Advertisment

விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?

இந்திய-அமெரிக்கர் வேட்பாளர் விவேக் ராமசாமி தனக்கு உயர் பதவி கிடைத்தால் அமெரிக்காவில் பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று செப்டம்பர் 27-ம் தேதி கூறினார்,

author-image
WebDesk
New Update
kஆ

பிறப்புரிமை குடியுரிமை அமெரிக்க அரசியலில் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படும் தலைப்பாக உள்ளது.

பிறப்புரிமை குடியுரிமை என்பது அமெரிக்க அரசியலில் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படும் தலைப்பாக உள்ளது. நாட்டில் பிறந்த ஆவணமற்ற குடியேற்றவாசிகளின் குழந்தைகள் தானாகவே அமெரிக்க குடியுரிமை பெற அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்று அதன் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Why Vivek Ramaswamy wants to end birthright citizenship in the US

இந்திய-அமெரிக்கர் வேட்பாளர் விவேக் ராமசாமி தனக்கு உயர் பதவி கிடைத்தால் அமெரிக்காவில் பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று செப்டம்பர் 27-ம் தேதி கூறினார், அப்போதைய வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய 2015-ம் ஆண்டு முன்மொழிவை மீண்டும் எழுப்பினார்.

அமெரிக்க அரசியலமைப்பின் 14 வது திருத்தத்தின்படி, அமெரிக்காவில் பிறந்த பெரும்பாலானோருக்கு பிறப்புரிமை குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. நாட்டில் பிறந்த ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படக்கூடாது, ஏனெனில், அவர்களின் பெற்றோர் அமெரிக்காவில் தங்கியிருபது சட்டத்தை மீறியது என்று விவேக் ராமசாமி வாதிடுகிறார்.

“இரண்டு மகன்களின் தந்தையாக, நம்முடைய சொந்த அரசு தனது சொந்த சட்டங்களை பின்பற்றத் தவறும்போது, ​​அவர்களின் கண்களைப் பார்த்து, 'நீங்கள் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்' என்று சொல்வது எனக்கு கடினமாக இருக்கிறது” என்று விவேக் ராமசாமி கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 14வது திருத்தம் சரியாக என்ன சொல்கிறது? அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை எவ்வாறு உருவானது? இது ஏன் பரவலாக விவாதிக்கப்படுகிறது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே அளிக்கப்படுகிறது.

பிறப்புரிமை குடியுரிமை தோற்றம்

பிறப்புரிமைக் குடியுரிமை விவாதத்தின் மையமாக 14வது திருத்தம் உள்ளது. அதன் முதல் பிரிவு கூறுகிறது:  “அமெரிக்காவில் பிறந்த அல்லது இயற்கையான அனைத்து நபர்களும், மற்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள், அமெரிக்கா மற்றும் அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் குடிமக்கள்.” என்று கூறுகிறது.

ஆனால், 14வது திருத்தம் ஏன் முதலில் கொண்டுவரப்பட்டது? 1858-ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் பிரபலமற்ற 1857-ம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்ய இந்த திருத்தம் வந்தது. இது 'ட்ரெட் ஸ்காட் எதிர் சாண்ட்ஃபோர்ட்' வழக்கில், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பிறப்பின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அமெரிக்க குடிமக்களாக மாறுவதைத் தடுக்கிறது.

"குடியுரிமைக்கான உத்தரவாதம் இல்லாமல், கறுப்பின அமெரிக்கர்கள் சொந்தமாக சொத்து வைத்திருக்கவோ, சுதந்திரமாக நடமாடவோ அல்லது அமெரிக்காவில் தங்கியிருக்கவோ தெளிவான உரிமைகளைக் கொண்டிருக்கவில்லை - பல தலைமுறைகளுக்கு முன், 'காலனித்துவ சங்கங்கள்' அவர்களின் மூதாதையர்கள் விட்டுச் சென்ற ஒரு கண்டமான ஆப்பிரிக்காவிற்கு முன்னாள் அடிமைகளை பெருமளவில் நாடு கடத்துவதற்காக பணம் திரட்டினர்.” என்று வோக்ஸின் 2018 அறிக்கை கூறியது.

14-வது திருத்தம் முதன்முறையாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பாதுகாப்பான நிலையை உறுதி செய்தது.

இருப்பினும், நாட்டில் பிறந்த புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தானாகவே அமெரிக்க குடிமக்கள் என்ற கருத்து 1898 வரை தெளிவற்றதாகவே இருந்தது. அப்போதுதான் அமெரிக்க உச்ச நீதிமன்றம் முதன்முறையாக 14வது திருத்தம் அமெரிக்காவில் பிறந்த பெரும்பாலான மக்களுக்கு பிறப்புரிமைக் குடியுரிமை வழங்கியதாகக் கூறியது. சீனாவில் குடியேறியவர்களின் மகனான சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த வோங் கிம் ஆர்க் என்பவர் தாக்கல் செய்த ‘அமெரிக்கா எதிர் வாங் கிம் ஆர்க்’ வழக்கில் இந்தத் தீர்ப்பு வந்தது.

வாங் கிம் ஆர்க் வழக்கு

1950-களில் அவர்கள் அமெரிக்காவிற்கு வந்ததிலிருந்து, சீன புலம்பெயர்ந்தவர்கள் இனரீதியான தப்பெண்ணங்கள் மற்றும் உள்ளூர் இடங்களிலிருந்து வேலைகளை பறித்ததன் காரணமாக அவநம்பிக்கை மற்றும் வெறுப்புடன் காணப்பட்டனர். இது 1882-ல் சீன விலக்குச் சட்டத்தை இயற்றுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது - இது சீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தவிர்த்தது மட்டுமல்லாமல், அவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டதாகக் கூறியது.

