Advertisment

ஆக்ரோஷமாக வெடிக்கும் டோங்கா எரிமலை; பின்விளைவுகள் என்னவாக இருக்கும்?

கடல் மட்டத்தில் இருந்து 100 மீட்டர் உயரத்தில், டோங்கா நாட்டின் தலைநகரம் நூக்கு-அலோஃபாவில் இருந்து 65 கி.மீ தொலைவில் இந்த தீவுகள் அமைந்துள்ளது. மேலே இருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. ஆனால் உள்ளே 1800 மீட்டர் உயரத்தில் 20 கி.மீ அகலத்தில் ஒரு பிரம்மாண்ட எரிமலை அலைகளுக்கு கீழே மறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
volcanic eruption in Tonga was so violent

The Conversation 

Advertisment

volcanic eruption in Tonga was so violent : ஜனவரி 15ம் தேதி அன்று டோங்கா ராஜ்ஜியத்தில் அமைந்திருக்கும் இரண்டு தீவுகளுக்கு அருகே, கடலுக்குள்ளே ஏற்பட்ட எரிமலை வெடிப்பிற்கு முன்பு வரை அதிக அளவில் டோங்கா நாடு உலக நாடுகளில் கவனத்தை பெற்றதில்லை. தற்போது உலக நாடுகள் அனைத்தும் டோங்காவில் தன்னுடைய பார்வையை திருப்பியுள்ளன.

டோங்காவில் அமைந்திருக்கும் எரிமலை பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாத ஒன்று என்பதால் அதில் கவனம் செலுத்த ஏதும் இல்லாமல் இருந்தது. மக்கள் வாழாத இரண்டு தீவுகளான ஹுங்கா ஹாப்பய் மற்றும் ஹூங்கா டோங்கா (Hunga-Ha’apai and Hunga-Tonga) என்ற இரண்டு தீவு பிரதேசங்களை இது உள்ளடக்கியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 100 மீட்டர் உயரத்தில், டோங்கா நாட்டின் தலைநகரம் நூக்கு-அலோஃபாவில் இருந்து 65 கி.மீ தொலைவில் இந்த தீவுகள் அமைந்துள்ளது. மேலே இருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. ஆனால் உள்ளே 1800 மீட்டர் உயரத்தில் 20 கி.மீ அகலத்தில் ஒரு பிரம்மாண்ட எரிமலை அலைகளுக்கு கீழே மறைந்துள்ளது.

ஹூங்கா-டோங்கா-ஹாப்பய் எரிமலை கடந்த சில வருடங்களாக வெடித்துக் கொண்டு தான் இருக்கிறது. 2009, 2014 மற்றும் 15 காலகட்டங்களில் கடலில் இருந்து மாக்மா குழம்பு வெளியேற்றப்பட்டது. ஆனால் சமீபத்திய நிகழ்வுகளுடன் ஒப்பிடும் போது இவை அனைத்தும் மிக சாதாரணமானவை.

முந்தைய வெடிப்புகள் குறித்த எங்களின் ஆராய்ச்சியானது, ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஒரு முறை சக்திவாய்ந்த வெடிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று பரிந்துரை செய்கிறது.

கடல்நீர் மாக்மாவை குளிர்விக்கும் வாய்ப்புகள் இருக்கின்ற போதும் ஏன் இந்த டோங்கா வெடிப்பு மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது?

மாக்மா கடல் நீரில் மெதுவாக உயரும் பட்சத்தில், சுமார் 1200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கூட, மாக்மாவிற்கும் தண்ணீருக்கும் இடையில் ஒரு மெல்லிய நீராவிப் படலம் உருவாகி மாக்மாவை குளிர்விக்க தேவையான வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் இந்த செயல்முறை, மிகவும் ஆக்ரோஷத்துடன் எரிமலை வெடிக்கும் போது நிகழாது. மாக்மா விரைவாக தண்ணீருக்குள் நுழையும் போது, நீராவி அடுக்குகள் விரைவாக சீர்குலைந்து, சூடான மாக்மாவை குளிர்ந்த நீருடன் நேரடியாக தொடர்புபடுத்துகிறது.

ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வை ‘fuel-coolant interaction’ என்று அழைக்கின்றனர். மேலும் இதர ரசாயன ஆயுத வெடிப்புகளுடன் இதனை ஒப்பிடுகின்றனர். மிகவும் ஆக்ரோஷமான வெடிப்புகள் மாக்மாவை கிழித்து வீசுகின்றன. இது ஒரு சங்கிலி தொடர் போல் அரங்கேறுகிறது. புதிய மாக்மா துண்டுகள் புதிய சூடான உட்புற மேற்பரப்புகளை தண்ணீருக்கு வெளிப்படுத்துகின்றன. மேலும் புதிய வெடிப்புகள் உருவாகும் போது, எரிமலைத் துகள்களை வெளியேற்றி, சூப்பர்சோனிக் வேகத்துடன் வெடிப்புகள் எரிமலையில் ஏற்படுகின்றன.

ஹங்கா வெடிப்பின் இரண்டு அலகுகள்

2014/15 வெடிப்பு ஒரு எரிமலை கூம்பை உருவாக்கியது, இரண்டு பழைய ஹங்கா தீவுகளை இணைத்து சுமார் 5 கிமீ நீளமுள்ள ஒரு தீவை உருவாக்கியது. 2016ம் ஆண்டு நாங்கள் அதனை பார்வையிட்டோம். தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வரலாற்று வெடிப்பிற்கு அவை வெறும் முன்னோட்டம் மட்டும் தான். கடல் தளத்தை வரைபடமாக்கி, அலைகளுக்கு கீழே 150 மீட்டர் தொலைவில் மறைந்திருந்த ‘கால்டெரா’வைக் (Caldera) கண்டுபிடித்தோம்.

கால்டெரா என்பது 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளம் போன்ற தாழ்வான பகுதியாகும். இதன் விளிம்புகளில் தான் மிக 2009 மற்றும் 2014/15 காலங்களில் ஏற்பட்ட சிறிய அளவிலான வெடிப்புகள் நிகழ்கின்றன. ஆனால் மிகப் பெரியவை கால்டெராவின் மையத்தில் இருந்து ஏற்படுகிறது. இவை வெடிப்புகளை மேலும் பெரிதாக்குகின்றன. வெடித்து சிதறும் மாக்மா மீண்டும் கால்டெராவில் விழுவதால் கால்டெரா மேலும் பள்ளமாகிறது.

கடந்த கால எரிமலை வெடிப்புகளின் செயல்பாடுகளை கவனிக்கும் போது, ​​சிறிய வெடிப்புகள் ஒரு பெரிய நிகழ்வுக்குத் தயாராவதற்கு மெதுவாக ரீசார்ஜ் செய்யும் மாக்மா அமைப்பையே குறிக்கின்றன என்று இப்போது புரிகிறது.

ஹங்கா கால்டெராவில் ஏற்பட்ட இரண்டு பெரிய வெடிப்புகளை ஆய்வு செய்ய தேவையான ஆதாரங்களை வெடிப்பின் எச்சங்கள் சேமிக்கப்படும் பகுதிகளில் கண்டறிந்தோம். அவற்றின் முடிவுகளை நாங்கள் . 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோங்காடாபு என்ற மிகப்பெரிய தீவில் உள்ள எரிமலை சாம்பல் படிவுகளுடன் ஒப்பிட்டோம். ரேடியோ கார்பன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய கால்டெரா வெடிப்புகள் ஏற்படுகின்றன என்பதை கண்டறிந்தோம். இறுதியாக 1100 ஆண்டுகளில் இத்தகைய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அடுத்து என்ன நடக்கும்?

நாம் தற்போது ஒரு தொடர்ச்சியான எரிமலை வெடிப்புகளுக்கு மத்தியில் இருக்கின்றோம். பல்வேறு விஷயங்கள் குறித்த தெளிவான மதிப்பீடுகள் நம்மிடம் இல்லை. ஏன் என்றால் தற்போது அந்த தீவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி சாம்பல் மேகங்களால் சூழப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 20ம் தேதி அன்று ஏற்பட்ட வெடிப்பும், ஜனவரி மாதம் 13ம் தேதி அன்று ஏற்பட்ட வெடிப்பும் அளவில் மத்தியமானவை. அவைகள் அனைத்தும் 17 கி.மீ வரை புகை மண்டலத்தை எழுப்பி பிறகு சாம்பல்கள் 2014/15 காலங்களில் உருவான புதிய தீவில் படர்ந்தன.

தற்போதைய வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததது. ஏற்கனவே 20 கிமீ உயரத்திற்கு சாம்பல் மண்டலம் பரவியுள்ளது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், எரிமலையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் கிட்டத்தட்ட செறிவாக பரவி, காற்றினால் சிதைவதற்கு முன்பு, 260 கிமீ விட்டம் கொண்ட சாம்பல் புகை மண்டலத்தை இந்த வெடிப்பு உருவாக்கியுள்ளது.

இந்த வெடிப்பு டோங்கா மற்றும் அண்டை நாடுகளான பிஜி மற்றும் சமோவா முழுவதும் சுனாமியை உருவாக்கியது. அதிர்வு அலைகள் பல ஆயிரம் கிலோமீட்டர்களைக் கடந்துள்ளது. விண்வெளியில் இருந்து பார்க்கப்பட்டு நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2000 கி.மீ அப்பால் இருக்கும் நியூசிலாந்து நாட்டிலும் இவை உணரப்பட்டுள்ளது. வெடிப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, டோங்காடாபுவில் மேற்பரப்பு தடுக்கப்பட்டு சாம்பல் கீழே விழ ஆரம்பித்தன.

இந்த அறிகுறிகள் அனைத்தும் பெரிய ஹங்கா கால்டெரா வெடிப்பு துவங்கியுள்ளது என்பதை குறிக்கின்றது. ஒரு வெடிப்பின் போது இணைந்த வளிமண்டல மற்றும் கடல் அதிர்ச்சி அலைகளால் சுனாமி உருவாகிறது, ஆனால் அவை நீருக்கு அடியே நிலச்சரிவுகளை ஏற்படுத்தவும் கால்டெரா சரிவுகளுக்கும் வழிவகை செய்தன.

இத்துடன் எரிமலை வெடிப்பு முடிந்துவிடுமா என்று தெரியவில்லை. பெரிய மாக்மா அழுத்த வெளிப்பாடு என்று தோன்றுகிறது. விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எரிமலையின் முந்தைய டெபாசிட்கள் ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிக்கலான காட்சிகள் ஒவ்வொன்றும் 1000-ஆண்டுகளின் பெரிய கால்டெரா வெடிப்பு அத்தியாயங்கள் பல தனித்தனி வெடிப்பு நிகழ்வுகளை உள்ளடக்கியதாகக் காட்டுகின்றன. ஒரு சில மாதங்கள் ஏன் ஒரு சில வருடங்கள் கூட இந்த எரிமலை அமைதியற்றதாக இருக்கலாம். இது டோங்கா மக்களுக்கு நல்லதல்ல என்று நான் நம்புகின்றேன்.

ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் புவி அறிவியல் பேராசிரியர் ஷேன் க்ரோனின் (Shane Cronin) எழுதிய கட்டுரை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment