Why this may be the right time to buy a home Tamil News : கடந்த ஒரு மாதமாக, பல வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் தங்கள் வீட்டுக் கடன் விகிதங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளன. இது அதிக பணப்புழக்கம் மற்றும் பொருளாதாரத்தில் குறைந்த வட்டி விகிதத்தின் பிரதிபலிப்பாக இருந்தாலும், புதிய வீட்டுக் கடன்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், எந்த வங்கியும் அல்லது எச்எஃப்சியும் அதை இழக்க விரும்பவில்லை என்பதே இதன் முழுமையான அர்த்தம். பில்டர்களால் வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் பொருளாதாரத்தில் குறைந்த வட்டி விகிதங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் வருங்கால வீடு வாங்குபவர்கள் இந்த நேரத்தைப் பொருத்தமானதாகக் கருதுகின்றனர்.
ஏன் தேவை அதிகரித்து வருகிறது?
கோவிட் -19-ன் முதல் அலையைத் தொடர்ந்து அக்டோபர் 2020 மற்றும் மார்ச் 2021-க்கு இடையில் இரு காலாண்டுகளில் வீட்டுக்கான தேவை கடுமையாக உயர்ந்தது. பல மாநில அரசுகளால் முத்திரைத்தாள் குறைப்பு, டெவலப்பர்களால் வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் போன்ற காரணிகள் இதற்கு உதவின. கோவிட் இரண்டாவது அலைக்குப் பிறகு, ஜூன் 2021-ல் முடிந்த காலாண்டில் அதன் வேகம் குறைந்தது. ஆனால், பொருளாதாரம் விரிவடைவு, தடுப்பூசியின் வேகத்தில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் உயர்வு ஆகியவை கடந்த இரண்டு மாதங்களில் மீண்டும் அதிகரித்துள்ளன.
ஒரு முன்னணி வீட்டு நிதி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், கோவிட் -19 வீட்டின் தேவைக்கு ஒரு பெரிய உந்துசக்தியாக இருந்தது. ஏனெனில் மக்கள் வீட்டிலிருந்து வேலை, கல்வி, தனிமைப்படுத்தல் போன்றவற்றிற்கு வீட்டில் அதிக இடம் தேவை என்பதை உணர்ந்துள்ளனர் என்றார். மேலும், "வாடகைக்கு வசதியாக இருந்த பலர், இப்போது கோவிட்டைத் தொடர்ந்து தங்கள் சொந்த வீட்டின் தேவையை உணர்கிறார்கள். வீட்டிலிருந்து வேலைக்கான இடத் தேவைகளைப் பின்பற்றி இப்போது ஒரு பெரிய வீட்டைத் தேடும் பல வீடுகளும், வீட்டிலிருந்து தங்கள் வகுப்புகளைத் தொடரும் குழந்தைகளும் உள்ளனர். நகர்ப்புறங்களில், ஒரு பெரிய வீட்டின் தேவையை அதிக எண்ணிக்கையிலான மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். முடிந்தவர்கள் இன்னும் கொஞ்சம் இடவசதியுடன் கூடிய வீட்டிற்குச் செல்கிறார்கள்” என்றும் அவர் கூறினார்.
ஐடி மற்றும் பிற சேவைத் துறைகளில் உள்ள பல ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கமாகிவிட்டதாக தொழில்துறையினர் கூறுகின்றனர். பல தனிநபர்கள் இப்போது தங்கள் பணியிடத்திலிருந்தோ அல்லது மத்திய மாவட்டப் பகுதியிலிருந்தோ ஒரு பெரிய வீட்டை வாங்கத் தேடுகிறார்கள்.
கடந்த ஒரு வருடத்தில் அதன் தேவை அதிகரிப்பு, சில நகரங்களில் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது. ரெசிடெக்ஸ் எனும் தேசிய வீடமைப்பு வங்கியால் ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும் வீட்டு விலைக் குறியீடு, டெல்லியில் டிசம்பர் 2020-ல் 91-லிருந்து மார்ச் 2021-ல் 95 ஆகவும், நொய்டாவில் 104-லிருந்து 108-ஆகவும், பெங்களூரில் 116-லிருந்து 118-ஆகவும் உயர்ந்தது. மேலும், மும்பையில் 106-லிருந்து 105-ஆக குறைந்துவிட்டாலும், நவி மும்பையில் 107-ல் இருந்து 118-ஆக உயர்ந்தது.
விலைகள் உயருமா?
டெவலப்பர்கள் தங்கள் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்காக விற்பனையை முன்னெடுத்துச் செல்வதாலும், சரக்கு நிலைகள் அதிகமாக உள்ளதாலும், மேலும் புதிய விநியோகம் குறைந்த வேகத்தில் இருப்பதாலும் விலைகள் விரைவாக உயராது என்று வல்லுநர்கள் மற்றும் தொழில் சார்ந்தோர் இருவரும் கூறுகின்றனர்.
"மார்ச் 2021 இறுதியில் அகில இந்திய சராசரி இருப்பு 42 மாதங்களாகக் குறைந்துவிட்ட நிலையில், அது இப்போது 48 மாதங்களாக உயர்ந்துள்ளது (கோவிட் இரண்டாவது அலைக்குப் பிறகு விற்பனை சரிவைத் தொடர்ந்து) மற்றும் 60 நகரங்களில் சுமார் 12.5 லட்சம் விற்கப்படாத அலகுகள் உள்ளன”என்று லையசெஸ் ஃபோரஸ் ரியல் எஸ்டேட் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் எம்.டி பங்கஜ் கபூர் கூறினார்.