1894-ம் ஆண்டில், வாங் கிம் ஆர்க் தற்காலிகமாக அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குச் சென்றார். அவர் திரும்பி வந்தபோது, குடியேற்ற அதிகாரிகள் அவரை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

“அவர் ஒரு குடிமகன் என்று எதிர்ப்பு தெரிவித்தார் (அவர் அமெரிக்காவில் பிறந்ததால்); (வரலாற்றாசிரியர் எரிகா லீயின் வார்த்தைகளில்) அமெரிக்காவில் பிறந்த சீனர்களின் பெற்றோர்கள் இல்லாவிட்டால் அவர்களை குடிமக்களாகக் கருத முடியாது, மேலும் ஒருபோதும் இயற்கையான குடிமக்களாக மாற முடியாது என்ற நிலைப்பாட்டை முன்வைக்க இந்த வழக்கை அமெரிக்க மத்திய அரசு பயன்படுத்தியது,” என்று வோக்ஸ் அறிக்கை சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது, அது வாங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது,  “குடியுரிமைக்கான உரிமை... நாட்டில் பிறக்கும் நிகழ்வு.” என்று கூறியது.

விவாதம்

பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதை ஆதரிப்பவர்கள் இரண்டு பரந்த வாதங்களைக் கொண்டுள்ளனர். முதலாவதாக, வாங் கிம் ஆர்க் வழக்கின் தீர்ப்பு வரம்புக்குட்பட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் வாங்கின் பெற்றோர் அவர் பிறந்த நேரத்தில் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் இருந்தனர் - அவர் 1870-களில் பிறந்தார், சீன விலக்கு சட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே இருந்தனர். எனவே, நாட்டில் பிறக்கும் சட்டவிரோத குயேற்ற மக்களின் குழந்தைகள் தானாகவே அமெரிக்க குடியுரிமை பெற முடியாது.

இரண்டாவது, 14வது திருத்தத்தில் உள்ள “அதன் அதிகார வரம்புக்கு உட்பட்டது” என்ற வாக்கியம் மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல் அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு இது பொருந்தும் என்றால் - வேறுவிதமாகக் கூறினால், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஆவார்கள்.

பிறப்புரிமை குடியுரிமையை எதிர்க்கும் தரப்பு, “சட்டவிரோத வெளிநாட்டினரின் குழந்தைகள், அவர்களின் பெற்றோரைப் போலவே, அமெரிக்கா அல்லாத ஒரு தேசத்திற்கு தங்கள் விசுவாசத்திற்கு கடன்பட்டிருக்கிறார்கள் என்பதை திருத்தத்தை உருவாக்கியவர்கள் புரிந்துகொண்டனர். எனவே, அவை அமெரிக்காவின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை அல்ல” என நம்புகிறார்கள் என்று தேசிய அரசியலமைப்பு மையத்தின்படி, அமெரிக்க அரசியலமைப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் குறிப்பிடுகிறது.

இருப்பினும், ஹூஸ்டன் பல்கலைக்கழக சட்ட மையத்தின் குடிவரவு கிளினிக்கின் இயக்குனர் ஜெஃப்ரி ஹாஃப்மேன், அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், அத்தகைய வாதங்கள் தவறானவை என்று கூறினார்,  “அமெரிக்காவில் உள்ள எந்தவொரு நபரும், தூதர்களைத் தவிர, குடியேற்ற நிலையைப் பொருட்படுத்தாமல் அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டு இருப்பார்கள்.” என்று கூறினார்.

பிறப்புரிமை குடியுரிமை ஆதரவாளர்கள் தங்கள் எதிர்பாளர்களின் வாதங்கள் இனவாத ரீதியான பார்வையைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள் - புலம்பெயர்ந்தோர் "அமெரிக்காவின் குணாதிசயத்தை" மாற்றிவிடுவார்கள் மற்றும் வெள்ளையர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகி விடுவார்கள் என்ற அச்சம் மறுபக்கம் இருப்பதாக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜூன் 2021 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க குடியேற்ற கவுன்சில் அறிக்கையின்படி, 2018-ம் ஆண்டு வரை 4.8 மில்லியன் அமெரிக்க குடிமக்கள் 18 மற்றும் அதற்கும் குறைவான ஒரு ஆவணமற்ற பெற்றோரைக் கொண்டுள்ளனர்.

பிறப்புரிமை குடியுரிமைக்கு அடுத்து என்ன நடக்கும்?

பிறப்புரிமை குடியுரிமை என்பது அமெரிக்க அரசியலில் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படும் தலைப்பு. டிரம்ப் இந்த விதியை ஒழிக்க முதன்முதலில் முன்மொழிந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஒரு செய்தி நிறுவனத்தில் 14 வது திருத்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு நிர்வாக ஆணையில் விரைவில் கையெழுத்திடுவார் என்று கூறினார் - அந்த உத்தரவு நாள் வரவே இல்லை. 

மேலும், ஆய்வாளர்கள், அந்த நேரத்தில், அத்தகைய நிர்வாக உத்தரவு அரசியலமைப்பிற்கு முரணானதாக இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டினர், இந்த விதியை திருத்துவதற்கான வாய்ப்பு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் மூலம் தான் நடத்த வேண்டும் என்று கூறினர்.

“ஒரு அரசியலமைப்புத் திருத்தம் அதிக தடையை எதிர்கொள்கிறது, ஏனெனில் சபையின் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் செனட் உறுப்பினர்கள் முன்மொழியப்பட்ட திருத்தம் மற்றும் அதன் சொற்களை ஒப்புக் கொள்ள வேண்டும், அதை மாநிலங்களுக்கு ஒப்புதலுக்காக முன்வைக்க வேண்டும்” என்று தேசிய அரசியலமைப்பு மையம் கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment