Advertisment

Explained USCIRF : சர்வதேச மத சுதந்திர ஆணையம் என்றால் என்ன? குடியுரிமை சட்ட மசோதாவை பற்றிய அதன் கருத்து என்ன ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
uscirf impose sanctions against amit shah, us federal body on citizenship bill

uscirf impose sanctions against amit shah, us federal body on citizenship bill

திங்களன்று, சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) குடியுரிமை சட்ட திருத்தம் மசோதா மக்களவையில்   நிறைவேற்றியதை அடுத்து தனது கருத்தை பதிவு செய்துள்ளது. மதத்தை அளவுகோலாய் வைத்து குடியுரிமையை முடிவு செய்வதை நினைத்து, 'ஆழ்ந்த கவலை'  அடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

Advertisment

மேலும் “பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் மற்றும் பிற முதன்மை தலைமையின் மீது அரசியல் தடைககள் விதிப்பது குறித்து  அமெரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கூறியது.

யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் என்பது ஒரு ஆலோசனைக் குழுவாகும்.  இது சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் மற்றும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்துகிறது.

அதன் இணையதளத்தில், தன்னை ஒரு சுயாதீனம் பொருந்திய , கூட்டாச்சி அரசின் ஆணையம் என்றும், சர்வதேச மத சுதந்திர சட்டத்தால் (ஐ.ஆர்.எஃப்.ஏ) உருவாக்க்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

இந்த ஆணையத்திற்கு இயல்பாக எதையும் நடைமுறைபடுத்தும் அதிகாரம் இல்லை. ஆனால், அமெரிக்க அரசாங்கத்தின் இரண்டு கிளைகளாக கருதப்படும்  சட்டமன்றம், நிர்வாகம் ஆகியவைகளின் மனசாட்சி காப்பாளராக செயல்படுகிறது. இது, பெரும்பாலும் அதிகபட்ச அல்லது தீவிர நிலைப்பாடுகளை எடுப்பதை வழக்கமாய்க் கொள்வதால் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் ஒற்று மக்கள் ஆயுதமாய் உள்ளது.

 

 

மத சுதந்திர ஆணையம்  என்றால் என்ன?

1998ம் ஆண்டில் சர்வதேச மத சுதந்திரச் சட்டம் என்கிற சட்டத்தை 105-வது அமெரிக்க காங்கிரஸால் (1997-99) நிறைவேற்றப்பட்டு,அக்டோபர் 27, 1998 அன்று அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனால் சட்டமாக்கப்பட்டது. இது வெளிநாடுகளில் மத சுதந்திரங்களை மீறுவது குறித்த அமெரிக்காவின் அக்கறை குறித்தது.

இந்தச் சட்டத்தின் நோக்கமாக : “மதத்தின் காரணமாக வெளிநாடுகளில் துன்புறுத்தப்பட்ட தனிநபர்கள் சார்பாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்துவது , அமெரிக்காவின் வாதத்தை வலுப்படுத்துவது; வெளிநாடுகளில் மத சுதந்திர  மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பது; அமெரிக்கா வெளியுறவுத்துறைக்குள் சர்வதேச மத சுதந்திரத்திற்கான தூதர்,சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் போன்றவைகளை நிறுவுவது, தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்குள் சர்வதேச மத சுதந்திரம் குறித்த சிறப்பு ஆலோசகர் ஆகியோரை நிறுவுவ,  போன்ற  மற்ற நோக்கங்களுக்காக. "

மத சுதந்திர ஆணையம்  என்ன செய்கிறது?