சந்தையில் போதுமான அளவு சப்ளை இருப்பதால் எச்எப்சி அதிகாரி ஒருவர், "சொத்து விலை உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை" என்றார். தேவை இருந்தாலும்கூட, சப்ளை ஒரு பிரச்சினையாக இருக்காது. ஏனெனில் "புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் பொருட்களை விரைவாகக் கொண்டு வர முடியும்" என்றார். இருப்பினும், பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் 10-15% விலைகள் உயரக்கூடும் என்றும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதைத் தொடர்ந்து தொழிலாளர் செலவும் உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
நீங்கள் இப்போது உங்களுக்கான சொந்த வீட்டை வாங்க வேண்டுமா?
உங்களிடம் ஒரு வீடு வாங்க சேமிப்பு இருந்தால், இது நல்ல நேரம். இது "வாங்குபவர்களின் சந்தை" என்று கபூர் கூறினார். ஏனெனில் போதுமான சப்ளை உள்ளது மற்றும் டெவலப்பர் கூட பணப்புழக்கத்தை அதிகரிக்க விற்பனையை அதிகரிக்கப் பார்க்கிறார். அதே நேரத்தில், வட்டி விகிதங்கள் ஏற்புடையதாக இருக்கிறது. குறைந்த EMI தவிர, ஒரு பெரிய நன்மை என்னவென்றால், குறைந்த வட்டி விகிதம் வாடிக்கையாளரின் தகுதியை அதிகரிக்கிறது. உதாரணமாக, EMI ரூ.50,000 வரை இருக்க வேண்டிய கடனுக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், 8% வட்டி விகிதத்தில் நீங்கள் ரூ.60 லட்சம் கடன் பெறலாம். குறைந்த விகிதத்தில் 6.7% தொகை ரூ.66 லட்சம் வரை போகலாம்.
கோவிட் காரணமாகக் கட்டுமான செயல்பாடு சுமார் 40% குறைந்துவிட்டதால் டெவலப்பர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். "வாங்குவதற்கு இது ஒரு நல்ல நேரம். ஆனால், வீடு வாங்குபவர்கள் தயாராகத் திட்டங்களுக்குச் செல்ல வேண்டும். பில்டர்கள் அழுத்தத்தில் இருந்தால், அவர்கள் தொகுதிகளை அதிகரிக்கத் தள்ளுபடிகள் கொடுக்க வேண்டும். பிறகு என்ன? இப்போது இது வாங்குபவர்களின் சந்தையாக இருக்கும்” என்றார் கபூர்.
உங்கள் சொந்த உபயோகத்திற்காக ஒரு வீட்டை வாங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால், முதலீட்டிற்காக ஒரு வீட்டை வாங்குவது போல் இருக்காது. அதிக இருப்பு நிலைகள் மற்றும் புதிய சரக்குகளும் வருவதால் விலைகள் உடனடியாக உயராது.
நீங்கள் ரியல் எஸ்டேட் பங்குகளிலும் முதலீடு செய்ய வேண்டுமா?
பங்குச் சந்தை ஏற்றத்திற்கு மத்தியில், ரியல் எஸ்டேட் பங்குகளிலும் கூர்மையான உயர்வு ஏற்பட்டுள்ளது. பெருநகரங்களில் உள்ள ப்ளூ சிப் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வலுவான விற்பனை, நிஃப்டி ரியால்டி குறியீட்டை மே 2020-ல் 160-லிருந்து (மாதாந்திர நிறைவு அடிப்படையில்) செப்டம்பர் 2021-ல் 525 ஆக அதிகரித்துள்ளது.
எப்படி இருந்தாலும், ரியல் எஸ்டேட்டில் புல் மார்க்கெட் குறைந்த வட்டி விகிதங்கள், பொருளாதாரத்தில் மீட்பு, முதலீட்டாளர்கள் மற்றும் முதல் முறையாக வாங்குபவர்களின் நம்பிக்கையை மேம்படுத்திய சமீபத்திய சீர்திருத்தங்களால் ஆதரிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர். சந்தையில் பங்கேற்பாளர்களின் கூட்டு நம்பிக்கை இல்லாமல் இது சாத்தியமில்லை. 2008-க்கு முன்பு ரியல் எஸ்டேட் புல் சந்தையில் காணப்பட்ட வளர்ச்சி சுழற்சிக்கு இந்தத் துறை திரும்பும் என்பதையும் இது குறிக்கிறது” என்று ஒரு நிதிச் சந்தை பங்கேற்பாளர் கூறினார்.
ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்ய பரஸ்பர நிதி வழியைப் பயன்படுத்துவதைத் தவிர, முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளில் வாங்கும் அலகுகள் அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளில் முறையான முதலீட்டுத் திட்டங்களைப் பார்க்க முடியும்.
ஒரு பிளாட் அல்லது ஒரு துண்டு நிலத்தில் ஒரு முறை முதலீடு செய்வது போலல்லாமல், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சொத்துக்களை நிர்வகிக்கும் தொந்தரவுகள் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய முடியும். இந்த முதலீடுகளும் அதிக திரவத்தன்மை கொண்டவை. மேலும், இடைப்பட்ட காலங்களில் விலைகள் வீழ்ச்சியடைந்தால் உங்கள் செலவுகளை சராசரியாக மாற்றுவதற்கான விருப்பத்தை வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.