இந்தியாவின் உண்மை நண்பராக ஜோ பைடன் இருப்பாரா?

சுதந்திரமான தேர்தல்கள், சமத்துவம், சம நீதி,  கருத்து சுதந்திரம்,  மத சுதந்திரம் போன்ற  ஜனநாயக மாண்புகளால்  பிணைக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 538 பிரதிநிதிகளின் வாக்குகளில் 290 வாக்குகள் பெற்று, ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடன் நாட்டின் அடுத்த அதிபராக இருக்கிறார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்தது.

எனவே, ஜோ பிடனுக்கும் இந்தியாவுக்குமான  நல்லுறவு எப்படி இருக்கும்?

இந்தியர்களாகிய நமக்கு இது முக்கியமான கேள்வியாகும். சில முக்கிய துறைகளில் அவரது நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பதை, அவரது கடந்தகால செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் மூலம்  இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஜோ பிடன், இந்தியாவின் இந்தியாவின் உண்மை நண்பராக இருந்தாரா?

பராக் ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக    வருவதற்கு முன்பே, ஜோ பிடென் இந்தியாவுடன் ஒரு வலுவான உறவை ஆதரித்தார்.

செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும்,  துணை அதிபராகவும் இருந்த காலகட்டங்களில் இந்தியாவிற்கும் அமெரிகாவுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை  ஆழப்படுத்துவதில் ஜோ பிடன் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

உதாரணமாக,” 2020-ல் உலகில் மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இந்தியா- அமெரிக்கா விளங்கும் என்ற கனவை நான் கொண்டுள்ளேன்” என்று 2006-ல் (துணை அதிபராக பொறுப்பேற்பதற்கு 3 ஆண்டுகள் முன்னதாக) ஜோ பிடனின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்கு அப்போதைய அமெரிக்கா செனட்டர் ஒபாமா ஆதரவு கொடுக்க தயங்கிய நிலையில், பிடென் இந்த ஒப்பந்தத்தை முன்னேடுத்தார். அமெரிக்க காங்கிரஸில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து அணுசக்தி ஒப்பந்தத்தை  நிறைவேற்றினார்.

துணை அதிபராக இருந்த காலத்தில் அவரின்  பங்களிப்பு என்ன?

இந்தியா -அமெரிக்க  இடையிலான நட்புறவை  வலுப்படுத்த குரல் கொடுத்தவர்களில் ஜோ பிடனும்  ஒருவர். அந்த நேரத்தில், ஐக்கிய நாடுகள்  பாதுகாப்பு அவையில்  உறுப்பினராக   வேண்டும் என்ற இந்தியா அரசின் நீண்ட நாள் கோரிக்கை ஜோ பிடன் துணை அதிபராக இருந்த காலத்தில்  தான் நிறைவேறியது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஒபாமா-பிடன் நிர்வாகம் தான் மாபெரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடு என்ற அந்தஸ்த்தை இந்தியாவுக்கு வழங்கியது. அமெரிக்க காங்கிரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த அந்தஸ்து,  உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்குவது மற்றும் பரிமாற்றம் செய்வதை எளிதாக்கியது.  அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகளுக்கு  வெளியே உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு  இந்த அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

2016 ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவும் அமெரிக்காவும் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஒப்பந்தத்தில் (LEMOA) கையெழுத்திட்டன. இது ஒவ்வொரு நாட்டின் இராணுவத்தையும் மற்றவர்களின் ராணுவ தளங்களில் பணியாற்ற அனுமதிக்கிறது.


இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் சட்டத்தின் அடிப்படையில் நிலைத்தன்மை ஏற்படும் வகையில்  தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) மற்றும் அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு  (பெக்கா ஒப்பந்தம்) ஆகிய ஒப்ந்தங்கள் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் கையெழுத்தானது.

பயங்கரவாதத்திற்கு எதிரான  நடவடிக்கையில்  ஜோ பிடனின் அணுகுமுறை என்ன?

இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம், தத்தம் நாடுகளிலும், சர்வதேச அளவிலும்  நிலவும் தீவிரவாதம் மற்றும் வன்முறை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை பலப்படுத்த ஒபாமா-பிடன் நிர்வாகம் உறுதி செய்தது.

“தெற்காசியாவில் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் மீது சகிப்புத்தன்மை அற்ற  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்  என்று ஜோ பிடன் தனது தேர்தல் அறிக்கையில் குறிபிட்டார்.

நிர்வாகத்தில் இருந்த போது, பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கல் குறித்து ஜோ பிடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை என்றாலும்,  எல்லை தாண்டிய பயங்கரவாத  பிரச்சனைகளில்  அமெரிக்காவின் பாரம்பரிய மரபுகள் அடிப்படையில்  செயல்படுவார் என்று புது தில்லி நம்புகிறது.

சீனாவுடனான நட்புறவு எப்படி இருக்கும்?  

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஆக்கிரோஷமான நடத்தை பற்றிய  உணர்தல்  வாஷிங்டனில் காணப்படுகிறது. வளர்ந்து வரும் சீனா போட்டியாளராகவும் அச்சுறுத்தலாகவும் இருப்பதை இருக்கட்சி பிரதிநிதிகளும் ஒருமித்த கருத்தாய் ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்தியா – சீனா எல்லை மோதல்களில் டிரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கு  ஆதாரவாக குரல் கொடுத்த நிலையில், ஜோ பைடன் நிர்வாகத்திடமிருந்தும் புது டெல்லி இதேபோன்ற அணுகுமுறையை எதிர்பார்க்கும்.

” இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் சட்டத்தின் அடிப்படையில் நிலைத்தன்மை ஏற்படும் வகையில் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் . இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை ஏற்பட்டால் சீனா உள்ளிட்ட எந்த நாடுகளும்  மற்றவர்களை அச்சுறுத்த முடியாது” என்று அவரது பிரச்சார  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .

வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ உள்ளிட்ட டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மீது வெளிப்படையாகத் தாக்குதல் தொடுத்த நிலையில்,  பைடன்  நிர்வாகத்தின் மொழி சற்று இலகுவாக இருக்கும் .

எச் 1 பி விசாக்கள் பற்றி ?

எச் 1 பி விசா நடைமுறையில், டிரம்ப் நிர்வாகம் எடுத்த சில அதிரடி முடிவுகள் இந்தியர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.

ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தாராளமயமான குடியேற்றத்தை மதிப்பதால், அமெரிக்காவிற்குச் சென்று படிப்பதற்கும், வேலை செய்வதற்கும், அங்கு வாழ்வதற்கும், சிறந்த வாழ்க்கைக்காக ஆசைப்படுபவர்களுக்கும் பைடன் ஏதுவாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப அடிப்படையிலான குடியேற்றத்தை ஆதரிப்பதாகவும், நிரந்தர, வேலை அடிப்படையிலான குடியேற்றத்திற்காக வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும், உயர் திறன், சிறப்பு வேலைகளுக்கான தற்காலிக விசா முறையை சீர்திருத்துவதாகவும், வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு வரம்புகளை நீக்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான இயல்பான நடைமுறையை மீட்டெடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆனால், டிரம்ப் நிர்வாகம் விதிகளை கடுமையாக்கியபோது கடந்த 4 ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட சில அணுகுமுறைகளை பைடன் மாற்றியமைப்பது மிகவும் எளிதானது அல்ல.

மனித உரிமைகள் தொடர்பான அணுகுமுறை?

ஹாரிஸும் மனித உரிமைகளை கடுமையாக ஆதரிப்பவர் – இது புது டெல்லியில் ஒருவித புழுக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. புதுடெல்லி ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவைப் பெற்றது.

370 வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டதும் குடியுரிமை (திருத்தம்) சட்டம் இயற்றப்பட்டதும், என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டதும் சில அமெரிக்க பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள், அங்கே உரிமை நிலைமை குறித்து எச்சரிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால், டிரம்ப் நிர்வாகம் சில செயலற்ற அறிக்கைகளைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆனால், ஜனநாயகக் கட்சியினர் ஆட்சியில் இருப்பதால், இந்த விவகாரங்களில் பைடன் நிர்வாகத்திடமிருந்து சில கடுமையான அறிக்கைகளை இந்திய அரசு எதிர்பார்க்கலாம்.

அசாமில் நடை முறைபடுத்தப்படும்  தேசிய குடிமக்கள் பதிவேடு, அதன் பின் நிறைவேற்றப்பட்ட  குடியுரிமை (திருத்த) சட்டம்  போன்ற இந்திய அரசின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாக பைடன் பிரச்சார ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது.

“ உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடுகளாந அமெரிக்காவும் இந்தியாவும் : சுதந்திரமான தேர்தல்கள், சமத்துவம், சம நீதி,  கருத்து சுதந்திரம்,  மத சுதந்திரம் போன்ற  ஜனநாயக மாண்புகளால்  பிணைக்கப்பட்டுள்ளன. இந்த முக்கிய கோட்பாடுகள் நம் ஒவ்வொரு நாடுகளின் வரலாறுகளிலும் நீடித்திருக்கின்றன, நமது எதிர்காலத்தில் வலிமையின் ஆதாரமாகவும் இது இருக்கும் ”என்று பைடனின் பிரச்சார ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக ?  

பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா,  டொனால்ட் டிரம்ப் போன்ற பல அமெரிக்க அதிபர்கள், இந்திய அரசின் சில நடவடிக்கைகள் மீது வேறுபாடுகளை வெளிபடுத்திருந்தாலும், இரு தரப்பினரிடையே நிலவிவரும் உறவுகள் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற பொதுவான கருத்து அனைவரிடத்திலும் காணப்படுகிறது.

எனவே, சுருங்க சொல்ல வேண்டுமெனில், பைடன்  பழம்பெருமை மிக்க நட்பு பாரம்பரியத்தைத் தொடர மாட்டார் என்று  குறிப்பிடுவதற்கு எந்த  ஆதாரமும் இல்லை. ஆனால் நிச்சயமாக, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில்  தனக்கென ஒரு  செயல்  பாணியைக் கொண்டிருப்பார்,  இந்தியாவுடனான நட்புறவில் தனிப்பட்ட முத்திரையை  பதிப்பார் என்றே நம்பப்படுகிறது.

 

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Will joe biden be good for india h1b visas for skilled professionals

Next Story
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: தினசரி பாதிப்பில் புதிய உச்சம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com