Advertisment

Explained: ஒமிக்ரான் பாதிப்பை ஏன் தவிர்க்க வேண்டும்?

பல நாடுகளில் ஒமிக்ரானின் அசாதாரண பரவல் என்பது மிகப்பெரிய எண்ணிக்கையில் அதிக அளவில் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதாகும். ஓமிக்ரானைப் பற்றி நிம்மதி அடைய வேண்டிய நேரம் இதுவல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Why we should avoid catching Omicron, covid 19, coronavirus, covid, ஒமிக்ரான் பாதிப்பை ஏன் தவிர்க்க வேண்டும், கொரோனாவைரஸ், கோவிட், கோவிட் 19, ஒமிக்ரான், omicron, omicron explained, indian express tamil explained

கொரோனா வைரஸின் முந்தைய திரிபு வரைஸ்களுடன் ஒப்பிடும் போது, ​​வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் திரிபு வைரஸ், கடந்த காலத்தை விட கோவிட்-19 குறைவான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்ற பார்வையை தூண்டியுள்ளது. இந்த விஷயத்தில், விரைவில் அல்லது பின்னர் எல்லோரும் வைரஸுக்கு ஆளாக நேரிடும் என்பதால், இப்போது தொற்றுநோயைத் தடுக்க ஏன் அதிக முயற்சி எடுக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.

Advertisment

ஒமிக்ரானைப் பற்றி நிம்மதியாக இருக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிலர் இன்னும் மிகவும் நோய்வாய்ப்பட்டவராக மாறலாம்

கொரோனா வைரஸின் முந்தைய மாறுபாடுகளைவிட ஒமிக்ரான் கோவிட்-19-ன் அறிகுறியில்லாமல் இருப்பதற்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ளது. முந்தைய தொற்றுகளின்போது பொதுவாக காணப்பட்ட சுவாசக பிரச்னைகள் இல்லாமல். இதில் ஒமிக்ரான் அறிகுறி உள்ளவர்களுக்கு தொண்டை புண் அல்லது மூக்கு ஒழுகுதல் போன்ற லேசான பிரச்னைகளை அதிக அளவில் அனுபவிக்கிறார்கள்.

ஓமிக்ரான் பாதிப்பை தவிர்க்க முயற்சிக்க வேண்டும் ஏன்?

பல நாடுகளில் ஒமிக்ரான் வைரஸின் அசாதாரண பரவல் என்பது மிகப் பெரிய எண்ணிக்கையில், அதிக அளவில் மக்கள் கடுமையாக நோயை அனுபவிப்பார்கள் என்பதாகும். குறிப்பாக, இத்தாலி மற்றும் ஜெர்மனியின் சமீபத்திய தகவல்கள், தடுப்பூசி போடப்படாதவர்கள் மருத்துவமனையில் சேர்ப்பது, தீவிர சிகிச்சை மற்றும் இறப்பு போன்றவற்றிற்கு வரும்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதைக் காட்டுகிறது.

“விரைவில் அல்லது பின்னர் அனைவரும் தொற்றுக்கு ஆளாவார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பின்னர் நல்லதாக இருக்கும்” என்று ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தின் வைரஸ் நிபுணர் மைக்கேல் நுசென்ஸ்வீக் கூறினார். “ஓமிக்ரான் பாதிப்பை தவிர்க்க முயற்சிக்க வேண்டும் ஏன்? ஏனென்றால் பின்னர் நம்மிடம் சிறந்த மற்றும் அதிக மருந்துகள் மற்றும் சிறந்த தடுப்பூசிகள் கிடைக்கும்.” என்று கூறினார்.

தொற்று ஏற்பட்டவர்கள் மற்றவர்களையும் பாதிக்கலாம்

ஒருவர் லேசாக நோய்வாய்ப்பட்டிருக்கலாம். ஆனால், முந்தைய தொற்று மூலம் அல்லது தடுப்பூசி மூலம் ஆன்டிபாடிகள் உருவாகி இருந்தாலும் கூட, ஆபத்தான நோய்க்கான ஆபத்தில் உள்ள மற்றொருவருக்கு வைரஸை பரப்பலாம் என்று யேல் பல்கலைக்கழகத்தில் வைரஸ் நோயெதிர்ப்பு பற்றி ஆய்வு செய்யும் அகிகோ இவாசகி கூறினார்.

ஓமிக்ரான் வைரஸின் நீண்ட கால விளைவுகள் தெரியவில்லை

தடுப்பூசிக்குப் பிறகு கொரோனா வைரஸின் முந்தைய மாறுபாடுகளுடன் கூடிய தொற்றுகள், லேசானதொற்றுகள் மற்றும் திருப்புமுனை தொற்றுகள் உட்பட, சில நேரங்களில் நீடித்த, பலவீனப்படுத்தும் நீண்ட கால கோவிட் அறிகுறியை ஏற்படுத்தியது. ஒமிக்ரான் உடன் எந்த அளவு தொற்றுகள் ஏற்படுகின்றன என்பது பற்றிய தரவு எதுவும் நம்மிடம் இல்லை… நீண்ட கால கோவிட் தொற்று அறிகுறி முடிவடைகிறது” என்று இவாசகி கூறினார். “ஒமிக்ரானை லேசான தொற்று என்று குறைத்து மதிப்பிடும் நபர்கள், பல மாதங்கள் அல்லது வருடங்கள் நீடிக்கும் நோயால் பலவீனப்படுத்தும் ஆபத்தில் உள்ளனர்.” என்று கூறுகிறார்.

சுய-பாதிப்பு ஆன்டிபாடிகள், விந்தணு குறைபாடுகள் மற்றும் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற முந்தைய மாறுபாடுகளுடன் காணப்பட்ட அமைதியான விளைவுகளை ஒமிக்ரான் ஏற்படுத்துமா என்பதும் தெளிவாக இல்லை.

மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன

ஒமிக்ரான் சிகிச்சைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவில் மட்டுமே உள்ளன. மருத்துவர்கள் சிகிச்சையை அனைவருக்கும் அளிக்க வேண்டும். கடந்த கோவிட்-19 அலைகளின்போது பயன்படுத்தப்பட்ட மூன்று ஆன்டிபாடி மருந்துகளில் இரண்டு இந்த மாறுபாட்டிற்கு எதிராக பயனில்லாமல் உள்ளன. மூன்றாவது, GlaxoSmithKline வழங்கும் sotrovimab, குறைவாக விநியோகத்தில் உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் Pfizer Inc இன் Paxlovid என்பது புதிய வாய்வழி வைரஸ் தடுப்பு சிகிச்சையாகும். அதனால், ஒருவர் நோய்வாய்ப்பட்டால், சிகிச்சைகள் கிடைக்காமல் போகலாம்.

நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

மருத்துவ சிகிச்சை இல்லாமல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்ட நபர்களில், ஓமிக்ரான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறை பேராசிரியர் டேவிட் ஹோ கூறினார். இருப்பினும், குறைவான தொற்றுகள் நல்லது. “குறிப்பாக இப்போது, மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பி வழியும்போது ஒமிக்ரான் அலையின் உச்சம் இன்னும் வரவில்லை” என்று ஹோ கூறினார்.

தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சாதனை எண்ணிக்கை காரணமாக, மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. மேலும், கடந்த கால தொற்று எழுச்சிகளின் போது, ​​மாரடைப்பு போன்ற பிற அவசரநிலைகளுக்கு, அதிகமாக மருத்துவமனைகளால் சரியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை.

ஓமிக்ரான் என்பது அசல் SARS-COV-2-ன் ஐந்தாவது மிகவும் குறிப்பிடத்தக்க திரிபு ஆகும். மேலும், இந்த வைரஸின் பிறழ்வுத் திறன் மேலும் குறையுமா என்பதைப் பார்க்க வேண்டும். அதிக தொற்று விகிதங்களும் வைரஸை மாற்றுவதற்கான வாய்ப்புகளை அளிக்கின்றன. அதை தவிர வேறு ஒன்றுமில்லை. கொரோனா வைரஸின் புதிய வகை அதன் முந்தைய வைரஸ்களைவிட மிகவும் தீங்கற்றதாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறது.

“SARS-CoV-2 கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு வழிகளில் நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், இந்த வைரஸின் பரிணாமப் பாதையை எங்களிடம் கணிக்க வழி இல்லை” என்று ஹோ கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Omicron Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment