யாராவது ஒருவர் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது அவர்களுடைய துணிகளை துவைப்பது அவசியமா என்றால், உங்களால் முடிந்தால் துணிகளை துவைப்பது எப்போதும் தொற்று ஏற்படாமல் இருக்க உதவியாக இருக்கும். அவ்வாறு செய்யாவிட்டால் தொற்று அபாயத்திற்கான அளவை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
நாவல் கொரோனா வைரஸ் சில நேரங்களில் துணி மீது தப்பி உயிர் வாழ்கிறது. இருப்பினும், அது துணி மீது எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பது குறித்து எந்த ஆராய்ச்சியும் செய்யபடவில்லை. பொதுவாக, வைரஸ்கள் நுண்ணிய துளைகள் இல்லாத மேற்பரப்புகளில் (எஃகு, பிளாஸ்டிக் போன்றவை) நீண்ட நேரம் நீடிக்கும். துணி போன்ற நுண் துளை மேற்பரப்புகளில் குறுகிய நேரமே இருக்கும்.
தொற்று ஏற்பட்ட ஆடைகளின் ஆபத்து என்பது நீங்கள் சென்ற இடத்தைப் பொறுத்தது. கோவிட்-19 நோயாளிகளைக் கையாலும் சுகாதாரப் பணியாளர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். அவர்களின் துணிகளை துவைப்பது உள்ளிட்டவை பற்றி அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் உள்ளன. தொற்று நோய் நிபுணர் டாக்டர் தனு சிங்கால், “துணிகளைக் துவைகும்போது ஒரு டிடர்ஜெண்ட் சோப் வைரஸைக் கொல்லும் என்று கருதப்படுகிறது.” என்று கூறினார்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் பொது மக்கள் குறைந்த அபாயத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இந்தியாவில் பரவலான சமூக பரவல் இன்னும் தொடங்கவில்லை.
எனவே, நீங்கள் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தால் உடைகளை மாற்றவும். அதே நேரத்தில், உங்களுடைய மேலாடைகளை துவைக்காமல் விட்டுவிட்டால், அடுத்த முறை நீங்கள் வெளியேறும்போது அதே ஆடைகளை அணிவது பாதுகாப்பாக இருக்கலாம். இந்த துணிகள் மீது நீங்கள் கழுவப்படாத கைகளை துடைக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு சுகாதாரப் பணியாளராக இருந்தால், துவைக்காத துணிகளை மீண்டும் அணிந்துகொள்வது பாதுகாப்பானது அல்ல.
வெளியில் சென்றுவந்தால் அணிந்திருந்த உடைகள் போன்றவற்றை துவைப்பது அவசியமா என்றால், மளிகை சாமான்களை வாங்க நீங்கள் வெளியே சென்றிருந்தால் மற்றவர்களுடன் சேர்ந்து இருந்திருப்பீர்கள். அதனால், அந்த ஆடைகளை துவைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால், நீங்கள் ஒரு தனி துண்டு பயன்படுத்த வேண்டும். அதிக ஆபத்துள்ள பகுதிகளான மருத்துவமனைகள் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு நீங்கள் அடிக்கடி பயணம் செய்திருந்தால் நீங்கள் தனியாக துணிகளைத் துவைக்க வேண்டும்.
ஒரு நபருக்கு COVID-19 அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அவரது துணிகளை தனித்தனியாக கையுறைகள் அணிந்து துவைக்க வேண்டும் என்று அரசின் வழிகாட்டுதல்கள் அறிவுறுத்துகின்றன. கஸ்தூர்பா மருத்துவமனையில், மும்பையில் உள்ள நோயாளிகளுக்கு நோடல் தனிமைப்படுத்தும் வசதி உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க மருத்துவமனை ஊழியர்கள் வீட்டிற்குச் சென்று வெந்நீரில் குளிக்க வேண்டும். அதே போல அவர்களுடைய ஆடைகளை வெந்நீரில் துவைக்க வேண்டும். மற்ற துணிகளில் இருந்து சலைவைக்கு போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.