உலகளாவிய ( அமெரிக்காவில் அல்ல) மத சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான உரிமையை கண்காணித்து  - ஜனாதிபதி, வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் அமெரிக்கா  காங்கிரசுக்கு கொள்கை பரிந்துரைகளை அளிக்கின்றது. இந்த ஆணையத்தின் கமிஷனர்கள் ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் செனட்டின் இரு அரசியல் கட்சிகளின்  தலைவர்களால் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த ஆணையம், அமெரிக்கா அரசு வெளியுறவுத் துறையிலிருந்து பிரிக்கப்பட்டவுடன் , ​​சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் இந்த ஆணையத்தின் இயல்பான ஆணையர் ஆகிவிடுவார் ( ஆணையத்தில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை ).

"மத சுதந்திரம் அல்லது வெளிநாட்டில் நம்பிக்கை" என்பதை எவ்வாறு வரையறுக்கிறது?

தனது இணையதளத்தில் மத சுதந்திரம் குறித்து இவ்வாறாக கூறுகிறது: “மத சுதந்திரம் என்பது சர்வதேச சட்டம் மற்றும் ஒப்பந்தங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முக்கியமான மனித உரிமை… மத நம்பிக்கைக்கான சுதந்திரம் என்பது சிந்தனை மற்றும் மனசாட்சியின் சுதந்திரங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான உரிமையாகும். மேலும் இது பேச்சு மற்றும்  கருத்து சுதந்திரத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது" என்பதை உள்ளது .

மக்களவையில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இந்தியாவின் மத சுதந்திரத்தை குறித்த ஒரு  அறிக்கையை வெளியிட்டது. அந்த  அறிக்கையில், இந்த மசோதா "புலம் பெயர்ந்தோருக்கு  குடியுரிமை வழங்குதலில் குறிப்பாக இஸ்லாமியர்களை ஒதுக்கி வைக்கும் பாதையை உருவாக்குகிறது என்றும், மதத்தின் அடிப்படையில் இந்த  குடியுரிமை சட்டம் அளவுகோலை வடிவமைக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த காலங்களில் இந்தியா தொடர்பான பிரச்சினைகளை எழுப்பியதா?

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அசாமில் என்.ஆர்.சிக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிடும் போது, வடகிழக்கு இந்தியாவில் 'முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு ஆபத்தான சூழ்நிலையை உருவாகுகிறது'  என்று தெரிவித்து இருந்தது.  புதுப்பிக்கப்பட்ட என்.ஆர்.சியின் மூலம்  பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம்களின் வாக்குறிமையைப் பறிப்பதோடு, முஸ்லிம்களை வெளியேற்றுவதன் ஒரு  தொடக்கமாகவும் இந்த என்.ஆர்.சி அமையும் என்று கூறியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில், தப்ரேஸ் அன்சாரி கும்பல் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் தலைவர் டோனி பெர்கின்ஸ் 'இந்த மிருகத்தனமான கொலையை நாங்கள் மிகவும் கண்டிக்கிறோம்' என்றார்.

உள்ளூர் காவல்துறையினர் இந்த வழக்கைக் கையாண்ட விதம் வருந்த தக்கதென்றும், இந்த வகையான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக தெரிவத்தார்.

ஜூலை 2008 இல், நியூஜெர்சியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சுற்றுலா விசா மறுக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறையை அப்போது இந்த ஆணையம் வலியுறுத்தியது. இதற்கு சான்றாக,  2002ம் ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை குஜராத் மாநிலத்தி ஏற்பட்ட முக்கிய  கலவரங்களில் மோடியின் பங்களிப்பு காரணமாக அமெரிக்காவிற்கு நுழைவு மறுக்கப்பட்டது என்றும்  வெளியுறவுத்துறைக்கு தெரிவித்தது.

குஜாராத் மதக் கலவரத்தில் 2,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் மற்றும் 200,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர் .

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அமைப்புகளின் அறிக்கைகள் உட்பட பல அறிக்கைகள், வன்முறையைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் மோடியின் மாநில அரசாங்கத்தின் பங்கை ஆவணப்படுத்தியுள்ளன, இருந்தாலும் குற்றவாளிகளைப் பொறுப்பேற்கத் தவறிவிட்டன .

Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment