர் கணிதவியலாளரும், ஆய்வை மேற்கொண்ட ஒருவருமான ஹோவர்ட் வெயிஸ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

மற்றொரு ஆய்வு என்ன சொல்கிறது?

எந்த போர்டிங் நடைமுறையில் விமானப் பயணங்களில் நோய் பரவும் அபாயத்தை குறைக்காலம் என்பதை புளோரிடாவைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர் .CALM எனும் பாதசாரி இயக்கவியல் மாதிரி மூலம், மக்கள் ஒருவருக்கொருவர் எப்படி சமூக தூரத்தை பராமரிக்கின்றனர் என்பதை கண்டறிந்தனர் . இந்த ஆராய்ச்சி மார்ச் மாதம் PLOS One எனும் இதழில் வெளியிடப்பட்டது.

பிசினஸ் வகுப்பு விமானங்களை விட , எகானமி வகுப்பு வகுப்புகளில் நோய் தொற்று பரவுவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

விமானங்களில் இருக்கை மூலம் ஆபத்து மாறுமா?

இது காற்று ஓட்டத்தைப் பொறுத்தது. காற்று ஓட்டத்தை நாம் கருத்தில் கொள்ளாவிட்டால், ஜன்னல் இருக்கைகள் விட, இடைப்பட்ட நடைபாதைக்கு அருகில் இருக்கும் இருக்கைகள் ஆபத்தானதாக இருக்கும். காற்று ஓட்டம் கருத்தில் கொண்டு பார்த்தால் , விஷயங்கள் மிகவும் சிக்கலானவை. பெரும்பாலான விமானங்களில், ஜன்னல் இருக்கை அதிக பாதுகாப்புடையதாக கருதப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் காற்று ஓட்ட முறைகள் ஜன்னல் இருக்கைகளையும்  ஆபத்தானதாக மாற்றலாம்.

போர்டிங் நடைமுறைகள் பற்றி ஆய்வுகள் என்ன கூறுகிறது?

2020 மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், போர்டிங் நடைமுறையில்  மண்டலங்களைக் குறைப்பது நல்லதாக கண்டறியப்பட்டுள்ளது. “பல போர்டிங் மண்டலங்கள் இருந்தால், மக்கள் தங்கள் உடமைகளை ஆங்காங்கே  அடுக்கி வைக்க நிர்பந்தம் ஏற்படுவதால் கூட்டம் கூட வழிவகுக்கும். இதன் மூலம் சமூக விலகல் நெறிமுறையைக் கடைபிடிப்பது கடினமானதாக அமையும் ”என்று தெரிவிக்கப்பட்து.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close