Advertisment

அமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு அனுமதி இல்லை! காரணம் என்ன தெரியுமா?

மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் 30/1-ஐ எவ்வாறாக சமரசம் செய்துள்ளது என்பதை காட்டுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
United States restricted Sri Lankan Army Chief Staff Shavendra Silva

United States restricted Sri Lankan Army Chief Staff Shavendra Silva

 Shubhajit Roy 

Advertisment

United States restricted Sri Lankan Army Chief Staff Shavendra Silva : இலங்கையின் ராணுவ தலைமை தளபதி சவேந்திர சில்வா (லெஃப்டினன்ட் ஜெனரல்) அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது போர் விதிமுறைகளை மீறி குற்றங்களை மேற்கொண்டதால் இவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் மைக்கேல் ஆர். பாம்பியோ பிப்ரவரி 14ம் தேதி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கையின் ராணுவ தளபதி சில்வாவுக்கு தடை விதிக்கின்றேன். இலங்கை உள்நாட்டுப் போரில் இவர் புரிந்த குற்றச்சாட்டுகளுக்காக இந்த தடை விதிக்கப்படுகிறது என்றும், அமெரிக்கா எந்த காரணம் கொண்டும் போர் குற்றங்கள் புரிந்தவர்களையும், மனித உரிமைகளை மீறுபவர்களையும் ஒரு போதும் அங்கீகரிக்காது” என்று அறிவித்துள்ளார்.

To read this article in English

இலங்கை தளபதி மீதான அமெரிக்காவின் குற்றங்கள் என்ன?

சில்வா, இலங்கையில் இறுதி கட்டப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கை ராணுவத்தின் 58வது பிரிவை தலைமை தாங்கினார். ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் இந்த பிரிவு, இறுதிப் போரின் போது மனித உரிமைகளை மீறியுள்ளது உறுதி செய்யப்பட்டது. இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சில்வாவை ராணுவ தளபதியாக நியமனம் செய்ததிற்கு அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிச்சேல் பச்சேலட் சில்வாவின் பதவி குறித்து குறிப்பிட்ட போது “இது இலங்கை நீதி மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் 30/1-ஐ எவ்வாறாக சமரசம் செய்துள்ளது என்பதை காட்டுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil” 

போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் பார்வையில் இந்த பொறுப்பு சில்வாவிற்கு அளிக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கு எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து முயற்சிகளையும் தாழ்த்தும் என்றும், பாதுகாப்புத்துறை சீர் திருத்தம் மற்றும் ஐ.நாவின் ”அமைதியை உருவாக்குவதில்” பங்களிப்பினை தரும் இலங்கையின் நடவடிக்கைகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஐ.நா உரிமைகள் தலைவர் கூறியுள்ளார்.

இலங்கையின் 58வது படைப்பிரிவு போர் காலங்களில் மேற்கொண்ட விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள், அப்பாவி மக்களை கொலை செய்தது போன்றவற்றிற்கான பொறுப்பினை இலங்கையின் ராணுவத் தளபதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இலங்கைப் போரில் அப்பாவி மக்களை கொன்ற குற்றவாளிகளை அடையாளம் காண, அவர்களின் தவறுகளை தண்டிக்க ஐ.நா மனித உரிமை ஆணையத்துடன் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தை புறக்கணித்துவிட்டது அந்த நாடு.

இலங்கை போர் நிறைவுற்றவுடன், மனித உரிமைகள் தலைமை செயலகத்தில் இலங்கையின் நிரந்தர துணை பிரதிநிதியாக சில்வா நியமிக்கப்பட்டார். 2010 முதல் 2015ம் ஆண்டு வரையில் அந்த பொறுப்பினை வகித்தார் அவர். ராணுவ அதிகாரி ஒருவர் இது போன்ற பதவியை வகிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தண்டனை

சில்வாவிற்கு இத்தகைய பதவி உயர்வு வழங்கப்பட்டவுடன், ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் ராணுவ துருப்புகள் சர்வதேச அமைதி காக்கும் பணிகளை மேற்கொள்ள தடை விதித்தது. அந்த சமயத்தில் 650க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவத்தினர் ஐ.நா படையினருடன் லெபனான், மாலி மற்றும் தெற்கு சூசான் பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். மேலும் 35 அதிகாரிகள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகம் உட்பட பல்வேறு இடங்களில் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் இராணுவ பார்வையாளர்களாக பணியாற்றி வந்தனர்.  ஐ.நா செயலாளர் ஆன்டனியோ கட்டெரெஸின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் சில்வாவின் பணி உயர்வு குறித்து பேசிய போது “ஐ.நா, இலங்கை ராணுவத்தினர் அனைத்துவிதமான ஐ.நா அமைதி காக்கும் முயற்சிகளில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நாவின் சீறிய முயற்சிகளுக்கு இவர்கள் கடுமையான அபாயத்தை உண்டு செய்வார்கள்” என்றும் மேற்கோள் காட்டினார்.

கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி “சில்வாவின் மீது உறுதி செய்யப்பட்ட குற்றங்களும், குற்றங்களை உறுதி செய்யும் நம்பகமான ஆதாரங்களும் இருந்த போதிலும், அவரை தளபதியாக பதவி உயர்த்துவது குறித்து எங்களுடைய வருத்ததை தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டிருந்தார். 2012ம் ஆண்டு ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் “சர்வதேச குற்றங்கள் தொடர்பாக சில்வா வெகு அரிதாகவே பதில் அளித்துள்ளார்” என்று அறிவித்தது. பின்னர் சில்வா ஐ.நாவின் சிறப்பு ஆலோசனை குழுவில் இருந்தும் நீக்கப்பட்டார்.

சில்வா மீதான போர் குற்றங்களை 2015ம் ஆண்டு ஐ.நா ஆவணப்படுத்தியது. சில்வாவின் படை கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமட்டலன், முள்ளிவாய்க்கால் மற்றும் இதர பகுதிகளில், சாதாரண மக்களுக்கு எதிராக கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது பதிவு செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனைகள், ஐ.நாவின் தளங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்த இடங்கள் மற்றும் தாக்குதல் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் நடத்தப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது. போரின் இறுதி காலங்களில் சுமார் 45 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது ஐ.நா. ஆனால் மற்ற மதிப்பீடுகள் இதனை விட அதிகம். அன்றைய போர் சூழலில் சுமார் 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்வாவின் பதவி உயர்வு, நீதி மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது என்று மனித உரிமைகள் ஆணையர் பேச்சேலெட் வருத்தம் தெரிவித்தார்.

இந்தியாவின் நிலைப்பாடு

ஐ.நாவின் இந்த குற்றச்சாடுகள் தேவையற்றவை மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாதவை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரகம் அறிவித்தது. இலங்கையின் ராணுவத் தளபதியாக சில்வா நியமிக்கப்பட்ட நாளில் இருந்து இந்தியாவும் இலங்கையும் பல்வேறு தரப்பில் ஆலோசனைகளை நடத்தி வருகிறது, கோத்தப்ய ராஜபக்‌ஷே மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷே முறையே நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியா வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்திய அரசியல் தலைமையுடன் அவர்கள் நடத்திய சந்திப்புகளில், இலங்கை தலைமை பயங்கரவாத எதிர்ப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment